Showing posts with label இயற்கை வாழ்வியல் முறை. Show all posts
Showing posts with label இயற்கை வாழ்வியல் முறை. Show all posts

Saturday, June 15, 2024

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🕊️📡📡வேர்கடலை நன்மைகள்.

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🕊️📡📡வேர்கடலை நன்மைகள்.


📡📡📡📡📡📡

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.


நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவை நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும் கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.


நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis)  வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.



இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.


கொழுப்பை குறைக்கும்

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது


இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக *குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.


கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் *பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.

நார்சத்து- 9 மி.கி

கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.

புரதம்- 25 மி.கி

ட்ரிப்டோபான்- 0.24 கி

திரியோனின் – 0.85 கி ஐசோலூசின் – 0.85 மி.கி.

லூசின் – 1.625 மி.கி

லைசின் – 0.901 கி

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 

கிளைசின்- 1.512 கி

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி

காப்பர் – 11.44 மி.கி.

இரும்புச்சத்து – 4.58 மி.கி.

மெக்னீசியம் – 168.00 மி.கி.

மேங்கனீஸ் – 1.934 மி.கி.

பாஸ்பரஸ் – 376.00 மி.கி. 

பொட்டாசியம் – 705.00 மி.கி.

சோடியம் – 18.00 மி.கி

துத்தநாகச்சத்து – 3.27 மி.கி

தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது

📡📡📡📡📡📡📡



பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

📡📡📡📡📡📡📡

கட்டுரை .அருள் நாகலிங்கம்

📡📡📡📡📡📡📡

🌷🌷🌷🌷🌷🌷

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.🙏🏻

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚 

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

Tuesday, December 5, 2023

✍இயற்கை வாழ்வியல் முறை🕊️🌵🌵இஞ்சியின் நன்மைகள்.

✍இயற்கை வாழ்வியல் முறை🕊️🌵🌵இஞ்சியின் நன்மைகள்.


🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி, உணவின் ருசி கருதி  உணவுடன் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட. இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என பொருள்படும். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.

🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும்  மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. அது மாத்திரமன்றி, இன்னும் பல மருத்துவ குணம்களையும் உடையது  இஞ்சி.


🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம்  வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு  உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும். இஞ்சியை சுட்டு சாப்பிடுவதன் மூலம் பித்த, கப நோய்கள் நீங்கும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன்  மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும் அதேவேளை, சுறுசுறுப்பும்  ஏற்படும். காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம் பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும். உடம்பும் இளமை பெறும்.

🌵🌵🌵🌵🌵🌵

பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வெந்நீர் குடித்துவர தொந்தி கரையும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

🌵🌵🌵🌵🌵🌵

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

🌵🌵🌵🌵🌵

புற்றுநோய்

இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள், ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.

🌵🌵🌵🌵🌵🌵

மறதி தள்ளிப் போடப்படும்

இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

🌵🌵🌵🌵🌵🌵

சர்க்கரை நோய் கட்டுப்படும்

இஞ்சியில் உள்ள ஆன்டிபயாடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.


🌵🌵🌵🌵🌵🌵

ஆர்த்ரிடிஸ் வலி

இஞ்சியில் உள்ள நிவாரணிப் பொருட்கள், நாள்பட்ட மூட்டு வலிகளில் இருந்து விடுபட உதவும். மேலும் இது ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மூட்டு வலி பிரச்சனைகள் இருப்பவர்கள், இஞ்சி ஜூஸை அடிக்கடி பருகி வருவது நல்லது.

🌵🌵🌵🌵🌵🌵

இரைப்பைக் குடல்

புற்றுநோய் இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.

🌵🌵🌵🌵🌵🌵

கொலஸ்ட்ரால் குறையும்

இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்

🌵🌵🌵🌵🌵🌵

🌷🌷🌷🌷🌷

🔹🔹🔹🔹🔹

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

Friday, September 22, 2023

இதுதான் இறைவன் இயக்கும் நமது மனித உடல்-மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது?

இதுதான் இறைவன் இயக்கும் நமது மனித உடல்-மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது?



70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள் (தனிமங்கள்)

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்

2. கார்பன் 16 கிலோ கிராம்

3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்

4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்

5. கால்சியம் 1.0 கிலோ கிராம்

6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம்

8. சோடியம் 100 கிராம்

9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம்

11. இரும்பு 4.2. கிராம்

12. ஃப்ளூரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம்

14. சிலிக்கன் 1.0 கிராம்

15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்

17. ப்ரோமின் 0.26 கிராம்

18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம்

20. அலுமினியம் 60 மில்லி கிராம்

21. காட்மியம் 50 மில்லி கிராம்

22. செரியம் 40 மில்லி கிராம்

23. பேரியம் 22 மில்லி கிராம்

24. அயோடின் 20 மில்லி கிராம்

25. தகரம் 20 மில்லி கிராம்

26. டைட்டானியம் 20 மில்லி கிராம்

27. போரான் 18 மில்லி கிராம்

28. நிக்கல் 15 மில்லி கிராம்

29. செனியம் 15 மில்லிகிராம்

30. குரோமியம் 14 மில்லி கிராம்

31. மக்னீசியம் 12 மில்லி கிராம்

32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்

33. லித்தியம் 7 மில்லி கிராம்

34. செஸியம் 6 மில்லி கிராம்

35. பாதரசம் 6 மில்லி கிராம்

36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்

37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்

38. கோபால்ட் 3 மில்லி கிராம்

39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்

40. வெள்ளி 2 மில்லி கிராம்

41. நியோபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்

43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்

44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்

45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்

46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்

47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்

48. தால்வியம் 0.5 மில்லி கிராம்

49. இண்டியம் 0.4 மில்லி கிராம்

50. தங்கம் 0.4 மில்லி கிராம்

51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்

52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம்

54. தோரியம் 0.1 மில்லி கிராம்

55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்

56. சமாரியம் 50 மில்லி கிராம்

57. பெல்யம் 36 மில்லி கிராம்

58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.


🧍மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது. 

கடைசிவரை வளர்வது காது👂🏻 மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை  சுமார் 5 லட்சம்.

உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை✋🏻 மற்றும் உள்ளங்கால்கள்🦶🏻 மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். 

இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை💪🏻

தட்டில் இருக்கும் நூடுல்சை 🍜ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.



நமது பாதங்களை🦶🏻🦶🏻 பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன


இதயம் ❤️ ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)


நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, 

இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 

3 பவுண்டு கால்சியம், 

20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 

10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு 

ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என 

பல பொருட்கள் உள்ளன!!

உடலின்மொழி.

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். 

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Sunday, July 16, 2023

✍🏻🎡🎡இயற்கை வாழ்வியல் முறை🎡🎡ஊஞ்சல் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்.

✍🏻🎡🎡இயற்கை வாழ்வியல் முறை🎡🎡ஊஞ்சல் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்.


🎡🎡🎡🎡🎡🎡

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது

🎡🎡🎡🎡🎡🎡🎡

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

🎡🎡🎡🎡🎡🎡

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.



🎡🎡🎡🎡🎡🎡

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

🎡🎡🎡🎡🎡🎡

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

🎡🎡🎡🎡🎡🎡

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.



🎡🎡🎡🎡🎡🎡

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

🎡🎡🎡🎡🎡🎡

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

🎡🎡🎡🎡🎡🎡

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.



🎡🎡🎡🎡🎡🎡

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

🎡🎡🎡🎡🎡🎡

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

🎡🎡🎡🎡🎡🎡

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

Saturday, June 17, 2023

✍🏻இயற்கை வாழ்வியல் முறை🕊️🐚🐚கிணற்றுப்பாசான் நன்மைகள்.

✍🏻இயற்கை வாழ்வியல் முறை🕊️🐚🐚கிணற்றுப்பாசான் நன்மைகள்.


🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான் இதை தாத்தா செடி என்று அழைப்பார்கள் இந்த தாத்தா செடி இன்னும் பல பெயர் இதற்க்கு உண்டு .

🐚🐚🐚🐚🐚🐚

1. கைமூக்குத்திப்பூ,

2. காயப்பச்சிலை,

3. கிணற்றடிப் பூண்டு,

4 தலைவெட்டியான்,

5. கிணற்றுப்பாசான்.


🐚🐚🐚🐚🐚🐚

என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை இது. காயங்களை ஆற்றுவதில் வல்லமை பெற்றது.! மழைக் காலங்களில் அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் கிடைக்கும் ஒரு அற்புத மூலிகை இது. நீர் ஓட்டம் உள்ள செம்மண் நிலத்தில் தனாகவே வளரும் செடி. இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும். கொப்புளங்கள், தீ கயங்கள் மீதும் இதன் சாற்றை தடவலாம் இலையை பரிக்கும் முன் கையை சுத்தமாக கழுவவும் விவசாயம் செய்பவர்கள் ம்ற்றும் கல் உடைப்பவர்கள் இன்றும் இதை அருமருந்தாக பயன் படுத்துகின்றனர் கிணற்று பாசான் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

🐚🐚🐚🐚🐚🐚

குடற்புண் இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையெடுத்து இரண்டு முறை மென்று துப்பிவிட வேண்டும் பல்லின் விஷம் வெளி வந்து விடும். முன்றாம் முறை மென்று விழுங்க வேண்டும் குடற்புண் ஆற்றும் குடல் புற்று நோயை தடு்க்கும்.

🐚🐚🐚🐚🐚🐚

இந்த பூவை 5,6 பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பல் வலி் சொத்தை பல் பூச்சிகள் வெளியேறி விடும் பார்க்கும் போது சாப்பிடுங்கள்

🐚🐚🐚🐚🐚🐚

சர்க்கரை நோயாலியின் புண்களும் எளிதில் ஆறும் பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது இந்த செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.


🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான்  இலை சாறு சளி பிரச்சனைக்கும், அதனால் ஏற்படும் தலைவலி, தலையில் நீர் கோர்வையினால் ஏற்படும் தலைவலி, மற்றும் தலைபாரம் நீக்கவும் உபயோகப்படுத்தப் படுகிறது. இதன் சாற்றை மிளகு ரசமாக வைத்து சளி இருக்கும் நேரங்களில் சாப்பிட்டு வர சளி தொந்தரவு நீங்கும்.

🐚🐚🐚🐚🐚🐚

காயம் ஏற்பட்டு இரத்தம் வரும் இடங்களில் இதன் சாற்றை நேரடியாத பிழிந்து விட, இரத்தம் உறைந்து காயம் விரைவில் குணமடைய இது பயன்படுத்தப் படுகிறது. வெட்டு காயங்களில் சீழ் பிடித்து புரையோடுவதை தடுக்க இதன் இலை சாறும், பசையும் பயன்படுத்தப்படுகிறது. வெட்டுக்காயங்கள் குணமாக  பயன்படுவதால் தான் வெட்டுக்காயப் பூண்டு அல்லது வெட்டுக்காயப் பச்சிலை என்ற காரணப் பெயர் இதற்கு உண்டு

🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான் இலை சாறு தோல் தொற்று நோய்கள் உள்ள இடங்களில் தடவி வர, தொற்றை கட்டுப்படுத்தி அவை குணமாக  பயன்படும். தோலில் ஏற்படும் சூட்டு கொப்பளங்கள், மற்றும் தீயினால் ஏற்படும் கொப்பளங்களுக்கும் இதன் சாற்றை பயன் படுத்தலாம்

🐚🐚🐚🐚🐚🐚

பின்-குறிப்பு : எந்தவொரு மூலிகையையும் நீங்களாகவே பயன்படுத்துவது நல்லதல்ல. ஒவ்வொருக்கும் நோயின் தன்மையும், காரணமும் வேறுபடும். நீங்கள் உங்களின் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று அதன்பின் உபயோகப்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும்.


🐚🐚🐚🐚🐚🐚

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

Sunday, March 19, 2023

✍🏻🥭🥭இயற்கை வாழ்வியல் முறை🕊️🥭🥭மாம்பழம் நன்மைகள்.

✍🏻🥭🥭இயற்கை வாழ்வியல் முறை🕊️🥭🥭மாம்பழம் நன்மைகள்.


🥭🥭🥭🥭🥭

மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

🥭🥭🥭🥭🥭

மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும் பசியைத் தூண்டும்.

🥭🥭🥭🥭🥭

மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம் மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால் புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

🥭🥭🥭🥭🥭

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும் கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.


🥭🥭🥭🥭🥭

தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும். ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

🥭🥭🥭🥭🥭

மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.

🥭🥭🥭🥭🥭

சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும் இதனை சரும நோய் வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது சூட்டைக் கிளப்பும்.

🥭🥭🥭🥭🥭

மாம்பழம் புற்றுநோய் குடல் இறக்கம் இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.


🥭🥭🥭🥭🥭

மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும் நரம்பு தளர்ச்சியை போக்கும்.

🥭🥭🥭🥭🥭

மாம்பழச்சாறு பித்தம் மயக்கம் தலைவலியை தீர்க்கும்  மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்‌ ரத்தஓட்டம் சீராகும் கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை தீர்க்கும்.

🥭🥭🥭🥭🥭 

ஏனெனில் இது சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல சத்துக்களும் அதிகம் நிறைந்த பழமாகும் மாங்காய் மட்டுமின்றி அதன் மர இலைகள் கூட ஏராளாமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது என்பது பலரும் அறியாத ஒன்று.

🥭🥭🥭🥭🥭

மா இலைகள் பல நோய்களை குணப்படுத்த கூடியவை அதே நேரம் காயங்களுக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படக்கூடியவை வைட்டமின் சி  ஏ மற்றும் ப நிறைந்துள்ள இந்த இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது  தென் கிழக்கு ஆசியாவில் இதனை உணவாகவே சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் நாம்தான் இதனை வீட்டு வாசலில் தொங்கவிடுவதோடு நிறுத்திவிடுகிறோம்‌  மா இலையின் பல்வேறு மருத்துவ குணங்களை பற்றி இங்கு காணலாம்.

🥭🥭🥭🥭🥭

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு மா இலை ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். மா இலையின் கொழுந்து இலைகளில் டானின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது ஆரம்பகால சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும் இந்த இலைகளை காயவைத்து பொடியாக்கி தேநீர் தயாரித்து குடிக்கலாம் அல்லது இரவு முழுவதும் இலைகளை நீரில் ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும் மேலும் இது ஹைபர்கிளேசிமியாவை குணப்படுத்துவதிலும் பயன்படுகிறது.


🥭🥭🥭🥭🥭

இரத்த அழுத்தத்தைகுறைக்கிறது மா இலையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் உள்ளது இவை இரத்த நாளங்களை வலிமைப்படுத்தி வெரிகோஸ் நோயை குணப்படுத்துகிறது கொழுந்து இலைகளை உங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தாலே போதும் உங்கள் உயர் இரத்த அழுத்தம் தானாக குறையும் ஓய்வின்மைபதட்டத்தால் அமைதியற்று சிரமப்படுபவர்களுக்கு மா இலை ஒரு மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும்.

🥭🥭🥭🥭🥭

நீங்கள் குளிக்கும் நீரில் சில மா இலைகளை போட்டு ஊறவைத்து பின்னர் குளியுங்கள். இது உங்கள் பதட்டத்தை போக்கி உங்களை புத்துணர்ச்சியாக உணர செய்யும். அதனால்தான் கோவில்களில் தீர்த்தங்கள் மா இலை மூலம் வழங்கப்படுகிறது.

🥭🥭🥭🥭🥭

சிறுநீரக கற்கள் மா இலைகள் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்க கூடியது தினமும் மா இலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

🥭🥭🥭🥭🥭

சுவாச பிரச்சினைகள் அனைத்து விதமான சுவாச பிரச்சினைகளுக்கும் மா இலைகள் சிறந்த தீர்வாக இருக்கிறது. குறிப்பாக சளி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்களுக்கு இது மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும். மா இலையை கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து கசாயமாக குடித்தால் சில நிமிடங்களில் இருமல் குணமாகும். மேலும் இது குரல் இழப்பையும் சரி செய்யும்.

🥭🥭🥭🥭🥭

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கை உடனடியாக குணப்படுத்த மா இலையை பயன்படுத்தலாம். மா இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி அதனை நீரில் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடித்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக குணமடையும்

🥭🥭🥭🥭🥭

காது வலி என்பது அதிக வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்த கூடிய  ஒரு வலியாகும் வீட்டு மருத்துவமான மா இலை இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்  மா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு சிறந்த காது மருந்தாகவும், வலி‌ நிவாரணியாகவும் வேலை செய்யும் இந்த சாறை பயன்படுத்துவதற்கு முன் சிறிது சூடுபடுத்தவும்

🥭🥭🥭🥭🥭

காயங்களைகுணப்படுத்தும் காயம் ஏற்பட்டு அந்த இடம் எரிந்தால் அதற்கு மா இலை எளிய நிவாரணத்தை வழங்கும் மா இலையை எரித்து அந்த சாம்பலை காயம் பட்ட இடங்களிலும்  எரியும் இடங்களிலும் பூசினால் போதும். இது எரிச்சலை உடனடியாக கட்டுப்படுத்தி காயத்தை குணப்படுத்த தொடங்கும்

🥭🥭🥭🥭🥭

விக்கல் உங்களுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்தாலோ அல்லது வேறு ஏதேனும் தொண்டை பிரச்சினை ஏற்பட்டாலோ அதனை குணப்படுத்த மா இலை சரியான வீட்டு மருந்தாகும் சில மா இலைகளை கொளுத்தி அந்த புகையை சுவாசிக்கவும் இது உடனடியாக உங்கள் விக்கலை நிறுத்துவதோடு தொண்டை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

🥭🥭🥭🥭🥭

குடலுக்கு நல்லது சூடான நீரில் சில மா இலைகளை போடவும் பின்னர் இதனை மூடி வைத்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். அடுத்தநாள் காலை இதனை வடிகட்டி இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை தொடர்ச்சியாக செய்து வரும்போது உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உங்கள் வயிறு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.

🥭🥭🥭🥭🥭 

மாங்கொட்டையின் பயன் வயிற்றுப்போக்கு தொடர்ந்து போகும்போதுஉடலில் உள்ள நீர் மொத்தமாக வெளியேறி உடல் வறண்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும் மாம்பருப்பு அந்த பாதிப்பைப் போக்கும் மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து பருப்பை எடுத்து சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு வறுத்து ஆறவைத்து அரைத்து பொடியாக்கி அத்துடன் ஓமப்பொடி சுக்குப்பொடி கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டுஅதில் பாதி தேக்கரண்டி அளவு எடுத்து  நெய் சேர்த்து குழைத்து வாயிலிட்டு விழுங்க, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

🥭🥭🥭🥭🥭

கர்ப்பிணிப் பெண்கள் மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும் மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.

🥭🥭🥭🥭🥭

உடல் பருமன்  உடல் எடைக்குறைப்பிற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம் அதற்கு மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம் மாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம் மாங்கொட்டை கொழம்பு, கிராமங்களில் இன்றும் ஃபேமஸ், மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள்  அதையும் முயன்று பார்க்கலாம் இதன்மூலம் சமச்சீரான உணவு கிடைத்து உடல் எடையைக்குறைக்கமுடியும்.

🥭🥭🥭🥭🥭

கொழுப்பு உடலில் அதிகமாக சேர்ந்த கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு தொல்லைகளைத்தருகிறது வயதாகும்போது உடலிலுள்ள கொழுப்புகளைக்குறைத்து  எடையை சீராக வைத்துக்கொள்வது, அவசியமாகும். உணவில் மாம்பருப்பு பொடியை சேர்த்துவரலாம்  அல்லது பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவரலாம் இதன்மூலம் கொழுப்பைக் கரைக்கமுடியும்.

🥭🥭🥭🥭🥭

உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும்  மாம்பருப்பு பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்  கண் பார்வையும் தெளிவு பெறும் இதயத்தூய்மை என்றவுடன் ஏதோ  தத்துவ வகுப்போ, போதனைகள் செய்து நம்மை நூடுல்ஸ் ஆக்கி நெளிய வைத்துவிடுவார்களோ என்ற அச்சம்வேண்டாம். இது உடல்ரீதியானது மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி இதயம், துடிப்பாக செயல்படும் இதனால் இதய நோய்கள் எல்லாம் எட்டாத தூரத்துக்கு ஓடிவிடும்

🥭🥭🥭🥭🥭

நீரிழிவு நோய் சர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு மாங்கொட்டையின் பருப்பு அருமருந்து மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம் இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம் உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை நெருங்கவிடாது மாம்பருப்பு தூள்.

🥭🥭🥭🥭🥭

மாம்பருப்பு பொடியை தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.


🥭🥭🥭🥭🥭

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு. துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம...