அண்டக்கதிர் இயற்பியலில் சுதக்கோவ் விளைவு கண்டறிந்த ரஷ்யா இயற்பியலாளர் அலெக்சாந்தர் எவ்கனீவிச் சுதக்கோவ் பிறந்த நாள் இன்று (ஜூன் 16, 1921).
அலெக்சாந்தர் எவ்கனீவிச் சுதக்கோவ் (Aleksandr Evgenievich Chudakov) ஜூன் 16, 1921ல் ரஷ்யாவில் பிறந்தார். 1948ல் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். இவர் 1953ல் நிலைமாறும் அல்லது நிலைபெயரும் கதிர்வீச்சு நிலவுதலை செய்முறை வாயிலாக உறுதிப்படுத்தினார். கோட்பாட்டியலாக இதை 1945 இலேயே முன்கணித்தவர்கள் விதாலி கின்சுபர்கும் இலியா ஃபிரான்கும் ஆவர். குறுகிய மின்னன்-நேர்மின்னன் இணைகளில் மின்னணுவாக்க இழப்புகள் குறைந்துகொண்டேபோகும் விளைவை இப்போது சுடகோவ் விளைவு எனப்படுகிறது. சுடகோவ் விளைவைப் போன்றதொரு நிகழ்வு குவைய வண்ன இயங்கியலிலும் ஏற்படுவது காணப்பட்டுள்ளது.
ஏவுகலங்களையும்
செயற்கைக்கோள்களையும் பயன்படுத்தி 1950 களில் சுடகோவ்
பல அண்டக்கதிர் ஆய்வுகளை வளிமண்டலத்துக்கு வெளியே மேற்கொண்டார். இதன்வழி இவர்
சுபுட்னிக்-3 ஐப் பயன்படுத்தி எஸ்.என். வெர்னோவுடன்
இணைந்து வான் ஆலன் பட்டை எனும் புவியின் கதிர்வீச்சுப் பட்டையைக் கண்டறிந்தார். சுதக்கோவ் 1961ல் சத்சேபினுடன் இணைந்து காமாக்கதிர் வானியலுக்கான செர்ன்கோவ்
கதிர்வீச்சு முறையை முன்ம்ழிந்தார். மேலும் கிரீமியாவில் உள்ள
காத்சிவெலியில் அதற்கான முன்னோடி செய்முறையையும் செய்துகாட்டினார்.
சுதக்கோவ் 1960 களின் நடுவில் இருந்து பாக்சான் நொதுமன் வான்காணகம்/நிலத்தடி மிளிர்வுத் தொலைநோக்கி வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் தலைமையேற்றார். இந்த ஆய்வகம் 1978ல் இயங்கத் தொடங்கியது. இது நிலத்தடி இயற்பியல் ஆய்வுக்கான பன்முக ஏந்துகளைக் கொண்டதாகும். வானியற்பியலில் இன்றும் இயங்கும் இந்த தொலைநொக்கியைப் பயன்படுத்தி முதல் தரமான முடிவுகள் பெறப்படுகின்றன.
எவ்கனீவிச் சுதக்கோவ் அவரால் கண்டறியப்பட்ட சுதக்கோவ் விளைவால் பெயர்பெற்றவர். சுதக்கோவ் விளைவு என்பது குறுகிய மின்னன்-நேர்மின்னன் இணைகளில் மின்னணுவாக்க இழப்புகள் குறைந்து கொண்டே போகும் விளைவைக் குறிக்கிறது. மேலும் இவர் நிலைமாறும் அல்லது நிலைபெயரும் கதிர்வீச்சு நிலவுதலை செய்முறை வாயிலாக உறுதிப்படுத்தினார். இவர் தூய, பயன்முறை இயற்பியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் அண்டக்கதிர் ஆணையத்துக்குத் தலைவராக விளங்கினார்.
சுதக்கோவ்
விளைவு கண்டறிந்த ரஷ்யா இயற்பியலாளர் அலெக்சாந்தர் எவ்கனீவிச் சுதக்கோவ் ஜனவரி 25,
2001ல் தனது 79வது அகவையில் மாஸ்கோ, ரஷ்யாவில் இவ்வுலகை விட்டு
பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment