Thursday, June 16, 2022

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2021-2022 செய்த சாதனை தொகுப்பு.

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2021-2022 செய்த சாதனை தொகுப்பு.


இஸ்ரோ உந்து விசை வளாகம், மகேந்திரகிரி மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்திற்க்கு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா.


நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல்  துறை சார்ந்த 56 மாணவ மாணவிகள் 24.05.22  செவ்வாய்க்கிழமை  அன்று இஸ்ரோ உந்துவிசை வளாகம் மகேந்திரகிரியில் கல்வி சுற்றுலா சென்றனர். அங்கு உள்ள விண்வெளி அருங்காட்சியத்தில் இஸ்ரோ உருவான விதம், இஸ்ரேலில் உள்ள ராக்கெட்களின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள்கள் மாதிரி வடிவம் மற்றும் எரிபொருள்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி தெளிவாக விளக்கப்படங்களுடன் எடுத்துரைத்தனர். மேலும் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகளில் உபயோகப்படுத்தப்படும் திரவ எரிபொருள், திட எரிபொருள் கிரியோஜெனிக் இன்ஜின் செயல்படும் விதம் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் எவ்வாறு மகேந்திரகிரியில் தயாரிக்கப்படுகிறது அந்த எஞ்சின் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது என்பதும் விளக்கப்பட்டது. பின்னர் ராக்கெட் என்ஜின் பரிசோதனை செய்யப்படும்   பரிசோதனை நிலையம் ஒன்று, பரிசோதனை நிலையம் இரண்டு ஆகியவற்றிற்கு மாணவர்களை நேரடியாக கூட்டி சென்று எவ்வாறு பரிசோதனை செய்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கினார்.




25.05.22 புதன்கிழமை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விண்வெளி மாதிரிகள் செயற்கைக்கோள்கள் செயற்கைக்கோள் மாதிரிகள் ராக்கெட் மாதிரிகள் போன்றவை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. விண்வெளியில் மனிதர்கள் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை, அவர்கள் அணியும் உடைகள், விண்வெளியின் தட்பவெப்பம் குறித்த அனைத்தும் தெளிவாக விளக்கினார்.

மேலும் இஸ்ரோ உருவான விதம், இஸ்ரோவை உருவாக்க விக்ரம் சாராபாய் எடுத்துக்கொண்ட முயற்சி, இஸ்ரோவால் விவசாயம், தொலைத்தொடர்பு, இயற்கை பேரிடர் பாதுகாப்பு, நாட்டின் ராணுவ பாதுகாப்பு, வெளிப்புறக் கோள்கள் பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு வளர்ந்துள்ளது என்பது பற்றி தெளிவான விளக்க காட்சிகளுடன் விளக்கப்பட்டது.

இறுதியாக ரோகிணி வகையை சேர்ந்த சவுண்டிங் ராக்கெட் மாணவர்களுக்காக செலுத்தப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஆனது விண்வெளியில் நிலவும் தட்பவெப்ப நிலை, வானிலை போன்றவற்றை அறிய அனுப்பப்பட்டது.






திருவனந்தபுரத்திற்க்கு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா https://keelainews.com/2022/05/27/try-31/


ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம்

நேரு நினைவுக் கல்லூரி நடத்திய விளையாட்டு விழா போட்டியில் கலந்துகொண்டு அதிக போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இயற்பியல் துறை மாணவ மாணவிகள்  வென்றார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இயற்பியல் துறை மாணவ மாணவிகள் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








புத்தனாம்பட்டி, நேரு
 நினைவு கல்லூரியில் உலக விண்வெளி   
வார விழா 



நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 08.10.2021ல் உலக விண்வெளி வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நெல்லை.சு.முத்து கலந்து கொண்டு விண்வெளியில் இந்தியாவின் சாதனை குறித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில் உலக விண்வெளி வாரம்இந்த ஆண்டு விண்வெளியில் பெண்கள் என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, எவ்வாறு படிப்படியாக வளர்ந்தது குறித்து தெளிவாக கூறினார். முதலில் நமது செயற்கைக்கோளை வெளிநாட்டு ஏவுகலன் மூலமாக செலுத்திக்கொண்டு இருந்தோம். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்ஆரியபட்டா ஏப்ரல் 19, 1975ல் ரஷ்யா ஏவுகலன் மூலமாக செலுத்தப்பட்டதுஆனால் இப்போது பிப்ரவரி 15, 2017 ல் 102 செயற்கைக்கோளை செலுத்தி உலக சாதனை படைத்தது உள்ளோம்.

இன்சாட் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு, தொலைவகுப்பு(ஆன்லைன்) போன்ற பல சேவைகளை பெற பயன்படுகிறது.   IRS செயற்கைக்கோள் இயற்கை வளம், பேரிடர் மேலாண்மை போன்ற பல சேவைகளை பெற பயன்படுகிறது. இன்று வரை 128 இந்திய செயற்கைக்கோள் மற்றும் 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள் செலுத்தி வரலாற்று சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது. செயற்கைக்கோள் செலுத்துவதில் உலக அளவில் இந்திய 5ம் இடத்தில் உள்ளது. மேலும் 2023ல் ககன்யான் திட்டம் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது.  1967 இஸ்ரோ ஆரம்பித்த போது 7 கிலோ விண்வெளிக்கு செலுத்தினோம்.

ஆனால் இப்போது 640டன் விண்வெளிக்கு அனுப்புகிறோம்.   நிலவில் ஒரு பொருளை தரையிறக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கேட்டதற்கு இணக்க சந்திரயான்-1 மூலம் நிலா மோது கலன் மூலம் நிலாவில் செலுத்தினோம். மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 மூலம் கண்டறிந்துள்ளோம். நிலாவில் உள்ள ஹீலியம்-3 ஐசோடோப்பை  பயன்படுத்தி, அணு சக்தி மூலம் ஏவுகலன் மற்றும் ஏவு ஊர்தி இயக்க முடியும். மேலும் அப்துல் கலாம் கூறிய ஊக்கமூட்டும் சிந்தனைகள் பற்றியும் விண்வெளி வேலைவாய்ப்புகள் குறித்தும் தெளிவாக கூறினார்.


முன்னதாக கல்லூரி முதல்வர் அ.ரா. பொன்.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருத்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.  கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர்  பொன்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.











புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா.


நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 30.10.2021ல் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவர், IGCAR கல்பாக்கம் டாக்டர் ஆர். வெங்கடேசன், கலந்து கொண்டு  இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  சாதனை குறித்து பேசினார். 

மேலும் அவர் பேசுகையில் மேலை நாடுகளுக்கு இணையாக, உலகின் 12 வது நாடக அணுசக்தியில் உயர வழிவகுத்தவர் ஓமி பாபா. ஐன்ஸ்டீனின் ஆற்றல் சமன்பாட்டை வைத்து தோரியும் அணுவை பயணிப்படுத்தி ஆற்றல் தயாரிக்கும் முறையை உருவாக்கியவர் ஓமி பாபா. ஏனென்றால் உலகிலேயே 3 வது அதிக தோரியம் கிடைக்கும் நாடு இந்தியா ஆகும். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் எவ்வாறு சிதைகிறது, அதை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் வயதை கணக்கிட முடியும் போன்ற பல மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில் கூறினார். அணு கழிவுகள் அதன் கதிரியக்கம் வெளியிட மிக நீண்ட காலம் எடுப்பதால், பாதுகாப்பாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவாக எடுத்து கூறினார்.


கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு அறிவியல் உதவியாளர் IGCAR கல்பாக்கம், ராமு பேசுகையில் யுரேனியம், புளுட்டோனியம் மற்றும் தெரியும் மூன்றையும் பயன்படுத்தும் அணு உலை உலகிலேயே கல்பாக்கதில் மட்டுமே உள்ளது என்பது மாபெரும் சாதனையாகும் என்பதை எடுத்துக் கூறினார்.  மேலும் தோரியம் எவ்வாறு அணு உலைகளில் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும், காமினி பரிசோதனை அணு உலைகளில் எவ்வாறு பரிசோதனை நடைபெறுகிறது என்பது பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்.


முன்னதாக கல்லூரி முதல்வர் அ.ரா. பொன்.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருத்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.  கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர்  பொன்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.







புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா. http://keelainews.com/2021/10/31/ege-81/

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா. https://ntrichy.com/2021/10/31/trichy-nehru-college/

புத்தனாம்பட்டிநேரு நினைவு கல்லூரியில் இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி.

புத்தனாம்பட்டிநேரு நினைவு கல்லூரியில் டிசம்பர் 15, 16 ஆகிய இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி சிறப்பாக  நடைபெறுகிறதுகைபேசியில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்ய நியூ டெக்னாலஜிகோயம்புத்தூர் இருந்து நம் கல்லூரிக்கு வந்து பயிற்சி அளித்தார்கள். அதில் கைபேசியில் உள்ள மின்தடைமின்தேக்கிமின்கம்பிச்ச்சுருள்டிரான்சிஸ்டர், டையோடுஆகியவை பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவாகவும்எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டது. மேலும் செய்முறை பயிற்சியில் கைபேசியை எவ்வாறு திறப்பதுஅதில் உள்ள மைக்ரிங்கர்மற்றும் ஸ்பீக்கர், பற்றி ஆதன் மதிப்புகளையும்அதனை எவ்வாறு சரி செய்வது என்பதையும் மிகவும் தெளிவாக கூறினார்கள்டிஸ்ப்ளே எவ்வாறு  மாற்றுவதுஅதில் எற்படும்  பழுதுகளை எவ்வாறு சரி செய்வது  என்பதை பற்றியும்  கூறினார்கள். 

ஒருங்கிணைந்த மின்சுற்று (IC) எவ்வாறு பிரித்தெடுப்பது மேலும் மதர்போர்டு (mother board) எற்படும் பழுதுகளை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றியும் கூறினார்கள் மேலும் கைபேசியை பிளஷிங் (flashing) செய்வது  பற்றி தெளிவாக கூறப்பட்டது. மேலும் அனைத்து கைபேசிகளில் ஏற்படும்   பழுதுகளை எவ்வாது சரிசெய்வது என்றும்கைபேசியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏர்படுத்தினார்கள். பேட்டரி எவ்வாறு பழுது ஏற்படுகிறதுஇதனை எவ்வாறு சரிசெய்வது பற்றியும் கூறினார்கள். குறிப்பாக கைபேசியை புதிதாக வாங்கும்போது வரும் சார்ஜரை மட்டுமே கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும் என்பதையும்இதனால் கைபேசியில் கைபேசியில் உள்ள பேட்டரி ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்பதையும் கூறினார்கள். அதெபோல் இரவு முழுவதும் சார்ஜ் போட்டால் பேட்டரி விரைவில் செயழிந்து விடும் என்ற கருத்தையும் கூறினார்.  எவ்வாறு புதிதாக மொபைல் சேல்ஸ்சர்வீஸ் சென்டர் வைப்பது என்பது பற்றியும் கூறினார்கள். 



இந்த பயிற்சியில் எழுபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி பெற்றனர். பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் நோக்கம் படிக்கிற போது மாணவ மாணவிகள் பணம் சம்பாரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல்மேலும் மாணவ மாணவிகள் திறமையை வெளிக்கொணர்ந்துமாணவர்களும் பயன்பெற்றுஎதிர்வரும் காலத்தில் அரசு வேலையை மட்டும் எதிர்நோக்கி இல்லாமல்சுயதொழில் செய்துமற்றவர்களுக்கும் வேலை கொடுக்கும் வகையில் வகையில் இப்பயிற்சி அமையும்.  ஒரு காலகட்டத்தில் இது போன்ற பயற்சியின் மூலம் சுய தொழில் செய்து அவர்கள் பெரிய அளவிலான நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக நேரு நினைவு கல்லூரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

முன்னதாக துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.  கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன்கல்லூரி முதல்வர் .ராபொன்.பெரியசாமிஒருங்கிணைப்பாளர் முனைவர்மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார்பேராசிரியர் ரமேஷ் பயிற்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார்.





























நிழல் இல்லா நாள் பயிற்சிப் பட்டறையில் நேரு நினைவு கல்லூரியின் மாணவ மாணவிகள் பங்கேற்பு.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பக் கழக விக்ஞான் பிரசாத், தமிழக அரசின் அறிவியல் தொழில் நுட்ப மன்றம், அறிவியல் பலகை, தமிழ்நாடு வானியல் அறிவியல் கழகம் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்திய மண்டல அளவிலான நிழல் இல்லா நாள் பயிற்சிப் பட்டறையில் நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் பொ. இரமேஷ், இரண்டாம் ஆண்டு முதுகலை இயற்பியல் மாணவன் சு.முரளி, மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் மாணவி மு.தனலட்சுமி மற்றும் இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி த.அருள்ஜோதி ஆகியோர் பங்கு பெற்று நிழலில்லா தினம் நிகழ்வை பரிசோதனை மூலம் ஆய்வு செய்தனர்.




இந்த பயிற்சி பட்டறையில் நிழல் இல்லா நாள் என்றால் என்ன? நமது ஊரில் நிழல் இல்லா நாள் எப்போது வரும்? நிழல் இல்லா நாளை பரிசோதனை மூலம் எவ்வாறு செய்வது? நமது ஊரின் நண்பகல் எவ்வாறு கண்டுபிடிப்பது? சூரியன் உதிக்கும் நேரம் என்ன சூரியன் மறையும் நேரம் என்ன? சரியான கிழக்கு திசை, வடக்கு திசை போன்றவற்றை செயல்முறை மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பது போன்றவற்றை இப்பயிற்சியில் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். மேலும் பூமியின் சுற்றளவை கணித துணைகொண்டு எவ்வாறு கண்டு பிடிப்பது போன்ற பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இரவில் நட்சத்திரங்களை எவ்வாறு பார்ப்பது சிறந்த நட்சத்திரங்களின் பெயர்கள் என்ன, அவை எவ்வாறு இயங்குகின்றன போன்ற இரவு விண்வெளி நோக்குதலும் நடைபெற்றது.















துப்பாக்கி தொழிற்சாலை கண்காட்சி, அறிவியல் கோளரங்கம் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா நேரு நினைவு கல்லூரியின் மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா.













புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறையும் கோயம்புத்தூர் நியூ டெக்னாலஜியும் புரிந்துணர்வு ஒப்பந்தம். 


புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறையுக்கும் கோயம்புத்தூர் நியூ டெக்னாலஜிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் அ.ரா. பொன்.பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் மற்றும் நியூ டெக்னாலஜியும் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இயற்பியல் பேராசிரியர் ரமேஷ் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

 

புதிய தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் பல்வேறு வளங்களை ஒருங்கிணைத்து பரிமாறிக்கொள்வதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்வது, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, புத்தகங்கள், பருவ இதழ்கள், பத்திரிக்கைகள், கற்பித்தல் மற்றும் பயிற்சி உதவிகள் மற்றும் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஆலோசனை நிபுணத்துவம் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வது. மேலும் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி மூலம்  மாணவ மாணவிகள் பணம் சம்பாரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். மாணவ மாணவிகள் திறமையை வெளிக்கொணர்ந்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.



புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறையும் கோயம்புத்தூர் நியூ டெக்னாலஜியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.




தேசிய அறிவியல் வார விழாவில் பரிசு வென்ற புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவிகள்.





தேசிய அறிவியல் நாள், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவைக் கண்டறிந்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு நிகழ்வாக சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் என்ற தலைப்பில் இந்திய அரசால் பிப்ரவரி 22 முதல் 27 வரை அறிவியல் வார விழா இந்தியா முழுவதும் 75 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் இந்த விழா பிஷப் ஹீபர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி  இயற்பியல் துறை இளநிலை மூன்றாம் ஆண்டு  மாணவி செல்வி. இரா.மீரா முன்னேற்றப்பாதையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடுத்த 25 ஆண்டுகள் என்ற தலைப்பில் தமிழில் உரை நிகழ்த்தி முதல்தர இடத்தை பிடித்தார். 



இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ம.சரண்யா மற்றும்  இல.அபிராமி இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நவீனமயம் மைல்கற்கள் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டியில் பங்கேற்றனர். இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ம.சரண்யா மற்றும் செல்வி.  சீ.தாரா அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற தலைப்பில் ஆங்கில உரை சிறப்பாக நடத்தினர்.



இயற்பியல் துறை இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. த.அருள்ஜோதி மற்றும் செல்வி. ப.கீர்த்தனா 21ம் நூற்றாண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி போட்டி, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன மைல்கற்கள் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டி மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் முன்னேற்றம் என்ற தலைப்பில் போஸ்டர் போட்டி  ஆகியவற்றில் பங்கு பெற்றனர்.


இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ஜே.தமிழ் செல்வி மற்றும் மூன்றாம் ஆண்டு செல்வி. வெ.நந்தினி இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீனமயமாக்கல் என்ற தலைப்பில் பெயிண்டிங் போட்டியில் பங்கு பெற்றனர். 


இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும் கல்லூரி தலைவர்  பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர்  திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர்  முனைவர்  பொன்பெரியசாமி மற்றும் கல்லூரி  சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாராட்டினர். இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ.ரமேஷ் செய்திருந்தார்.



கல்லூரி மாணவர்களுக்கான கலை போட்டியில் பரிசு வென்ற புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவ, மாணவிகள்.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற்றது. மதநல்லிணக்கம் அல்லது விடுதலை போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஏப்ரல் 16-ந் தேதி எல்ஐசி காலனியில் உள்ள மயன்நுண்கலைப் பள்ளியில் நடைபெற்றது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் கவிதை, விடுதலை போரில் வீழ்ந்த மலர்கள் என்ற தலைப்பில் பாடல் எழுதுதல், தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகளும் மற்றும் பேச்சுப் போட்டியும் ஏப்ரல் 17-ந் தேதி உறையூர் ஆர்.சி. பள்ளி அருகில் உள்ள டி.என். எம்.எஸ்.ஆர்.ஏ அரங்கத்தில்  நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.



தில் நேரு நினைவு கல்லூரி மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவி ரா.கார்த்திகா (2K19UP54) பாட்டு போட்டியில் இரண்டாம் இடமும், கவிதை போட்டியில் ஆறாம் (ஆறுதல் பரிசு) இடமும் பெற்றார். மேலும் மூன்றாமாண்டு இயற்பியல்   மு.தனலட்சுமி, க.கவிப்பிரியா, ரா.மீரா, ரா.சரண்யா, ம.சுஷ்மிதா, சி.நிவேதா, ரா.சுஸ்மிதா, ச.ராஜபாண்டி, செ.தாரணி, புவனா, இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவன் சு.முரளி, போன்றோர் கவிதை, கட்டுரை, பேச்சு ஓவியம் போன்ற பல போட்டிகளில் பங்கு பெற்றனர். இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவன் சு.முரளி கட்டுரை போட்டியில் முதல் பரிசு வென்றார்.

மாணவர்களின் திறமைகளை இனம் கண்டு கொள்ள இப்போட்டிகள் உதவின. இயற்பியல் உதவி பேராசிரியர் பொ.இரமேஷ் மாணவர்களை ஊக்குவித்து பங்கு பெறச் செய்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் கல்லூரி தலைவர்  பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர்  திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர்  முனைவர்  பொன்பெரியசாமி மற்றும் கல்லூரி  சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.

Participate Two-week Science Academies Refresher Courses in Theoretical Physics.


இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ம.சரண்யா, இல.அபிராமி முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவன் செ.முருகன், சு.முரளி மற்றும் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் மாணவி மு.தனலட்சுமி ஆகியோர் இரண்டு வார Science Academies Refresher Courses in Theoretical Physics பங்குபெற்றனர்.








இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ம.சரண்யா, சு.முரளி சர்வதேச மாநாட்டு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.
(International conference paper presentation).



பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் பங்குபெற்று 335 கிலோ எடையைத் தூக்கி க.விக்னேஸ்வரன் (2K20PP08) மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.


துறையூரில் உள்ள ரத்னா உடற்பயிற்சி கூடம் நடத்திய ஆணழகன் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் ஆ.கதிர்வேல் (2K20PP02) ஏழாவது இடத்தை பெற்றுள்ளார்


நேரு நினைவுக் கல்லூரி நடத்திய விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு தடகளப் பிரிவில்(4×100,4×400,400) பரிசுகளைப் செ.சதீஸ் (2K20PP06) பெற்றுள்ளார்.




பல்வேறு  ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய  ம.சரண்யா (2K20PP16) முதுநிலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி.



பல்வேறு  ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய சீ.தாரா (2K20PP22)  முதுநிலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி.

பல்வேறு  ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய ஜே.தமிழ்செல்வி (2K20PP21)  முதுநிலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி.





200க்கும் மேற்பட்ட ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய ப.சந்தியா  (2K19UP55)  இளநிலை மூன்றாமாண்டு இயற்பியல்.






























150க்கும் மேற்பட்ட ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய ரா.கார்த்திகா (2K19UP54)  இளநிலை மூன்றாமாண்டு இயற்பியல்.




100க்கும் மேற்பட்ட ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய க.கவிப்பிரியா (2K19UP11)  இளநிலை மூன்றாமாண்டு இயற்பியல்.






























எஸ்பிஐ ஆயுள் காப்பீடுநேர்முக தேர்வில் 8 மாணவிகள் தேர்ச்சி.

எஸ்பிஐ ஆயுள் காப்பீடு நேர்முக தேர்வில் அபிராமி (2K19UP01), கவிப்ரியா (2K19UP11), மோனிஷா (2K19UP15), பிரியங்கா(2K19UP19), ராமலக்ஷ்மி (2K19UP20), கார்த்திகா (2K19UP54), சந்தியா (2K19UP55), மீரா (2K19UP56) ஆகிய 8 மாணவிகள் தேர்ச்சி பெற்று இறுதி தேர்வுக்கு தேர்வானவர்கள்.

IRDAI

 காப்பீடு நிறுவன தேர்வில் 3 மாணவிகள் தேர்ச்சி.

IRDAI

 காப்பீடு நிறுவன தேர்வில் 
மோனிஷா (2K19UP15), பிரியங்கா (2K19UP19), சந்தியா (2K19UP55) ஆகிய 3 மாணவிகள் தேர்ச்சி.





Redington (India) Limited கல்வி உதவித்தொகை 6,500/-

மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் மாணவி மு.தனலட்சுமிக்கு Redington (India) Limited கல்வி உதவித்தொகை 6,500/-
வழங்கப்பட்டது.

Seminar and Quiz Series II M.Sc Physics








இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...