Showing posts with label College. Show all posts
Showing posts with label College. Show all posts

Friday, February 21, 2025

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்.

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்.



புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில்
 பயிலும்  161 மாணவர்கள், இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வின் எதிர்காலம் -START பற்றிய  ஒருமாதம் இணைய வழியில் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார்கள். இந்த பயிற்சி மேற்கொண்ட மாணவர்களை கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி,  ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் பாராட்டினர். இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P.ரமேஷ் அவர்கள் வழி காட்டி ஒருங்கிணைத்தார்.

இந்திய விண்வெளி அறிவியல் ஆய்வு: கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டம், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்: பாரதிய அந்தரிஷ் நிலையம் (BAS),  சந்திர ஆய்வு அறிவியலுக்கு இந்தியாவின் பங்களிப்புகள், நுண் ஈர்ப்பு விசை மற்றும் வாழ்க்கை அமைப்புகளின் உயிரியல்: மனித விண்வெளி ஆய்வுக்கான சவால்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான புதிய வாய்ப்புகள், சந்திர மேற்பரப்பில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு அறிவியல் வாய்ப்புகள், சூரியன்-பூமி இணைப்பைப் பற்றிய சிறந்த புரிதலை நோக்கி: அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கான வழிகள், விண்வெளி சார்ந்த வானியல் மற்றும் வானியற்பியலில் எதிர்கால திசைகள், சூரிய குடும்ப ஆய்வுக்கான எதிர்காலத்தை கற்பனை செய்தல், சூரிய இயற்பியல் மற்றும் விண்வெளி வானிலைக்கான இந்தியாவின் முயற்சி, விண்வெளி சார்ந்த அண்டவியல்: எதிர்கால ஆய்வுக்கான சிந்தனைகள், வானியற்பியல் ஆராய்ச்சியில் எதிர்கால திசைகள், வெளிக்கோள்களைத் தேடி, இந்தியாவில் தரைவழி ஆய்வகங்கள், விண்வெளி அடிப்படையிலான ஆய்வில் சாதகமான புள்ளிகளாக லாக்ரேஞ்ச் புள்ளிகள்: எதிர்கால வாய்ப்புகள், சூரிய செயல்பாட்டைப் புரிந்துகொள்வது மற்றும் கணிப்பது: சூரியனின் துருவங்கள், எதிர்கால விண்வெளி ஆய்வுக்காக ஏவுதள வாகனங்களை அனுப்புதல், எதிர்கால விண்வெளி ஆய்வுக்கான மேம்பட்ட உந்துவிசை அமைப்பு, விண்வெளியில் நறுக்குதல்: தொழில்நுட்பங்கள், சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள், எதிர்கால கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்கான தொடர்பு மற்றும் வழிசெலுத்தல், சூரிய குடும்ப ஆய்வுக்கான அறிவியல் பேலோடுகள் மற்றும் நுட்பங்கள், சந்திரனில் கட்டிட கட்டமைப்புகள்: சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள், எதிர்கால விண்வெளி அறிவியல் ஆய்வுக்கான செயல்படுத்தும் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள், கோள் மாதிரிகளின் காப்பகம் மற்றும் பகுப்பாய்வில் உள்ள சவால்கள், அறிவியல் ஆய்வில் கோள் பாதுகாப்பு: எதிர்காலத்திற்கு புதிய விதிகள் போன்ற தலைப்புகளில் இந்த இணைய வகுப்பு நடைபெற்றது.



இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்! 😍🔥👌 https://angusam.com/receive-isro-certificates-161-students/


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Tuesday, December 17, 2024

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள். 


நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் 13/12/2024ல் சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள கோளரங்கத்தில் சூரிய குடும்பம், கோள்கள், வானம் மற்றும் பருவங்கள், கிரகணம், நிலா, வால் நட்சத்திரம், வால்மீன்கள், விண்மீன் சுழற்சிகள் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள கேலக்ஸி போன்றவை உருவான விதம் ஆகியவற்றை நவீன இரவு வான் அமைப்பு மூலம் மாணவர்கள் எளிமையாக புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (NOAA) உருவாக்கப்பட்ட “Science on a Sphere” (SOS) என்ற புதிய வசதி பூமியை விவசாயம், காடு, கடல் வெப்பநிலை மற்றும் காலநிலை என பல்வேறு கண்ணோட்டங்களில் எளிமையாக புரிந்து கொண்டனர்.


அணுக்கரு உலை மாதிரிகள், அணுக்கரு வினை விளக்கப்படங்கள், இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எரிசக்தி, வாழ்க்கை அறிவியல், கண்டுபிடிப்புகள், போக்குவரத்து, ஏவுகணைகள், போர் வாகனங்கள், பல்வேறு உயிரினங்கள் இதய மாதிரிகள், சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை, பிருத்வி, குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை, அக்னி, நடுத்தர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மின்னணு உபகரணங்கள், மின்னணு ரேடார்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் உயிர் ஆதரவு சாதனங்கள், தொலைக்காட்சி மற்றும் புகைப்பட கருவிகள் வளர்ச்சி படிநிலைகள், டிஆர்டிஓ வடிவமைத்த இந்திய வீரர்கள் உறைபனி வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட பிரத்யேக ஆடைகளின் மாதிரியும், விண்வெளி மற்றும் ராணுவ வீரர்களின் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பல்வேறு கண்காட்சிகள் மூலம் அறிவியலை எளிமையாக புரிந்து கொண்டனர்.



இஸ்ரோ கண்காட்சிகள் மூலம் பல்வேறு வகையான ராக்கெட்கள் செயற்கைகோள்கள், வினாடிவினா, விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஏவுதளங்களின் மாதிரிகள் மூலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு பற்றி எளிமையாக புரிந்து கொண்டனர். மேலும் அறிவியல் பூங்காவில் நெம்புகோல்கள் தத்துவம், ஒத்திசைவு அதிர்வெண், மையவிலக்குவிசை, கோள்களின் நீள்வட்ட சுற்றுப்பாதை, விசை, ஒலியின் வேகம் மற்றும் எதிரொலிப்பு, ஒளியின் பண்முக எதிரொளிப்பு, ஆகியவற்றை செயல்முறை மூலம் செய்து கற்றுக்கொண்டனர்.   

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் 14/12/2024ல் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வகத்தை பார்வையிட்டனர். சுற்றுச்சூழல் மைய தலைவர் முனைவர் சண்முகம் அவர்கள் கழிவுகள் மூலம் மீத்தேன் தயாரிக்கும் முறைகள் பற்றி விளக்கினார்.  தனது ஆய்வகத்தில் பல்வேறு விதமான மீத்தேன் தயாரிக்கும் முறைகளும், சேகரிக்கும் முறைகளும் மற்றும் வர்த்தக ரீதியாக பல்வேறு இடங்களில் அமைத்த தயாரிப்பு மற்றும் பயிற்சி முறைகள்  பற்றியும் செயல்முறை விளக்கம் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.


நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் 14/12/2024ல் சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற மின்னனுவியல் கண்காட்சியில் (EFY)  கலந்துகொண்டு பார்வையிட்டனர். இது தற்போதைய தலைமுறை தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. பல்வேறு வகையான மல்டிமீட்டர், CRO, AFO, தானியங்கி PCB அசெம்பிளிங் யூனிட் சிஸ்டம் மற்றும் கரைசல் கருவி ஆகியவை கூறுகள் மற்றும் அமைப்பைக் கண்டறிய உதவும் சிறப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு, 3D ரெசின் பிரிண்டர் மற்றும் மெட்டல் பிரிண்டர், நுண்ணோக்கி அடிப்படையிலான PCB பழுதுபார்க்கும் அலகு கிட், 100x ஜூம் ஆப்டிகல் லென்ஸ் வரை ஷார்ட் சர்க்யூட் போர்டைப் பழுதுபார்க்கும் கருவி, ரிப்பன் அடிப்படையிலான PCB மற்றும் 12 அடுக்கு மேம்பட்ட PCB போன்ற பல்வேறு மின்னணு கருவிகள் பற்றிய விளக்கங்களை அறிந்து கொண்டனர். 

3D ரெசின் பிரிண்டரில் பல காட்சிகளை வழங்கக்கூடிய இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் சுயமாக ஒரு 3D மாதிரியை உருவாக்க முடியும். செயல்முறைக்கு ஒரு குறிப்பிட்ட மென்பொருள் உள்ளது. 3D மாதிரியையும் ஏற்றுமதி செய்யலாம். இது பழுதுகளைப் பார்க்கவும் பயன்படுகிறது. தற்போதைய தலைமுறை தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளைக் கற்றுக்கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் இது மிகவும் பயனுள்ளதாகவும் உதவிகரமாகவும் இருக்கிறது. சில புதிய நிறுவங்கள் மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கியது. இது மாணவர்களுக்கு புதிய மற்றும் மதிப்புமிக்க அனுபவமாகும். இயற்பியல் துறை  பேராசிரியர் பொ.ரமேஷ், ஏற்பாடுகளை செய்து இருந்தார்.




சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் 👌😍🥺 https://angusam.com/nehru-memorial-college-students/










கோளரங்கம் | Birla Planetarium | ஓர் பயணம் -பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் | சென்னை | KalviTv



வான்வெளியை கண்முன்னே காட்சிப்படுத்தும் கோளரங்கம்.





இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Saturday, July 20, 2024

சர்வதேச நிலா தினத்தை முன்னிட்டு பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.

சர்வதேச நிலா தினத்தை முன்னிட்டு பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.



சந்திரனில் மனிதன் முதன்முதலில் இறங்கியதை நினைவுகூரும் வகையில் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது. ஜூலை 20, 1969 அன்று, அப்பல்லோ 11 சந்திரனுக்கு முதல் மனிதர்களை ஏற்றிச் சென்றது. இந்த நாளில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் இரண்டரை மணி நேரம் செலவிட்டார். நிலவில் மனிதனை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற மைல்கல்லையும் இந்த நாள் குறிக்கிறது. 1971 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன், மனிதன் முதன்முதலில் நிலவில் இறங்கியதன் நினைவாக ஜூலை 20 ஆம் தேதியை தேசிய நிலவில் இறங்கும் தினமாக அறிவித்தார்.





19.7.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி புதிய வளாகத்தில், திருச்சி- புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் இரமேஷ் மற்றும் குழுவினர்  Celestron 6SE 6" Advanced வானியல் தொலைநோக்கி மூலம் நிலவைக் காணும் நிகழ்வு நடத்தப்பட்டது. பெண்ணாடம் பகுதியைச் சார்ந்த பல பள்ளிகளில் இருந்து மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். பேராசிரியர் இரமேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடி, நன்கு வினாக்கள் கேட்ட மாணவர்களுக்கு விண்ணியல் தொடர்பான விளக்க அட்டைகள் கொடுத்து ஊக்கப்படுத்தினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம்  வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில்  நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.







இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் சூரிய வடிகட்டி வழியாக சூரியனின் கரும்புள்ளிகள் மற்றும் அழகிய நிலா ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. முதுநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் சந்தோஷ்குமார், அனந்தராமன், இளநிலை இரண்டாம் ஆண்டு  இயற்பியல் அருட்செல்வன்  மூன்றாம் ஆண்டு இளநிலை வேதியல் ஸ்ரீதர்  மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர். இந்த விழாவில் 2000க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும்  பொதுமக்கள்  பங்கு பெற்றனர். நேரு நினைவுக் கல்லூரி, பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிலா திருவிழாவை நடத்தியது.மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருந்தது. 






நேரு நினைவுக்கல்லூரி கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாடம் தலைமை ஆசிரியர் திரு.ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழக செயற்குழு உறுப்பினர் திரு. எழிலன் வழிகாட்டுதல் உடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஒருங்கிணைத்தார்.




துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு. துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம...