Thursday, August 13, 2020

ஆவி பிடியுங்கள் கொரானவை (COVID-19) விரட்டுங்கள் ..

 ஆவி பிடியுங்கள் கொரானவை (COVID-19) விரட்டுங்கள் ...

 


 

தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சார்ஸ் COV-2 வைரஸும்அதனால் உருவாகும் கோவிட்-19 (COVID-19) நோயும்,  பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளையும்கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சார்ஸ் COV-2  வைரஸ் குறைந்த வெப்பநிலையிலும்உறை வெப்பநிலையிலும் பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் வாழக்கூடியது. ஆனால் இந்த வைரஸ்கள் அதிக வெப்ப நிலைக்கு செல்லும் போது (ஐம்பத்து ஆறு டிகிரி செல்சியஸ்) சில வினாடிகளிலேயே முற்றிலுமாக அழிந்து விடுகிறது. ஏனெனில்வெப்பம் இவ்வைரஸை   சுற்றியுள்ள  புரதஉரை உடைந்து  அவ்வைரஸை அழித்து  விடுகிறது. 

 

இந்த வைரஸ் நமது உடலில் குளிர்ந்த பகுதியான நாசித் துளைகள் மற்றும் சைனஸ் குழிகளிலும் அதிக நேரம் (நான்கு நாட்கள்) வாழ்ந்து பெருக்கம் அடைகிறது. இந்த சைனஸ் குழிகள் கண்களுக்கு கீழாகவும் மூக்கிற்கு  பக்கவாட்டிலும் இருக்கின்றன. குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் போது சைனஸ் குழியின் வெப்பநிலை குறையும். அதுபோல வெளியிலிருந்து வெப்ப காற்றை உள்ளே இழுக்கும்போது சைனஸ் குழியின் வெப்பநிலை அதிகரிக்கும். இது அங்குள்ள வைரஸ்களுக்கு  எதிரான சூழலாக அமைந்து சைனஸ் குழியிலிருக்கும் அனைத்து வைரஸ்களும்  இறந்து விடுகின்றன. இதுபோலவே மற்ற மேல் சுவாச குழாய் சம்மந்தமான  நோய்களை உருவாக்கும் வைரஸ்கள் அனைத்தும் வெப்ப காற்றை சுவாசிக்கும் போது அழிந்துவிடும். உதாரணமாக எப்பொழுதும் ஏற்படும் சாதாரண சளியை உண்டாக்கும் வைரஸ்கள்.

 

விஞ்ஞானிகள் பலர் சார்ஸ் COV-2  வைரஸ்களை ஐம்பத்து ஆறு டிகிரி செல்சியஸ் உட்படுத்தும் போது பதினைந்து  நிமிடத்தில் முற்றிலுமாக அழித்து விடலாம் என்பதை பல ஆராய்ச்சியின் மூலமாக நிறுபித்துள்ளனர். ஆய்வகத்தில் செய்தது போன்று நோயாளிகளில் சார்ஸ் COV-2  வைரஸ்களை ஐம்பத்து ஆறு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு உட்படுத்தும் பொழுது அவற்றின் புரதஉரைகள் உடைந்து வைரஸ்கள் உருக்குலைந்து ஒரு நொடிப்பொழுதில் முற்றிலுமாக அழித்து விடுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் அந்நோயாளின் உடலில் புதிதாகவும் வைரஸ்கள் காலப்போக்கில் பெருகுவதில்லை என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  எனவே நோயாளியின் உடல் வெப்பநிலையை அதிகப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

ஆனால் அதற்கு மாற்றாக மேலே கூறியதுபோல் வெப்ப காற்றை சுவாசிப்பதற்கு நோயாளியை உட்படுத்தலாமே என்ற சிந்தனையும் எழுகிறது. 

 

இதன் அடிப்படையில்  டாக்டர் டான்லி டும்கி வெப்பக்காற்றை சுவாசிக்க  செய்ய  ஒரு எளிமையானசிகிச்சை முறையை விவரித்துள்ளார். இதன்படி நோயாளியை வெப்பக்காற்றை சுவாசிக்க செய்யும் பொழுது வைரஸ்கள் அனைத்தும் அழிந்து விடுவதோடு புது தொற்றும் ஏற்படுவதில்லை. நமது உடலில் குளிர்ந்த பகுதிகளான சைனஸ் குழிகளும்சுவாசக்குழலும் வெப்பமடைவதோடு வைரஸ்களும் அழிந்து விடுகின்றன.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு முடி உலர்ப்பான் (Hair drier) பயன்படுத்துகிறார். முடி உலர்ப்பானில் மிதமானை வெப்பக்காற்றை வெளியிட செய்துகாற்றை சைனஸ் குழியிலும் மூக்கிலும் படுமாறு வைக்க வேண்டும். இதற்கு முன் முகத்தில் லேசாக சாதாரண நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.

 

இதே போன்று தொடர்ந்து ஐந்து நிமிடம் நோயாளி வெப்பக்காற்றை சுவாசிக்குமாறு செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நோயாளியின் நோய் தன்மையை பொருத்து செய்யலாம். ஆரம்ப நிலையாக இருந்தால் ஒரு நாளைக்கு ஐந்து முறை செய்யலாமென்று Dr. டான்லி கூறுகிறார்.

 

இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை அறியும் பொழுது எங்கள் மனதில் நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆவிபிடித்தல் நினைவுக்கு வருகிறது.

ஆவி பிடித்தல் சார்ஸ் COV-2   நோய் தொற்று உடையவர்களும்இந்நோய் தொற்றுக்கான அறிகுறி உடையவர்களும் பயன்படுத்தலாம் என்பது எங்களது கருத்து.

 

மேலும் ஆவி பிடிக்கும் நீரில் கிருமிநாசினியான வேப்பிலைதுளசி இலைஓமவல்லி இலைகளையும் சேர்த்து ஆவி பிடித்தால் நல்ல பயனளிக்கும். இவ்வாறு ஆவி பிடிப்பதன் மூலம் COVID-19 நோயை குணப்படுத்தவும்நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கவும் முடியும். நோய்த்தொற்று இல்லாதவர்களும் இம்முறையை ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தி இந்நோய் வருமுன் காத்துக் கொள்ளலாம். மேலும் ஆவி பிடித்தல் எளிமையானதுபக்கவிளைவற்றது. எனவே நாம் அனைவரும் தினந்தோறும் சுயசுத்ததை மேற்கொள்வதோடு ஆவி பிடித்தலையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

நன்றி: முனைவர் சரவணன்விலங்கியல் பேராசிரியர்நேரு நினைவு கல்லூரி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டி.

1 comment:

  1. அருமையான பதிவு ஐயாகளுக்கு வாழ்த்துக்கள். நான் அனைவருக்கும் அனுப்புகிறேன் நன்றி.

    ReplyDelete

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...