Monday, August 31, 2020

குவைய நிற இயக்கவியலில் (Quantum chromodynamics) கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹக் டேவிட் பொலிட்ஸர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1949).

குவைய நிற இயக்கவியலில் (Quantum chromodynamics) கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹக் டேவிட் பொலிட்ஸர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1949). 

ஹக் டேவிட் பொலிட்ஸர் (Hugh David Politzer) ஆகஸ்ட் 31, 1949ல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆலன் மற்றும் வாலெரி பொலிட்ஸர். இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் மருத்துவர்கள். பொலிட்ஸர் 1966ம் ஆண்டில் பிரான்க்ஸ் அறிவியல் பள்ளியில் படித்தார். பின்னர் 1969ம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றார். 1974ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் (PhD) பெற்றார். அங்கு அவரது பட்டதாரி ஆலோசகர் சிட்னி கோல்மன் ஆவார். 1973 ஆம் ஆண்டில் வெளிவந்த தனது முதல் வெளியிடப்பட்ட கட்டுரையில், நெருக்கமான குவார்க்குகள், பலவீனமான வலுவான தொடர்பு அறிகுறியற்ற சுதந்திரத்தின் நிகழ்வை விவரித்தார்.

 



குவார்க்குகள் தீவிர அருகாமையில் இருக்கும்போது, ​​அவற்றுக்கிடையேயான அணுசக்தி மிகவும் பலவீனமாக இருப்பதால் அவை கிட்டத்தட்ட இலவச துகள்களைப் (free particle) போலவே செயல்படுகின்றன. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கிராஸ் மற்றும் வில்கெக் ஆகியோரால் ஒரே நேரத்தில் சுயாதீனமாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முடிவு குவாண்டம் குரோமோடைனமிக்ஸின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. தாமஸ் அப்பெல்கிஸ்டுடன், பொலிட்சர் "சார்மோனியம்" இருப்பதைக் கணிப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். இது ஒரு கவர்ச்சியான குவார்க் மற்றும் ஒரு கவர்ச்சியான பழங்காலத்தால் உருவான ஒரு துணைத் துகள். பாலிட்சர் 1974 முதல் 1977 வரை ஹார்வர்ட் சொசைட்டி ஆஃப் ஃபெலோஸில் ஜூனியர் சக ஊழியராக இருந்தார்.

 

2004 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் கிராஸ் மற்றும் பிரான்க் வில்செக் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில்(Quantum chromodynamics) அணுகு வழி சுதந்திரம் கண்டுபிடித்ததற்காக கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கு உரையாற்றிய கடிதத்தில் கையெழுத்திட்ட இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற 20 அமெரிக்கர்களில் ஒருவரான பொலிட்ஸர், "2008 ஆம் நிதியாண்டு ஆம்னிபஸ் ஒதுக்கீட்டு மசோதாவில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு ஏற்பட்ட சேதத்தை மாற்றியமைக்குமாறு அவரை வலியுறுத்தினார். பொலிட்ஸர் 2011ல் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த சிறந்த இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1950).

எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த சிறந்த இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1950).

 


சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை)  ஏப்ரல் 5,1901ல் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில் பிறந்தார். ஒரு வயதில் தன் தாயை இழந்தார். பள்ளி இறுதி ஆண்டில் தன் தந்தையையும் இழந்து துன்பப்பட்ட சமயம் சாஸ்திரியார் என்ற ஆசிரியர் இவரை ஆதரித்து ஊக்கம் கொடுத்தார். பிறகு நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் தனது புகுமுகப்பு வகுப்பு (intermediate class) படித்து விட்டு, திருவனந்தபுரத்தில் இருந்த மஹாராஜா கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சிக்கான ஸ்காலர்ஷிப் கிடைக்கப் பெற்று, அப்போது புகழ் பெற்ற கணித பேராசியர்கள் ஆனந்த ராவ் மற்றும் வைத்தியநாதஸ்வாமியுடன் இணைந்து எஸ்.எஸ்.பிள்ளை கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின்னர் அண்ணாமலை பல்கலைத்தில் பணிபுரியும்போது தொடர்ந்து எண்கணிதம் என்ற கணிதப் பிரிவில் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

 

இந்த ஆராய்ச்சியில் அவர் அடைந்த உயரங்கள் பிரமிக்கத்தக்கவை. கணிதத்தில் அன்றிருந்த மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் D.Sc  பட்டம் பெற்ற முதல் கணிதவியலாளர் பிள்ளை அவர்கள்தான். பிள்ளை அவர்கள் வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது.  பிள்ளை அவர்களுக்கு கோட்டு, டை போடுவது கூட பிடிக்காது. தன் வீட்டிற்கு வரும் வெளிநாட்டு விருந்தினருக்கும் இலை போட்டு தரையில் அமர்த்தி தமிழ் முறைப்படி தான் உணவு உபசரிப்பு நடக்குமாம். ஆனால் இவர் எந்தப் புகழுக்கும் ஆசைப்பட்டவரில்லை.  எந்த ஒரு கணிதம் மற்றும் அறிவியல் கழகங்களில் உறுப்பினராகக் கூட இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளை அவர்கள் பெயரை C.V  ராமன் அவர்கள் இந்திய அறிவியல் கழகத்தின் ஃ’பெல்லோஷிப்பிற்கு பரிந்துரைத்தற்கான கடிதம் ஒன்று இருக்கிறது. K. ராமச்சந்திரா என்ற கணிதவியலாளர் ஒரு முறை இந்தியக் கணித வரலாற்று நிபுணர் ஒருவரிடம் உரையாடும்போது அவர் பிள்ளை அவர்களை அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

 


76 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அவை பெரும்பாலும் எண் கோட்பாட்டைப்பற்றியும் டயோபாண்டஸ் தோராயத்தைப் பற்றியும் இருந்தன.  வாரிங் பிரச்சினையில் கண்டுபிடிப்பு எண் கோட்பாட்டில் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்து சரித்திரம் படைத்தார். 1909இல் டேவிட் ஹில்பர்ட் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஓர் அடிப்படைத் தேற்றத்தை நிறுவினார். ஹில்பர்ட்-வாரிங் தேற்றம்: ஒவ்வொரு நேர்ம முழு எண் k க்கும் g(k) என்ற ஒரு மீச்சிறு நேர்ம முழு எண் கீழுள்ள பண்புடன் இருக்கும்: எந்த நேர்ம முழு எண்ணையும் g(k) எண்ணிக்கை கொண்ட k - அடுக்குகளின் கூட்டுத் தொகையாகக் காட்டலாம். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக எல்லா முழுஎண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை g(k)யாகும்.

 

அவர் கண்டுபிடித்த ஒருவித பகா எண்களுக்கு பிள்ளை பகா எண்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. முந்நூறு வருஷங்களாக தீர்க்க முடியாமல் இருந்த கணித மேதைகளையெல்லாம் திக்குமுக்காட செய்த வாரிங்ஸ் அனுமானம் என்ற புதிரை விடுவித்ததோடு அதற்கு விடையும் கண்டவர். இவ்வளவு திறமை வாய்ந்த இளம்மேதையை எப்படியும் தன்னுடைய சர்வகாலசாலைக்கு கொத்திக் கொண்டு வந்து விடவேண்டும் என சர். சிபி ராமசாமி ஆசைப்பட்டு தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால் டாக்டர் எஸ்எஸ் பிள்ளையின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது. தன்னுடைய எண் கணித ஆராய்ச்சிக்கு அண்ணாமலையின் அமைதியான ஆக்ஸ்போர்டு சூழ்நிலை அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. வாரிங்ஸ் அனுமானத்திற்கு விடை கண்டு, அதன் மூலம் உலக புகழ் பெற்றதெல்லாம் இந்த சூழ்நிலையின்தான்.

 


படிப்பதற்கு புத்தகங்களும், பழகுவதற்கு அறிஞர்களும் அங்கு அதிகமாக இருப்பதால் அவருக்கு அண்ணாமலையை விட்டு வர மனமில்லை. எஸ்எஸ் பிள்ளையின் குடும்பமோ நடுத்தரத்திற்கும் சற்று குறைவான குடும்பம். அதே நேரத்தில் அவர் சங்கோஜப் பிறவியும் கூட. கடின உழைப்பும், எண் கணிதமுமே அவர் கண்ட உலகம். இவரை ஒரு கட்டுபாட்டிக்குள் வைத்திருப்பது புயலை பெட்டிக்குள் வைத்திருப்பது போல. ஒரு சமஸ்தானத்து திவானே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கும்போது வருவதற்கு என்ன. படிச்சிருந்து என்ன செய்ய, என்று அவருக்கு வேண்டியவர்கள் எல்லாம் மிகவும் சங்கப்பட்டார்கள். பிறகு எப்படியோ செங்கோட்டையில் உள்ள பெரிய மனிதர்களும், உறவினர்களும் ஒன்று சேர்ந்து அண்ணாமலைக்கு வந்து ஒரு முற்றுகை போராட்டமே நடத்தி பிள்ளையை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

 

ஒரு வழியாக 1940-41-ல் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை திருவனந்தபுரம் வந்து வேலையில் சேர்ந்தார். டாக்டர் பிள்ளையின் வாழ்க்கை தொடங்கிற்று. இவர் வேலைக்கு சேர்ந்த மறுவருஷம், வடநாட்டில் நடந்த சயின்ஸ் காங்கிரஸூக்கு இவரை விட்டு விட்டு இன்னொருவரை திருவாங்கூர் சர்க்கார் தேர்ந்தெடுத்து விட்டது. சர்.சி.பி வெளிநாடு போயிருந்தபோது இது நடந்தது. அவ்வளவுதான், டாக்டர் பிள்ளை உடனே வேலையை ராஜினமா செய்துவிட்டு திவானுக்கு ஒரு காகிதத்தை மாத்திரம் எழுதி தபாலில் போட்டு விட்டு செங்கோட்டை ரயில் ஏறி விட்டார். இதை அறிந்த டாக்டர் பிள்ளையின் நண்பரும், ஜெர்மனிய நாட்டு கணித மேதையுமான டாக்டர் எப்.டபிள்யு லெவின் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்கத்தா சர்வகாலசாலைக்கு அவரை அழைத்துக் கொண்டார். அப்போதைய துணை வேந்தர் சியாம பிரசாத் முகர்ஜியும் டாக்டர் பிள்ளைக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்தார். சர்வதேச கணித அமைப்புகள் இவருடைய ஆராய்ச்சியை போற்றிப் புகழ்ந்தன. கணித உலகெங்கும் இவருடைய பெயர் பிரபலமடைந்தது. டாக்டர் எஸ்எஸ்பிள்ளையின் எண் கணித கோட்பாடு (Dr. S.S. Pillai's Theory of Number) என்றே ஒரு சூத்திரமும் கணிதயியலில் நிரந்தரம் ஆகிவிட்டது.

 

ராமானுஜத்தை பற்றி ஹார்டி எழுதிய 12 வால்யூம் உள்ள புத்தகத்தில், ஒரு வால்யூம் இவரை பற்றி எழுதினார். டாக்டர் பிள்ளையை நினைக்கும் போதெல்லாம் நேச்சர் என்ற உலகப் புகழ் பெற்ற இதழில் டாக்டர் இ.டி பெல் என்ற மேல்நாட்டு மேதை எழுதிய உலகப் புகழ் பெற்ற சாதனைகளை செய்தவர், டாக்டர் எஸ்எஸ் பிள்ளை என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் பிறந்த செங்கோட்டையில் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை தெரு என்ற பெயர் பலகையை பார்க்கும் போதெல்லாம் அந்த அறிஞரின் சாதனை நமக்கு பெருமை சேர்க்கின்றன.

  


இப்படி புகழின் உச்சியில் டாக்டர் எஸ்எஸ்பிள்ளை இருக்கும்போது சான்பிரான்சிகோ கணித மாநாட்டில் தலைமை தாங்க அழைப்பு வந்தது. துரதிருஷ்டவசமாக ஆகஸ்ட் 31, 1950ல் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு செல்லும் போது கெய்ரோவில் நடந்த விமான விபத்தில் தனது 49வது அகவையில் உயிரிழந்தார். அது இந்தியக் கணிதத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமேயில்லை. சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்ட கணித மேதைகள் அவருக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர். அவரது உருவப் படம் மாநாட்டில் திறந்துவைக்கப்பட்டது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Sunday, August 30, 2020

செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம் - தமிழக அரசு.

செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம் - தமிழக அரசு.

 


சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி. அளித்தது தமிழக அரசுமால்கள்அனைத்து ஷோரூம்கள்பெரிய கடைகள் அனைத்தும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதிதமிழகம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8 மணி வரை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதிபொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி.பாஸ் நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

 

பள்ளிகள்கல்லூரிகள்ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கலாம். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல்,ஏற்காடு போன்ற அனைத்து மலைவாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் -பாஸ் பெற்று செல்ல அனுமதிஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் முதல் ரத்துபூங்காக்கள்விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதிவிளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாதுமத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்குத் தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு இன்று அறிவிப்பு.

 

செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறன் மற்றும் தொழில்பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் அதன்சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படிஎந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். திரையரங்குகள்நீச்சல் குளங்கள்பொழுதுபோக்கு பூங்காக்கள்பெரிய அரங்குகள்கூட்டரங்குகள்கடற்கரைஉயிரியல் பூங்காக்கள்அருங்காட்சியகங்கள்சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு முன்பு இருந்த தடைகள் தொடரும்.

 


மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை தொடரும். மதம் சார்ந்த கூட்டங்கள்சமுதாயஅரசியல்பொழுதுபோக்குகலாச்சார நிகழ்வுகள்கல்வி விழாக்கள்பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கை - 30.8.2020  <----- PDF File.

எலக்ட்ரானைக் கண்டுபிடித்த நவீன அணு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் ஜெ.ஜெ. தாம்சன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 30, 1940).

எலக்ட்ரானைக் கண்டுபிடித்த நவீன அணு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் ஜெ.ஜெ. தாம்சன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 30, 1940).

 


சர் ஜோசப் ஜான் தாம்சன் (Joseph John Thomson) டிசம்பர் 18, 1856ல் இங்கிலாந்தின் மான்செசுடரில் உள்ள சீத்தம் குன்று என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870ல் மான்செசுடரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'ஆதம்சு பரிசை' வென்றார். அதன் காரணமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது.

 

1883ல் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார். ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் ஜார்ஜ் பேஜட் தாம்சன் மிகச்சிறந்த இயற்பியல் பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937ல் பரிசையும் வென்றார். தாம்சன் முதன்முதலில் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து நீர்ச்சுழி வளையங்களின் இயக்கத்தில் ஆய்வு (Treatise on the motion of Vortex Rings) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அது 1884ல் ஆதம்சு பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. 1886ல் இயற்பியல், வேதியலில் இயக்கவியலின் தாக்கம் (Application of the Dynamics to Physics and Chemistry) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.

 


1892ல் 'மின்சாரவியல், காந்தவியலில் அண்மை ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்' (Notes on Recent Researches in Electricity and Magnetism) என்ற நூலை வெளியிட்டார். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எழுதிய நூலின் விளக்கவுரையாக அவருடைய நூலுக்கு மூன்றாவது தொகுதியாக இது அமைந்திருந்தது. பேராசிரியர் பாண்டிங் (J.H.Poynting) என்பவருடன் இணைந்து இயற்பியலுக்கான பாடத்தைப் 'பொருளின் குணங்கள்'(Properties of Matter) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருந்தார். தாம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (Cathode Ray Tube) உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் எஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும். ஓர் எலக்ட்ரோ மீட்டரின் உதவி கொண்டு, குழாயில் பல வெட்டுத்துளைகளை உருவாக்கி காந்தப் புலத்தின் உதவி கொண்டு ஆராய்ந்தார். இக்கதிர்களிலிருந்து எதிர் மின்துகளைத் தனியே பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தார்.

 


இரண்டாவதாக மின்புலத்தினால் இக்கதிர்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அராய்ந்தார். அதற்கு வெற்றிடக் குழாயையும் ஒளிருன் தன்மையையும் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார். மூன்றாவது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட -நிறை விகிதத்தைக் (Charge-mass ratio) கண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் 'துகள்கள்(Corpuscles)’ என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை மின்னணு என்று உறுதிப் படுத்தினார். பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் நவீன அணு இயற்பியலின் தந்தை என்று போற்றப்பட்டார்.

 


1895ல் 'கணிதவியலின் ஆதாரக் கூறுகள்', 'மின்சர, காந்தவியலின் கோட்பாடுகள்' என்ற இரு நூல்களையும் வெளியிட்டார். அவை 1921ல் ஐந்தாவது வெளியீடாகவும் வெளியிடப்பட்டன. 1896ல் தாம்சன் அமெரிக்கா சென்றர். இவருடைய அணமைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலண்டன் இராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது தான் கண்டறிந்த மின்னணு துகளைப் பற்றி அறிவித்தார். ஏப்ரல் 30, 1897 வெள்ளியன்று இதை அறிவித்தார். 1903ல் அவர் வெளியிட்ட "வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல்" என்ற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். 'கேவண்டிசு ஆய்வுக்கூடத்தில் தாம்சனின் முக்கியமான பெரிய நாள்கள்' என்ற தலைப்பில் இந்த நூல் இவருடைய மகன் ஜார்ஜ் தாம்சனால் பிற்காலத்தில் (1928, 1933 ஆகிய ஆண்டுகளில்) இரண்டு பதிப்புகளில் வெளியிடப்பட்டது. 1904ல் மீண்டும் அமெரிக்கா சென்றார். பொருள்கள் மற்றும் மின்சாரம் பற்றி யேல் பலகலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். 'அணுவின் அமைப்பு' பற்றிய இவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டன.

 



நேர்மின் கதிர்களைக் கொண்டு வெவ்வேறு வகையான அணுக்களையும் மூலக்கூறுகளையும் பிரிப்பது பற்றிய ஆஸ்டன், டெம்ப்ஸ்டர் போன்ற அறிவியலறிஞர்களுடைய கருத்துகளின் மூலமாகப் பல ஐசோடோப்புகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு முறையைப் பற்றி விளக்கினார். நியான் வாயுவைப் பகுத்து இவர் செய்த ஆய்வின் மூலம் ஐசோடோப்புகளின் கலவையாக சில தனிமங்கள் இருப்பதைத் தெளிவாக்கினார். அதன் அடிப்படையில் இவருடைய மாணவர்கள் ஆசுடன், டெம்ப்ஸ்டெர் ஆகியோர் இணைந்து நிறை நிலைமானி (Mass spectrograph) உருவாக்கினர். 1906ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 


ஒளி, பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ஆகியவற்றில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான ரூதர்போர்டுக்கு உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது. 1908 ல் இவருக்குத் தகுதி வரிசை மதிப்பு (Order of Merit) அளிக்கப்பட்டது. 1912 -ல் ஆங்கிலேயச் சங்கத்தின் தலைவரானார். ராயல் கழகத்தின்ன் சிறப்பு உறுப்பினர் பதவியும், அதன் பின் 1916 முதல் 1920 வரை அதன் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டது.

 

1918ல் டிரினிடி கல்லூரியின் முதல்வரனார். கேவண்டிஷ் ஆராய்ச்சி சாலையை அங்கு நிறுவினார். ராயல் ஹ்யூஜெஸ் பதக்கங்கள் (1894, 1902) வாசிங்டன் சுமித்சோனியன் நிறுவனத்தின் ஹாட்கின்ஸ் பதக்கம் (1902) ஸ்காட் பதக்கம் (பிலாடெல்பியா-1923) எனப் பல பதக்கங்களைப் பெற்று பெருமையடைந்தார். எலக்ட்ரானைக் கண்டுபிடித்த நவீன அணு இயற்பியலின் தந்தை சர் ஜெ.ஜெ. தாம்சன் ஆகஸ்ட் 30,1940ல் தனது 85வது அகவையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...