Thursday, December 31, 2020

தமிழகம், புதுச்சேரியில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகம், புதுச்சேரியில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், ஈரப்பதம் மிகுந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதன் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

தற்போது ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வீசி வருகிறது. இந்த காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக 31-ம் தேதி (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஜனவரி 1-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட் டங்கள், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

2-ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித மான மழையும், இதர மாவட்டங் களில் வறண்ட வானிலையும் நிலவும். 3-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் வறண்ட வானிலை யும் நிலவக்கூடும். சென்னை மற் றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

30-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யம், திருப்பூண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங் களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

5% அதிக மழை

டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதி களில் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத் தில் தமிழகத்துக்கு வழக்கமாக 45 செ.மீ. மழை கிடைக்க வேண்டும். இந்த ஆண்டு இதுவரை 47 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக் கத்தைவிட 5 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

Source by : Hindutamil

Today (December 31, 1984) is the memorial day of K.R. Ramanathan, the recipient of the Padma Vibhushan, the first Director of the Physics Research Laboratory, Ahmedabad.

Today (December 31, 1984) is the memorial day of K.R. Ramanathan, the recipient of the Padma Vibhushan, the first Director of the Physics Research Laboratory, Ahmedabad.

 

Kalpathi Ramakrishna Ramanathan was born on 28 February 28, 1893, in Kalpathy, Palakkad district of Kerala. Ramanathan graduated from Government Victoria College, Palakkad. MA Graduate BA from Chennai Provincial College Graduated. He later obtained his MA in Physics from Madras Provincial College (University of Chennai). He worked for KRRL in Trivandrum for seven years. This experience helped him write a tropical research paper on thunder.

 

Then in 1921, Ramanathan moved to Kolkata. He holds a PhD in X-ray Degradation in Fluids under the supervision of CV Raman. The D.Sc. He was a graduate of the University of Madras for the first time. He was the first Director of the Physical Research Laboratory, Ahmedabad. In 1922 Raman joined Raman as an assistant professor of physics at the university. In 1925 he was appointed a Senior Scientist in the Meteorological Department of India. He remained there until his retirement in 1948. In the same year, he joined the Physical Research Laboratory (PRL), Ahmedabad as its first director. He also established the Dobson Ozone Spectrum Photographic Scale in India.

 

Ramanathan retired in 1966. From 1984 until his death at the age of 91, he worked at the Physics Laboratory, Ahmedabad. In 1934, the Indian National Science Foundation awarded the World Meteorological Organization Award for Astronomy. He was awarded the Padma Bhushan Award (1965), the Padma Vibhushan Award (1976) and the Aryabhata Medal in 1977 by the National Science Foundation of India. KR. Ramanathan, the first Director of the Physics Research Laboratory, Ahmedabad, passed away on December 31, 1984, at the age of 91.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.


Get information like this
https://t.me/joinchat/jpqj3jQLN51kYTk9
Join Telegram  Group.
https://chat.whatsapp.com/HHC5m0Jz3Ue1E8ilgta0YT
Join WhatsApp  Group
Thanks.

அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய, பத்ம விபூசண் பெற்ற கே.ஆர்.ராமநாதன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1984).

அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய, பத்ம விபூசண் பெற்ற கே.ஆர்.ராமநாதன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1984).

கல்பதி இராமகிருஷ்ணா இராமநாதன் (Kalpathi Ramakrishna Ramanathan) 28 பிப்ரவரி 28, 1893ல் கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் கல்பதியில் பிறந்தார். ராமநாதன் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை மாகாணக் கல்லூரியில் எம்.ஏ பட்டதாரி பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் மெட்ராஸ் மாகாணக் கல்லூரியில் (சென்னை பல்கலைக்கழகத்தில்) எம்.ஏ பட்டம் இயற்பியலில் பெற்றார். ஏழு ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் கே.ஆர்.ஆர்.ஆர்ல் வேலை செய்தார். இந்த அனுபவம் அவரை இடியுடன் கூடிய வெப்ப மண்டல ஆராய்ச்சி கட்டுரை எழுத உதவியது. 

பின்னர் 1921 ஆம் ஆண்டில், ராமநாதன் கொல்கத்தாவுக்குச் சென்றார். சி.வி.ராமன் மேற்பார்வையில்  திரவங்களில் எக்ஸ்-ரே சிதைவு பற்றிய ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார். இந்த வேலைக்கு டி.எஸ்.சி. மெட்ராஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்றவர் முதல்முறையாக பெற்றார். அகமதாபாத், பௌதீக ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் முதல் பணிப்பாளர் ஆவார். 1922ல் ராமான் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் உதவி பேராசிரியராக ராமானுடன் சேர்ந்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவின் வளிமண்டலவியல் திணைக்களத்தில் ஒரு மூத்த விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அவர் அங்கேயே இருந்தார். அதே ஆண்டில் அவர் தனது முதல் இயக்குனராக அகமதாபாத், பௌதீக ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் (PRL) சேர்ந்தார். அவர் இந்தியாவில் டாப்சன் ஓசோன் நிறமாலை ஒளிப்பட அளவையும் நிறுவினார். 

இராமநாதன் 1966 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 1984 ஆம் ஆண்டு முதல் 91 வயதில் மறையும் வரை அகமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பணியாளராக பணி புரிந்தார். 1934ல் இந்திய தேசிய அறிவியல் கழகம், வானியல் அமைப்புக்கான உலகளாவிய வானிலை அமைப்பு விருது வழங்கியது. பத்ம பூசண் விருது (1965), பத்ம விபூசண் விருது (1976), இந்திய தேசிய அறிவியல் கழகம் 1977 ஆம் ஆண்டு வழங்கிய ஆர்யபட்டா பதக்கமும் வழங்கப்பட்டன. அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய கே.ஆர்.ராமநாதன் டிசம்பர் 31, 1984ல் தனது 91வது இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


Today (December 31, 1691) is Memorial Day to Robert William Boyle, the world's first modern chemist, famous for Boyle's law.

Today (December 31, 1691) is Memorial Day to Robert William Boyle, the world's first modern chemist, famous for Boyle's law.

 

Robert William Boyle was born on January 25, 1627, in Ilyismore, Waterford, Ireland, the fourth child of Richard Boyle and Catherine Benton. Richard Boyle came to Ireland from England in 1588 after being appointed deputy manager of the Tudor estates in Ireland. Robert William Boyle was born at a time when Richard Boyle was a landowner. He was raised in an Irish family background like his older brothers when he was a child. Boyle learned Latin, Greek and French through private school. He lost his mother when he was eight.

 

Boyle's father's friend, Sir Henry Wotton, was sent there because he was a teacher at Eaton College in England. During this time his father hired Robert Carey, a private instructor, to teach Robert William Boyle the Irish language. However, he was not interested in the Irish language. After spending three years in Eaton he went abroad with a French instructor. In 1641 they visited Italy. Galileo Galilei, who lived in those days, stayed in the province of Florence in the winter to learn about the contradictions of the big stars.

 Boyles Law Drawing - Drone Fest

Boyle is an alchemist. Believing that there was an opportunity to change more metals he experimented in an attempt to achieve it. And French scientists came up with a piston (like the needle we put in). When the piston was pressed to one side, it was pressurized by the gas inside and the piston tried to return to its old position. But could not do so. So French scientists set out to prove that the gas pressure is not equal. Boyle alone said the test was not correct. He said the pressure on the gas would remain the same, except that the piston could not be put back into the same position by the gas because it was too hard. He also challenged that he would make such a piston in a few days and prove his point.

 Basic Gas Laws compiled and explained with the help of GIFs - Docsity

Two weeks later he picked up an English ‘U’ shaped tube. One side of it was three feet taller than the other. The taller part was thinner and the lower part was thicker and the upper part of the thicker part was stuffed. Boyle poured mercury through one of these tubes. Mercury was poured into both tubes until slightly elevated. Thus a certain amount of air is trapped in the blocked area. The piston is a technique for trapping air. Boyle said it was a piston now that the air was trapped here as well. On the mat, where the mercury was now, he again poured some mercury from this side.

 UNPh20

Now the air in that area was compressed and the mercury rose to a little more height. Boyle, now marking the location of the mercury, again expelled the mercury through a valve at the bottom of the tube. Now again the mercury came back to the old place and stopped. Boyle thus proved that the air pressure was equal. He also found that the capacity of the air changes negatively according to its weight. That is, if you lift three parts of the weight, one-third of the space is filled with air. Many scientific advances have been made through this rule.

 The Ideal Gas Law

Boyle is considered the world's first modern chemist. Who laid the foundation for modern chemistry. One of the pioneers of the modern experimental scientific method. He became famous for Boyle's law that when the temperature of a gas in a closed system does not change, its relationship between pressure and volume is inversely proportional. Boyle's law describes how gases behave when subjected to pressure on a volume. At this constant temperature, the pressure of a given mass of gas and its volume are inversely proportional. It was discovered in 1662 by a scientist named Robert Boyle. Mathematically,

  P ∞ 1 / V, (at constant temperature) or

  PV = k, (a constant)

The pressure is P1 when the temperature is T and the volume of the gas is V1. According to this rule if the gun volume of the gas at the same temperature is V2 and its pressure is P2

  Let P1V1 = P2v2 = constant.

 

The Skeptical Chemist is considered a textbook in the field of chemistry. Boyle, one of the founders of the Royal Society, was elected Fellow of the Royal Society (FRS) in 1663. Robert William Boyle, the world's first modern chemist, became famous for Boyle's Law on December 31, 1691, at the age of 64 in London, England. Boyle's Law is given after his name.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.


Get information like this
https://t.me/joinchat/jpqj3jQLN51kYTk9
Join Telegram  Group.
https://chat.whatsapp.com/HHC5m0Jz3Ue1E8ilgta0YT
Join WhatsApp  Group
Thanks.

பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1691).

பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1691).

இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) ஜனவரி 25, 1627ல் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக பிறந்தார். இரிச்சர்டு பாயில் அயர்லாந்தில் உள்ள டூடர் தோட்டங்களில் துணை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக 1588ல் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்துக்கு வந்தார். இரிச்சர்ட்டு பாயில் நில சுவானாக இருந்த காலத்தில் தான் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது தன் மூத்த சகோதரர்களைப் போன்று அயர்லாந்து குடும்ப பின்னணியில் வளர்க்கப்பட்டார். பாயில் தனியார் பாடசாலை மூலம் இலத்தின், கிரேக்கம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றுக் கொண்டார். இவர் தனது எட்டாவது அகவையில் தாயை இழந்தார்.


பாயில் தந்தையின் நண்பரான சர்.ஹென்றி வோட்டன் இங்கிலாந்தில் உள்ள ஈட்டன் கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்காலத்தில் இராபர்ட்டு காரே என்னும் தனியார் பயிற்றுநரை ஐரிசு மொழியறிவை இராபர்ட்டு வில்லியம் பாயில் பெற்றுக் கொள்ளுவதற்கு அவரது தந்தை பணி அமர்த்தினார். இருப்பினும் இவருக்கு ஐரிசு மொழியில் ஆர்வம் ஏற்படவில்லை. மூன்று ஆண்டுகள் ஈட்டனில் கழித்த பிறகு பிரெஞ்சு பயிற்றுநருடன் வெளிநாடு சென்றார். 1641ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டினைப் பார்வையிட்டனர். அந்நாட்களில் வாழ்ந்த கலிலியோ கலிலீ என்பவரின் பெரு நட்சத்திரங்களின் முரண்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும்படி குளிர்காலத்தில் பிளாரன்ஸ் மாகாணத்தில் தங்கினார். 

Boyles Law Drawing - Drone Fest

பாயில் ஒரு இரசவாதி ஆவார். மேலும் உலோகங்கள் மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பி இவர் அதை அடைவதற்கான முயற்சியில்  சோதனைகள் செய்தார். மேலும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒரு பிஸ்டனைக் கொண்டு வந்தனர் (நாம் போட்டுக் கொள்ளும் ஊசி போன்றது). அந்தப் பிஸ்டனை ஒருபுறம் அழுத்தும் போது உள்ளிருக்கும் வாயுவால் அழுத்தம் ஏற்பட்டு மீண்டும் பிஸ்டன் பழைய நிலைக்கு வர முயன்றது. ஆனால் அதனால் முடியவில்லை. எனவே வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானது அல்ல என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் நிரூபிக்க முனைந்தனர். பாயில் மட்டும் இந்தச் சோதனை சரியானதல்ல என்றார். பிஸ்டன் மிகவும் கடினமானதாக இருப்பதால் வாயுவால் திரும்ப அதே நிலைக்கு வைக்க முடியவில்லையே தவிர, வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானதாகவே இருக்கும் என்றார். சில நாட்களில் அப்படி ஒரு பிஸ்டனைத் தான் தயாரித்து தன் வாதத்தை நிரூபிப்பதாகவும் சவால் விட்டார்.

 Basic Gas Laws compiled and explained with the help of GIFs - Docsity

இரண்டு வாரங்கள் கழித்து, ஒரு ஆங்கில ‘U' வடிவக் குழாய் ஒன்றை எடுத்து வந்தார். அதில் ஒருபுறம் மற்றொன்றை விட மூன்றடி உயரமாக இருந்தது. உயரமாக இருந்த பகுதி ஒல்லியாகவும், உயரம் குறைந்த பகுதி தடிமனாகவும் இருந்தது தடிமனாக இருந்த பகுதியின் மேற்புறம் அடைக்கப்பட்டிருந்தது. பாதரசத்தை இந்தக் குழாயின் ஒருவழியாக ஊற்றினார் பாயில். பாதரசம் இரு குழாய்களிலும் சிறிது மேலேறும் வரை ஊற்றப்பட்டது. இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று அடைக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. பிஸ்டன் என்பது காற்றைப் பிடித்து வைக்கும் ஒரு உத்தி ஆகும். இப்போது இங்கும் காற்று பிடித்து வைக்கப்பட்டதால் இது ஒரு பிஸ்டன் என்றார் பாயில். இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் கொஞ்சம் பாதரசத்தை இந்தப் புறமிருந்து ஊற்றினார்.

 UNPh20

இப்போது அந்தப் பகுதியிலிருக்கும் காற்று அழுத்தப்பட்டு இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு பாதரசம் ஏறியது. இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் பாதரசத்தைக் அந்தக் குழாயின் கீழிருக்கும் ஒரு வால்வு மூலம் வெளியேற்றினார். இப்போது மீண்டும் பாதரசம் பழைய இடத்திற்கே வந்து நின்றது. இதன் மூலம் காற்றின் அழுத்தம் சரிசமமானதே என்று நிரூபித்தார் பாயில். அதுமட்டுமல்ல, காற்றின் மேல் வைக்கும் எடைக்குத் தகுந்தவாறு அது கொள்ளும் கொள்ளளவும் எதிர்மறையாக‌ மாறுகின்றது என்று கண்டறிந்தார். அதாவது மூன்று பங்கு எடையைத் தூக்கி வைத்தால், மூன்றில் ஒரு பங்கு இடத்துக்குள் காற்று நிரம்பி விடுகின்றது. இந்த விதியின் மூலமாகப் பலப் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

The Ideal Gas Law

பாயில் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். பாயி்லின் விதி (Boyle's law) என்பது கன அளவின் மீதான அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். இவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அதன் கன அளவும் எதிர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. இதனை 1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இதனைக் கணித முறையில்,

  P    1/V, ( மாறாத வெப்பநிலையில்) அல்லது

  PV =  k, (ஓர் மாறிலி)

வெப்பநிலை T ஆகவும், வாயுவின் கன அளவு V1 ஆகவும் உள்ளபோது அழுத்தம் P1 ஆக இருக்கும். அதே வெப்பநிலையில் வாயுவின் கன் அளவு V2 ஆகவும் அதன் அழுத்தம் P2 ஆகவும் இருந்தால் இவ்விதியின்படி

  P1V1 =P2v2 = மாறிலி என்று எழுதலாம்.

 

தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில்  மூல நூலாகக் கருதப்படுகிறது. இராயல் சொசைட்டி என்னும் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவராய் இருந்த பாயில் Fellow of the Royal Society (FRS) 1663ல் இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் டிசம்பர் 31, 1691ல் தனது 64வது அகவையில் இலண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பாயில் விதி என்பது இவரது பெயரை ஒட்டி வழங்கப்படுகிறது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...