Showing posts with label NMC Astro Clup. Show all posts
Showing posts with label NMC Astro Clup. Show all posts

Friday, August 7, 2026

இஸ்ரோ டேராடூன் இந்திய தொலை உணர்வு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி மாணவர்.

இஸ்ரோ டேராடூன் இந்திய தொலை உணர்வு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி மாணவர்.


புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியின் இரண்டாம் ஆண்டு  கணினி அறிவியல் மாணவர் தருண்குமார் செ. (U25CSC249),  இஸ்ரோ டேராடூன் இந்திய தொலை உணர்வு நிறுவனத்தில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் ஒரு வாரம் பங்கேற்று வெற்றிகரமாகப் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றார். இந்தப் பயிலரங்கில் தொலை உணர்வு (Remote Sensing), புவியியல் தகவல் அமைப்பு (GIS), செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து ஆழமான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சந்திரயான்–3 திட்டத்தின் நோக்கங்கள், நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியதன் அறிவியல் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட ஆய்வுத் தகவல்கள் குறித்து விரிவாக அறிந்துகொண்டார்.


அத்துடன், விண்வெளித் தொழில்நுட்பம் விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் போன்ற துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நிபுணர்களின் விரிவுரைகள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் மூலம் கற்றுக்கொண்டார். இப்பயிற்சி தனது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தியதோடு, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் ISRO-வின் செயல்பாடுகள் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.



மாணவருக்கு இயற்பியல்  உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் P.ரமேஷ்  வழிகாட்டியாக இருந்து பயிற்சிக்குத் தயார்படுத்தினார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர் தருண்குமாரை கல்லூரித் தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன், செயலர் பொன். ரவிச்சந்திரன், முதல்வர் அ. வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம், கணினி அறிவியல் துறைத் தலைவர் பிரியா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.


இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

                                                       மேலும் படிக்க 

Monday, June 29, 2026

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி.

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி. 

திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் வைரவிழா (Diamond Jubilee) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இயற்பியல் சங்கம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அறிவியல் கழகம் மற்றும் காக்னிசன்ஸ் (Cognizance) கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கம் மற்றும் இரவு வான் பார்வை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயலாளரும், நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் P. ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு "Journey Through Space" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் சூரியக் குடும்பம், கோள்கள் மற்றும் அவற்றின் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி அறிவியல் கருத்துகளை எளிமையாகவும் அறிவியல் ஆதாரங்களுடனும் விளக்கினார்.


கருத்தரங்கத்தைத் தொடர்ந்து மாணவிகள் நிலவின் மாதிரி (Moon Model), கோளரங்க (Planetarium) காட்சி மற்றும் மெய்நிகர் விண்வெளி (Virtual Space Show) ஆகியவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர். இந்த அனுபவங்கள் மாணவிகளுக்கு விண்வெளியை நேரில் ஆராய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு வான் பார்வை நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலம் அழகிய நிலா, வெள்ளி (Venus) மற்றும் வியாழன் (Jupiter) ஆகிய வான்பொருட்கள் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டன. இதில்  400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தொலைநோக்கியின் வழியாக வானியல் பொருட்களைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.




மாணவிகளிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள்  கலந்து கொண்டு பயனடைந்தனர். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற இந்த விண்வெளி அறிவியல் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு மறக்க முடியாத அறிவியல் அனுபவமாக அமைந்தது.





Vision_News || சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் உலக சிறுகோள் தின வானியல் பார்வை நிகழ்ச்சி! - https://trichyvision.com/astronomy-viewing-event-for-world-asteroid-day-at-seethalakshmi-ramaswami-college/


Friday, November 28, 2025

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு.

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள், ஹைராஸ்கோப், குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.  இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார். தொலைநோக்கி வழியாக தொலைவில் உள்ள பொருளை துல்லியமாக கண்டு களித்து மகிழ்ந்தார்கள்.நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர்,  முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி  பற்றி எடுத்துக் கூறினார்.


நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். பின்னர் தொலைநோக்கி மூலம் வானில் உள்ள பொருட்களை நேரடியாகக் கண்டு ஆர்வத்துடன் ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், Leo Prasath, Sathishkumar ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P.  இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, August 28, 2025

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். 





மேலும்சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.

துறையூர் கலிங்கமுடையன்பட்டி ஸ்ரீ விவேகானந்தா தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். 




மேலும் சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.


ஓமாந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சந்திர கிரகணம் விழிப்புணர்வு



நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் விண்வெளியில் இஸ்ரோ வளர்ந்த விதம் பற்றி எடுத்துக் கூறினார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.











இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

மூளை ஆராய்ச்சித் துறையில் மகத்தான சாதனை படைத்த மூன்று முன்னணி அறிவியலாளர்களுக்கு 2026 மருத்துவத்திற்கான நோபல் பரிசு

மூளை ஆராய்ச்சித் துறையில் மகத்தான சாதனை படைத்த மூன்று முன்னணி அறிவியலாளர்களுக்கு 2026 மருத்துவத்திற்கான நோபல் பரிசு. 2026 ஆம் ஆண்டிற்கான மரு...