Sunday, September 5, 2021

✍🏻‌🎛️🎛️இயற்கை வாழ்வியல் முறை🎛️🎛️திருநீற்று பச்சிலையின் நன்மைகள்.

✍🏻‌🎛️🎛️இயற்கை வாழ்வியல் முறை🎛️🎛️திருநீற்று பச்சிலையின் நன்மைகள். 

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். 

 🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

திருநீற்றுப் பச்சிலை செடியின் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில்  உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும்.

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.

 🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

தலைவலி தடாலடியாகக் குணமாக, வலி நிவாரணி மாத்திரைகளைத் தேடுபவர்களுக்கான மாற்று திருநீற்றுப் பச்சிலை. இதன் இலைகளைப் பிரயத்தனப்பட்டு அரைக்க அவசியமில்லை. லேசாகக் கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி மறையும். 

                          

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

இதன் இலைகளையும் விதைகளையும் குளிக்கும் நீரில் அரை மணி நேரத்துக்கு முன்பே ஊறவைத்து, வாசனைமிக்க மூலிகைக் குளியலை மேற்கொள்ளலாம். சோப்பு, ஷாம்புகளின் துணையில்லாமலே உடலைத் தூய்மையடையச் செய்யும் குளியல் உத்தி இது.

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

வாய்க் கசப்பு இருக்கும்போது, இதன் இலை ஊறிய குடிநீரைக் கொண்டு வாய்கொப்பளிக்க, கசப்பு மறைந்து வாய் மணக்கும். இதன் இலைகளைக் கசக்கி உடலில் ஆங்காங்கே பூசிக்கொள்ள, கொசுக்கள் நம்மை நெருங்க அச்சப்படும். தேமல், படை போன்ற தோல் நோய்களுக்கு, இதன் இலைகளை வெளிப்பிரயோகமாகத் தொடர்ந்து பயன்படுத்த நல்ல பலனைக் கொடுக்கும். கொப்புளங்களின் மீது இதன் இலையை அரைத்துத் தடவ, அவற்றின் வீரியம் குறையும்.

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

திருநீற்று பச்சிலையோடு எலுமிச்சை சாறு சேர்த்து மைய அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வர சொரி, சிரங்கு, படை குணமாகும்.

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

தேள் கடிக்கு திருநீற்று பச்சிலையை கசக்கி அதன் சாற்றை தேள் கடித்த இடத்தில் ஊற்றி, இலையோடு சேர்த்து வைத்து கட்டும்போது தேள் விஷம் இறங்குவதோடு, கடியால் உண்டான வலியையும் போக்கும்.

🎛️🎛️🎛️🎛️🎛️🎛️

கண்கட்டி இருப்பவர்கள் திருநீற்று பச்சிலை சாற்றை கட்டியின் மேல் தொடர்ந்து பூசி வர கட்டி விரைவில் அமுங்கி விடும். காலாணி பிரச்சனைக்கும் திருநீற்று பச்சிலையை கசக்கி கட்டு கட்டி வந்தால் ஒரே வாரத்தில் காலாணி படிப்படியாக சரியாகி விடும். வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த இலையை அப்படியே பச்சையாக மென்று சாப்பிட்டு வர இரண்டு மூன்று நாட்களில் புண் ஆறிவிடும்.

🎛️🎛️🎛️🎛️🎛️

🦚🦚🦚🦚🦚

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...