Wednesday, September 30, 2020

After October 15, schools, colleges and educational institutions can be decided by the state governments - Central government

After October 15, schools, colleges and educational institutions can be decided by the state governments - Central government.

Theaters, including swimming pools and amusement parks for athletes' training, are set to reopen from October 15. Theaters are only allowed to operate with 50 per cent seats. From October 5, hotels, including pubs, will be allowed to operate with 50 percent of the seats.

It has been reported that the state governments can decide on the opening of schools, colleges and educational institutions after October 15 after consulting the parents. The general freeze will be strictly followed until October 31 in restricted areas.

MHA Order Dt. 30.9.2020 on guidelines for re-opening<------Click link

அக்டோபர் 15-க்குப் பிறகு, பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம்- மத்திய அரசு

அக்டோபர் 15-க்குப் பிறகு, பள்ளிகல்லூரிகள்கல்வி நிறுவனங்கள் திறப்பது மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம்- மத்திய அரசு  

கரோனா பொது முடக்கத்தின் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5-ம் தேதி முதல்  ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு நேரில் வர விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் திறப்பு தொடர்பான, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை, அந்தந்த மாநில அரசுகள் தயார் செய்ய வேண்டும். கல்லுாரி மற்றும் உயர் கல்வி நிலையங்கள், இயங்கும் நேரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துடன், கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சகம் கலந்தாலோசித்து முடிவெடுத்து கொள்ளலாம். இங்கும், ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும். உயர் கல்வித்துறையில், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வக கல்வி தேவைப்படும் அறிவியல் மாணவர்களுக்கு மட்டும், வரும், 15 முதல் அனுமதி அளிக்கப்படும்.

பொது, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், ஆன்மிகம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில், 100 பேர் வரை பங்கேற்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை, 15க்கு பின் அதிகரிப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள, அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவுகள் அனைத்துமே, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை பொது முடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படும்.

MHA Order Dt. 30.9.2020 on guidelines for re-opening<----Click link.

Today (September 30, 1985) is the Memorial Day of the American physicist Charles Francis Richter who discovered the Richter scale.

Today (September 30, 1985) is the Memorial Day of the American physicist Charles Francis Richter who discovered the Richter scale. 

Charles Francis Richter was born on April 26, 1900, in Hamilton, Ohio, USA. His father's name was Fred W. Kinsinger. Mother Willian Anna Richter. Charles Richter survived cholera when he was 14 months old and struggled to survive. During his childhood, his parents divorced him due to a disagreement. So he lived in the warmth of his maternal grandfather. In 1909 his family moved to Los Angeles. His early education began at an elementary school affiliated with the University of Southern California. After finishing school he joined the University of Southern California at the age of 16. 

Interested in astronomy, Richter enrolled at Stanford University with a degree in physics as a major. He received his bachelor's degree in physics in 1920. He holds a PhD in Theoretical Physics from the California Institute of Technology. In 1927 he accepted the invitation of the Nobel Prize-winning scientist Robert Millikan, who was president of the Carnegie Training Institute in Washington, D.C., where he joined as a research assistant. There he found the friendship of Pino Gutenberg. This led to an interest in the study of earthquakes and the oscillations that occur on Earth. Pino joined the newly set up seismic laboratory in Pasadena, as shown by Gutenberg. In 1928 he married Lillian Brandt, a writer from Los Angeles. 

The Seismology Laboratory at the California Institute of Technology produced a series of reports of earthquakes in southern California at the time. Needs arose to record and explore its strengths as well. On the advice of Kiyoo Wadati, it became necessary to continuously measure the displacement of the earth generating seismic waves. Pino Gutenberg and Charles Richter then worked together to develop a seismograph. He used a logarithmic scale to measure its intensity. Richter has been interested in astronomy since childhood and named it the 'Richter Scale' after him. The Richter scale is not a physical instrument, but a mathematical formula. 

Although Gutenberg was instrumental in this study, his name was not included in the criteria due to his lack of interest in providing explanations for the study. It was published in 1935 and used in the process. Charles Richter worked at Carnegie until 1936, returning to the California Institute of Technology in 1937 to continue his research. In 1952 he became professor of earthquakes. In 1941, he co-authored and published a book, Earthquake, with Gutenberg. The book was republished in 1954. In 1958 he wrote and published a book, Basic Seismology. The book contains the necessary notes for teachers of undergraduate subjects.

Went to Japan in 1959-1960 as a Fulbright Scholar and played a key role in developing a course in seismic engineering with architectural engineering instructions on how to construct buildings in earthquake prone areas. Richter's warnings were heeded after a major earthquake in Los Angeles in 1971. Member of the American Academy of Arts and Sciences and President of the American Seismological Institute. But he was not elected a member of the country's National Academy of Sciences.

After retiring from work in 1970 as a nature enthusiast he became interested in going with his wife to places where there were 'undressed people's living in the world where there were naked people living. His hobby was engaging in Carnatic music, reading science fiction and watching TV series. One of his favorite pastimes is hiking in the mountains of Southern California. Charles Francis Richter, who discovered the Richter scale, died of a heart attack on September 30, 1985, at the age of 85 in Pasadena, California.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.

நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985).

நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த அமெரிக்க இயற்பியலாளர் சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985). 

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் பிரெட் டபிள்யூ கின்சிங்கர். தாயார் வில்லியன் அன்னா ரிக்டர். சார்லஸ் ரிக்டர் 14 மாதக் குழந்தையாக இருந்தபோது காலரா நோயால் பாதிக்கப்பட்டு பிழைப்பதே கடினம் என்ற நிலையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தார். இவருடைய சிறுவயதில் இவருடைய பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு பெற்று விலகினர். எனவே தாயார் வழித் தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்தார். 1909ல் இவரது குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறியது. தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தோடு இணைந்த தொடக்கப்பள்ளியில் இவருடைய இளவயதுக் கல்வி தொடங்கியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் தனது 16 வயதில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 

வானவியலில் ஆர்வம் கொண்டிருந்த ரிக்டர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். 1920ல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். கலிபோர்னியா தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1927ல் வாஷிங்டனில் உள்ள கார்னெகி பயிற்சி நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றி வந்த நோபல் பரிசு பெற்ற இராபர்ட் மில்லிகன்(Robert Millikan) என்ற அறிவியலறிஞரின் அழைப்பை ஏற்று அங்கு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு பைனோ கூட்டன்பர்க் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்நிலையில் புவியில் ஏற்படும் நில நடுக்கங்கள், அதன் காரணமாக உருவாகும் அலையியக்கங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பைனோ கூட்டன்பர்க் காட்டிய வழியில் பாசடேனா என்ற ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட நில நடுக்க ஆய்வுக் கூடத்தில் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். 1928ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த எழுத்தாள ஆசிரியராகப் பணியாற்றிவந்த லில்லியன் பிராண்ட்(Lillian Brandt) என்ற மங்கையைத் திருமணம் செய்துகொண்டார்.

 

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் நில நடுக்கவியல் ஆய்வுக்கூடத்தில், தெற்கு கலிபோர்னியாவில் அப்போது ஏற்பட்ட நில நடுக்கங்கள் பற்றிய ஒழுங்கான தொடர் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. அதனுடைய வலிமையையும் தொடர்ந்து எழ பதிவு செய்து ஆராயவேண்டிய தேவைகள் உருவாயின. கியூ வாடட்டி (Kiyoo Wadati) என்பவரின் ஆலோசனைப்படி நில நடுக்க அலைகளை உருவாக்கும் புவியின் இடப்பெயர்ச்சியைத் தொடர்ந்து அளக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது பைனோ கூட்டன்பர்க், சார்லஸ் ரிக்டர் இருவரும் அங்கு சென்று இணைந்து செயல்பட்டு நில நடுக்க வரைவுமானி (Seismograph) ஒன்றை உருவாக்கினர். அதனுடைய தீவிரத்தை(Intensity) அளப்பதற்கு மடக்கை அலகு (Logarthimic Scale) ஒன்றைப் பயன்படுத்தினார். ரிக்டர் சிறுவயதில் இருந்தே வானவியல் ஆர்வம் கொண்டவர் என்பதால் அவர் பெயரிலேயே இதற்கு 'ரிக்டர் அளவுகோல்' என்று பெயரிட்டனர். ரிக்டர் அளவுகோல் என்பது இயற்பியல் கருவியல்ல, கணித வாய்பாடு. 

இந்த ஆய்வில் கூட்டன்பர்க் அதிகளவில் உதவிய போதும், ஆய்வுக்கான விளக்கங்களை அளிப்பதில் அவருடைய ஆர்வமின்மையால் அவருடைய பெயர் இந்த அளவுகோலில் சேர்க்கப்படவில்லை. 1935ல் இது வெளியிடப்பட்டு செயல்முறையில் பயன்படுத்தப்பட்டது. 1936 வரை கார்னெகியில் பணியாற்றிய சார்லஸ் ரிக்டர் 1937ல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கே திரும்பச் சென்று ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தார். 1952ல் நிலநடுக்கப்பேராசிரியராகப் பணியேற்றார். 1941ல் இவர் கூட்டன்பர்க்குடன் இணைந்து ‘புவியின் நிலநடுக்கம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டனர். 1954ல் இந்நூல் மீண்டும் பதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1958ல் ‘அடிப்படை நிலநடுக்கவியல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இளநிலைப் பட்டப்படிப்புக்கு முற்பட்ட பாடங்களுக்குரிய ஆசிரியர்களுக்குத் தேவையான குறிப்புகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்தது. 

1959-1960ல் ஜப்பான் சென்றார் புல்பிரைட் விருது அறிஞராக (Fulbright Scholar) அங்கு சென்று, நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழக்கூடிய பகுதிகளில் கட்டடங்களை எப்படி அமைப்பது என்பதற்கான கட்டடப் பொறியியல் வழிமுறைகளைக் கொண்ட நிலநடுக்கப் பொறியியல் என்ற பாடத்திட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை மேற்கொண்டார். 1971ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ரிக்டரின் எச்சரிக்கைகள் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க கலை அறிவியல்கழக உறுப்பினர், அமெரிக்க நில நடுக்க ஆய்வுக் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்புகளை வகித்தார். ஆனால் அந்நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தில் இவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

 

1970ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் இயற்கை ஆர்வலர் என்ற முறையில் உலகில் ஆடை அணியாமல் நிர்வாண மக்கள் வாழ்ந்து வந்த மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களுக்கெல்லாம் மணைவியுடன் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதில் ஆர்வம் காட்டினார். கர்நாடக இசையில் ஈடுபாடு, அறிவியல் புனைகதைகளைப் படித்தல், தொலைக்காட்சித் தொடர்களைக் காண்பது இவருடைய பொழுதுபோக்காக இருந்தது. தென்கலிபோர்னியா மலைப்பகுதிக்குச் சென்று அங்கு நடைஉலா செல்வது இவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகினைக் கண்டறிந்த சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 30, 1985ல் தனது 85வது அகவையில் கலிபோர்னியாவில் உள்ள பாசடேனா என்ற ஊரில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Today (September 30, 1870) is the birthday of Nobel Prize-winning French-American physicist Jean Baptiste Perrin who confirmed the Albert Einstein's atomicity of matter.

Today (September 30, 1870) is the birthday of Nobel Prize-winning French-American physicist Jean Baptiste Perrin who confirmed the Albert Einstein's atomicity of matter. 

Jean Baptiste Perrin was born on September 30, 1870, in Lille, France. His father was an army officer. He died a heroic death in the French-Prussian War. So his mother suffered a lot to raise Perrin and his two sisters. Beren began his education at a local public school. He later completed his degree at the ‘Lycee Johnson de Ceili’ College in Paris. He enlisted in the army in 1891 due to compulsory military service. It was during this training that he became interested in physics. In 1897, Perrin married Enrique Duportel. They had a son and two daughters. 

In 1894-97, Bern joined Ecole Normale as a physics assistant. At that time, he was involved in the study of negative rays, X-rays. He presented them as a dissertation and obtained a doctorate in physics. Scientists then did not accept that negative rays emanate from the negative mouth when discharged into a vacuum tube. These rays are made up of negative particles. Disagreements also arose as to whether they were published in wave form. In the Perren studies of 1895, the most important conclusion was that the negative rays were deflected in a magnetic field. These are the opposite electrodes. He sought to find the ratio between the charge-mass of these particles. But J. J. Thompson found it in front of him. 

In physics in 1901, Brownian began to study motion and molecules. In 1928, Robert Brown wrote that 'submerged pollen continues to run erratically.' He said that. In 1905 Albert Einstein gave the explanation based on particle physics. ‘These are driven by water molecules. The distance traveled by a particle increases with the square of the time between them. As mentioned. Necessary adjustments were made to temperature, particle size, and working fluid, and Einstein clearly explained how particles work at a given time. In 1908, Perin confirmed Einstein's ideas through research.

 

Sophisticated microscopes developed in 1903 by scientists Richard Zeigmandy and Henry Siedentop greatly aided these studies. Using Einstein's equations, he also calculated the volume of the water molecule and the solid value for the avocado number. He was awarded the Nobel Prize in Physics in 1926 for these studies. In 1913 he published a book entitled Atoms. In addition to his research, the book deals with radiochemistry, black radiology, and the completeness of molecules. By 1936, several editions had been printed and sold about 30,000 copies. The book has been translated into many languages. Perrin published many books like this. J. J. Thompson used his tools to publish his results. He was a lecturer in the Department of Physical Chemistry at the University of Paris in Sorbonne. Then became head of the department.

 

He received the Jules Prize of the Royal Society in 1896, the Matteoki Medal by the Royal Society in 1911, the Vallauri Prize of Bologna in 1912, and the La Caze Prize by the Paris Academy of Sciences in 1914. He has been awarded honorary doctorates by the universities of Brussels, Lyke, Chem, Kolkata, New York, Priscilla, Manchester and Oxford. He was accepted as a member by the Royal Society, and by scientific institutes in Belgium, Sweden, Brexit, and Romania. He was awarded prestigious titles by the Governments of England and Belgium. He set out to establish a national center in France for the study of scientists.

During the war of 1914-18 he served as commander-in-chief of the Engineer Corps. He fled to the United States in 1040 when the Germans invaded. Confirming Albert Einstein's explanation and confirming the atomic nature of the material, San Patein Bernen passed away on April 17, 1942 in New York, USA at the age of 71. After the war in 1948, his belongings were taken home and buried. Postage stamps were issued in his honor.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.

ஆல்பர்ட் ஐன்சுடீனின் பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் சான் பத்தீட்டு பெரென் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 30, 1870)

ஆல்பர்ட் ஐன்சுடீனின் பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் சான் பத்தீட்டு பெரென் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 30, 1870). 

சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin) செப்டம்பர் 30, 1870ல் பிரான்சு நாட்டில் லீல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ஓர் இராணுவ அலுவலர். அவர் பிரெஞ்சு-புருசியப் போரில் வீர மரணமடைந்தார். எனவே இவருடைய தாயார் பெரினையும் அவரின் இரண்டு சகோதரிகளையும் வளர்த்து ஆளாக்க மிகவும் துன்புற்றார். பெரென் உள்ளூரிலுள்ள பொதுப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் பாரிசில் 'லைசி ஜேன்சன் டி செய்லி' என்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கட்டாய இராணுவ சேவை காரணமாக 1891ல் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சியின் போதுதான் இவருக்கு இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1897ல் என்றியட் டுபோர்டல் என்ற பெண்னை பெரின் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர். 

1894-97 ஆண்டுகளில் பெரென் ஈகோல் நார்மலே என்ற இடத்தில் இயற்பியல் ஆய்வு உதவியாளராகச் சேர்ந்து பணிகளில் ஈடுபடார். அப்பொழுது, எதிர்மின் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அவற்றையே ஆய்வறிக்கையாக அளித்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றர். அப்பொழுது வெற்றிடக் குழாயில் மின்னிறக்கம் செய்யும்போது எதிர்மின் வாயிலிருந்து எதிர்மின் கதிர்கள் தோன்றுகின்றன என்பதை அறிவியலறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கதிர்கள் எதிர்மின் துகள்களால் ஆனவை. அவை அலை வடிவாக வெளியிடப்படுகின்றன என்பதிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. 1895ல் பெரென் ஆய்வுகளில், எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகலடைகின்றன என்பது மிக முக்கியமான முடிவாகும். இவை எதிர் மின்தன்மை உடையவை. இத்துகள்களின் மின்னூட்டம்-நிறை இவற்றுக்குள்ள விகிதத்தைக் கண்டறிய முற்பட்டார். ஆனால் ஜெ. ஜெ. தாம்சன் இவருக்கு முன்னால் அதைக் கண்டறிந்தார். 

1901ல் இயல்வேதியலில், பிரௌனியன் இயக்கம் மற்றும் மூலக்கூறு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 1928ல் இராபர்ட் பிரௌன் என்பவர் 'நீரில் மூழ்கியுள்ள மகரந்தத்துகள்கள் தொடர்ந்து இங்குமங்குமாக ஒழுங்கின்றி இயங்குகின்றன.' என்று கூறினார். 1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதற்கான விளக்கத்தை துகள்கற்றை இயற்பியலின் அடிப்படையில் தந்தார். 'நீர்மூலக்கூறுகளினால் இத்துகள்கள் இயக்கப்படுகின்றன. ஒரு துகளினால் கடத்தப்படும் தூரம், அவற்றிற்கு இடைப்பட்ட நேரத்தின் வர்க்கத்திற்கேற்ப அதிகரிக்கிறது. எனக் குறிப்பிட்டார். வெப்பநிலை, துகள்களின் அளவு, இயங்குகின்ற திரவம் இவற்றில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துகள்கள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக விளக்கினார். 1908ல் ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகளின் மூலம் பெரின் மெய்ப்பித்தார். 

ரிச்சர்ட் சீய்க்மாண்டி(Richard Zeigmandy), ஹென்றி சீடண்டாப் (Henry Siedentop), என்ற அறிவியலறிஞர்கள் 1903ல் உருவாக்கிய நுட்பமான நுண்ணோக்கிகள் இந்த ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவின. ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, நீர் மூலக்கூறின் அளவு மற்றும் அவகாட்ரோ எண்ணிற்கான திடமான மதிப்பையும் கணக்கிட்டார். இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1926ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1913ல் அணுக்கள் என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை வெளியிட்டார். இவருடைய ஆய்வு விளக்கங்களாக மட்டுமன்றி இந்நூல் கதிரியக்க வேதியல், கரும்பொருள் கதிரியக்கம், மூலக்கூறுகளின் முழுத்தன்மையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. 1936க்குள் இது பல பதிப்புகள் அச்சிடப்பட்டு சுமார் 30,000 பிரதிகள் விற்பனையாயின. பல மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது. இது போல் பல நூல்களை பெரின் வெளியிட்டார். ஜெ. ஜெ. தாம்சன் இவருடைய கருவிகளைப் பயன்படுத்தியே தன்னுடைய முடிவுகளை வெளியிட்டார். சார்போனில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இயல் வேதியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ிறகு அத்துறையின் தலைவரானார். 


1896ல் ராயல் கழகத்தின் ஜூல் பரிசு, 1911ல் ராயல் கழகத்தால் மத்யூக்கி பதக்கம், 1912ல் போலோக்னாவின் வல்லௌரி (Vallauri) பரிசு, 1914ல் பாரிசின் அறிவியல் கழகத்தினால் லா கேசு (La Caze)பரிசு போன்ற பரிசுகள் பெற்றார். பிரசல்சு,லைகே, கெம், கொல்கத்தா, நியூயார்க்பிரிசுடன்மான்செசுடர் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன. ராயல் கழகம், மற்றும் பெல்சியம், சுவீடன், பிரேக், உருமானியா போன்ற நாடுகளில் உள்ள அறிவியல் கழகங்கள் இவரை உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்து, பெல்ஜிய அரசுகளின் மதிப்புமிக்க பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கென பிரெஞ்சு நாட்டில் தேசிய மையம் ஒன்றை அமைக்க இவர் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்.

 

1914-18 ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். 1040ல் ஜெர்மானியர்  ஊடுருவியபோது இவர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். ஆல்பர்ட் ஐன்சுடீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த சான் பத்தீட்டு பெரென் ஏப்ரல் 17, 1942ல் தனது 71வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1948ல் போருக்குப் பின் இவருடைய பொருள்கள் சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Tuesday, September 29, 2020

இந்தியாவில் பரவும் சீனாவின் புதிய ’கேட் கியூ’ வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை.

இந்தியாவில் பரவும் சீனாவின் புதிய ’கேட் கியூ’ வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனாவின் தாக்கமே இன்றும் குறையாத நிலையில், கேட் கியூ  என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவிவருவதாக ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது. 


உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் புதிய வைரஸ் ஒன்று பரவிவருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேட் கியூ வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் இருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேரின் மாதிரியில் இந்த வைரசுக்கான ஆன்டிபாடீஸ் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். 


3 விதமான கொசுக்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மேலும் இந்த வைரஸ் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலேயே பெருமளவு காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் பன்றிகளிடமும் மைனா போன்ற பறவைகளிடமும் இது காணப்படுவதால் இந்த வைரசால் பொதுசமூகம் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளதாக கருதப்படுகிறது.

நன்றி : puthiyathalaimurai

தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை வரை ஊரடங்கு நீட்டிப்பு:முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை வரை ஊரடங்கு நீட்டிப்பு:முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது. அதன் நீட்சியாக செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அதனையடுத்துதற்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், புதிய சில தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகள் :

  • உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் மூலம் உணவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
  • திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளில் உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 100 நபர்கள் வரை கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
  • தற்போது தினந்தோறும் வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது 100 விமானங்கள் வரை அனுமதிக்கப்படுகிறது.
  • அரசு, அரசு துறை சார்ந்த பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

தொடரும் தடைகள்:

  • மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடரும்
  • தமிழ்நாடு முழுவதும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்களுமின்ற ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும்
  • திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பூங்காங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றுக்குத் தடை தொடரும்
  • மத்திய அரசு அனுமதித்துள்ள வழித் தடைகளைத் தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.
  • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்
  • மதம் சார்ந்த, சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, ஊர்வலங்கள் நடத்த தடை நீடிக்கும்.



முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...