Friday, December 3, 2021

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஓர் வாய்ப்பு.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு  ஓர் வாய்ப்பு. 

தமிழகத்தில் 2014 முதல் 2020ம் ஆண்டு வரை வேலை வாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியமாகும். தற்போது ஆன்லைன் மூலம் புதுப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வேலை அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே புதுப்பிக்கலாம். மேலும் கல்வித்தகுதிகளையும் பதிவு செய்யலாம். தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பை பதிவு செய்தும் அதனை தொடர்ந்து புதுபித்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு கால அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்தது. அதனால் கடந்த 2014 – 2020ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு 3 மாதம் கால அவகாசம் வழங்கியது. இதனை பயன்படுத்தி ஏராளமானோர் வேலைவாய்ப்பை புதுப்பித்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து தற்போது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கூடுதல் சலுகையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 2014, 2015, 2016 மற்றும் 2017, 2018, 2019, 2021 ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் அடுத்த 3 மாதத்திற்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Login ID: Your Registration Number

Password: Your Date of Birth (or) Your Registered Password

               [dd/mm/yyyy]





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...