Saturday, August 29, 2026

த. பாதர்பேட்டை பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.

த. பாதர்பேட்டை  பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.

 

இன்று (29.08.2026)உப்பிலியபுரம் ஒன்றியம்,ஊ. ஒ. ந. நி. பள்ளி, த. பாதர்பேட்டை  பள்ளியில் காலை 10 :00 மணி அளவில்  பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.


முதல் நிகழ்வாக பள்ளி தலைமையாசிரியர் அசோக்குமார் அவர்கள் இக்கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அனைத்து பெற்றோர்களையும் வரவேற்று பேசினார். உறுப்பினர்களின் கடமை மற்றும் நோக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்து, தலைவர், துணைத்தலைவர்மற்றும் உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்து குறித்து விளக்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

அடுத்த நிகழ்வாக 2024-2026-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி. சுகன்யா,துணைத் தலைவர் திருமதி. பாப்பாத்தி மற்றும் உறுப்பினர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உடன் தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக ஆனந்தம் ஆசிரியர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Sunday, August 23, 2026

நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய விண்வெளி தினம்.

நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய  விண்வெளி தினம்.



நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் புவுன்டேஷன் மாணவர்கள் பயிற்சி மையத்தில் தேசிய  விண்வெளி தின கருத்தரங்கம் 23.08.26ல் நடைபெற்றது. தொடக்கத்தில் நாமக்கல் அஸ்ட்ரோ கிளப் தலைவர் முனைவர் ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார். அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முனைவர் சக்தி பிரியா மற்றும் திரு  விஜய் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். 


இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். 


 இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள செல்போன் டவர், மரம் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக கண்டு மகிழ்ந்தனர்.

 

Tuesday, August 11, 2026

😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026

 😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026.

2026 Celestial Events and European Travel Safety Guide On August 12, 2026, a rare combination of three major astronomical events will occur, featuring a total solar eclipse, the peak of the Perseid meteor shower, and a six-planet alignment. The solar eclipse will follow a path through Greenland, Iceland, and Spain, offering the longest duration of darkness in western Iceland and unique sunset views in the Mediterranean. Observers can also witness a "planet parade" of Jupiter, Mercury, Mars, Uranus, Saturn, and Neptune before dawn, though some planets will require binoculars or telescopes to see. Travelers are cautioned to prepare for heavy traffic, potential wildfires in southern Europe, and the unpredictable maritime weather of the North Atlantic. Safety is a primary focus across these reports, emphasizing the necessity of certified eclipse glasses to prevent permanent eye damage and urging motorists to avoid distractions while driving. Despite various doomsday theories appearing online, scientists confirm these events are a harmless, remarkable cosmic coincidence.


Sunday, August 9, 2026

முசிறி புத்தக கண்காட்சியில் விண்வெளி விழிப்புணர்வு

முசிறி புத்தக கண்காட்சியில் விண்வெளி விழிப்புணர்வு




மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த நோக்கில் முசிறி கிளை நூலகம் மற்றும் காலம் அமைப்பு இணைந்து ஒரு வாரம் புத்தக கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.  இதில் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் இணைந்து வானவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவிகள் நிலவின் மாதிரி, கோளரங்க காட்சி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.





துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரன் கலந்து கொண்டு ஒரிகாமி மூலம் பல்வேறு வித்தியாசமான தொப்பி செய்வது, பறவை போன்ற பல்வேறு மாதிரிகலை செய்து காண்பிதார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள் , ஹைராஸ்கோப், குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டது.





சூரிய வடிகட்டி மூலம் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது  மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

த. பாதர்பேட்டை பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.

த. பாதர்பேட்டை  பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.   இன்று (29.08.2026)உப்பிலியபுரம் ஒன்றியம்,ஊ. ஒ. ந. நி. பள்ளி, த. பாதர்பேட்...