Thursday, July 23, 2026

துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர்  ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.


நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஜூலை 20ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பாக பொருட்காட்சி திடல் அருகில் வான்நோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அழகிய நிலவு மற்றும் வெள்ளிக்கோள் கண்டு மகிழ்ந்தார்கள்.இதற்கான ஏற்பாட்டினை துறையூர் அஸ்ட்ரோ தலைவர் செ.சசிகுமார்  ஆசிரியர் பயிற்றுநர் தலைமையிலும், மகேஸ்வரன் துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அவர்கள் முன்னிலையும், பொருளாளர் வாசுதேவன், துணை செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான ஏற்பாட்டினை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் புத்தனாம்பட்டி கல்லூரி பேராசிரியர் TASS செயலாளர் முனைவர்  ரமேஷ் அவர்கள் வானோக்கு செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார்.

பொதுமக்களிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.









Friday, July 17, 2026

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி 


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் முதல் தலைப்பு. 

இன்றைய பொழுதில் வாழ வேண்டும். 

1.நேற்றைய கவலைகளையும் நாளைய பயங்களையும் துறந்து இந்த நொடியில் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி ஆகும்.


2.கடந்த காலம் கடந்துவிட்டது, எதிர்காலம் இன்னும் வரவில்லை எனவே நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ள உண்மை.


3.இன்றைய பொழுதை முழுமையாக ரசித்து வாழும்போது நம் மனதில் அமைதியும் நிம்மதியும் இயல்பாகவே குடியேறும்.


4.ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்பு அதை மகிழ்ச்சியோடு வரவேற்பது நம் கடமையாகும்.


5.தேவையற்ற எதிர்காலத் திட்டமிடல்கள் இந்த நொடியில் நாம் அனுபவிக்க வேண்டிய சின்னச் சின்ன சந்தோஷங்களை பறித்துவிடுகின்றன.


6.இன்று நம்மிடம் இருக்கும் மனிதர்களையும் வாய்ப்புகளையும் மதித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.


7.இன்றைய பொழுதை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றினால் நம் எதிர்காலம் தானாகவே சிறப்பாக அமையும்.


8.இந்த நொடியில் இருக்கும் நன்மைகளுக்கு நன்றி கூறி வாழ வேண்டும்.


9.வாழ்க்கை என்பது மிகச் சிறியதுஅதை 'நாளைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடாமல் இன்றே வாழ வேண்டும்.


10.நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழ்வதே நாம் நமக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு ஆகும்.

நன்றி.

-Kalaiyarasan- II B.Sc Computer Science, Nehru Memorial College

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் இரண்டாம் தலைப்பு

தனிப்பட்ட மகத்துவத்தை அடைவதற்கான வழிகள்

1. உங்கள் பலம் பலவீனம் மற்றும் தனித்துவமான திறமைகளை முதலில் முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.


2. வாழ்க்கையில் தெளிவான உயர்ந்த மற்றும் அடையக்கூடிய இலக்குகளை வகுத்துக் கொள்ளுங்கள்.


3. புதிய அறிவையும் திறன்களையும் நாள்தோறும் கற்றுக்கொண்டு உங்களை எப்போதும் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

4. காலத்தின் மதிப்பை உணர்ந்து தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்குவதை தவிருங்கள்.

5.   எதிர்மறை  எண்ணங்களை         நீக்கி எப்போதும் நம்பிக்கையான மற்றும் நேர்மறையான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. தற்காலிக இன்பங்களைத் தள்ளிவைத்து உங்கள் இலக்கை நோக்கிய தினசரி கடமைகளில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

7.  சிறந்த    மனதிற்கும் உழைப்பிற்கும் ஆரோக்கியமான உடலே அடிப்படை என்பதால் உடல்நலனைப் பேணுங்கள்.

8. வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களுக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக இருங்கள்.

9.  உங்கள்             வளர்ச்சியோடு நின்றுவிடாமல் பிறர் முன்னேற்றத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக வாழுங்கள்.

நன்றி

-Kalaiyarasan- II B.Sc Computer Science, Nehru Memorial College

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் மூன்றாம் தலைப்பு

உங்கள் நன்மதிப்பின் மதிப்பு

1. நன்மதிப்பு என்பது பணத்தால் வாங்க முடியாத ஒரு மனிதனின் மிக உயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற சொத்தாகும்.

2. நம்பிக்கையின் அடித்தளம் சமூகத்திலும் தொழில் துறையிலும் மற்றவர்கள் உங்களை நம்புவதற்கும் உங்களுடன் இணைவதற்கும் நன்மதிப்பே முதன்மை காரணி.3.       நன்மதிப்பு    என்பது ஒரே நாளில் உருவாவதில்லை அது பல வருட கால நேர்மை மற்றும் கடின உழைப்பால் சம்பாதிக்கப்படுவது.

4. ஒரு நல்ல பெயரை உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகும் ஆனால் ஒரு சிறு தவறு அதனை ஒரு நொடியில் அழித்துவிடும்.

 5.சிறந்த நன்மதிப்பைக் கொண்ட நபரைத் தேடி புதிய வாய்ப்புகளும், பெரிய பொறுப்புகளும் தானாகவே வந்து சேரும்.

6. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும் சொன்ன சொல்லை மாறாமல் நடப்பதுமே ஒருவரின் நன்மதிப்பை உயர்த்தும்.7.  வாழ்க்கையில் சோதனையான காலங்கள் வரும்போது நாம் சேர்த்து வைத்த நன்மதிப்பு மட்டுமே நமக்கு அரணாக நின்று

 8.நீங்கள் இல்லாத இடத்திலும் உங்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாகப் பேசுவதே உங்கள் நன்மதிப்பிற்குச் சான்றாகும்.

9. நன்மதிப்பைக் காத்து வாழும் மனிதன் சமூகத்தில் எப்போதும் தலைநிமிர்ந்த சுயமரியாதையோடு வாழ முடியும்.

10. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஈட்டிச் செல்லும் நல்ல பெயர் அவனது குடும்பத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் பெருமை சேர்க்கும்.


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் நான்காம் தலைப்பு

எது உங்களை ஒரு மேன்மையான செயல்வீரராக ஆக்குகிறது?


1.வெறும் திட்டமிடுதலோடு நிறுத்தாமல் எண்ணிய காரியத்தை உடனே களத்தில் இறங்கிச் செயலாக்குவதே மேன்மையான செயல்வீரரின் முதல் குணமாகும்.


2 .சவால்களையும் தோல்விகளையும் கண்டு பின்வாங்காமல் அவற்றைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்து இலக்கை நோக்கி முன்னேறுவது.


3.தனது செயல்களின் விளைவுகளுக்குத் தானே முழுப் பொறுப்பேற்று தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது.


4.தற்காலிகத் தடைகளால் சோர்ந்து போகாமல் இறுதி வெற்றி கிடைக்கும் வரை முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பது.


 5.சுயநலத்திற்காக மட்டுமின்றி பிறருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் உயரிய நோக்கத்திற்காகத் தன் ஆற்றலைப் பயன்படுத்துவது.


நன்றி


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் ஐந்தாவது தலைப்பு

உத்வேகமூட்டும் மேற்கோள்கள்


1.தோல்விகள் உங்களை வீழ்த்துவதற்காக அல்ல  நீங்கள் இன்னும் பலமாக எழுந்து நிற்பதற்கான புதிய பாடங்கள்.


2.நேற்று என்பது உடைந்த பானை நாளை என்பது வெறும் கற்பனை இன்று மட்டுமே உங்கள் கையில் இருக்கும் உண்மையான சாதனை. 


3.உலகத்தை வெல்வதற்கு முன்பாக உங்கள் சோம்பலையும் பயத்தையும் வென்று உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள்.


4.திறமை உங்களைக் கதவு வரை கொண்டு சேர்க்கலாம் ஆனால் உழைப்பு மட்டுமே அந்தக் கதவைத் திறந்து வெற்றியைத் தரும்.


5.உங்களால் முடியும் என்று நீங்கள் நம்பும் அந்த முதல் நொடியிலேயே உங்கள் வெற்றிக்கான பாதி தூரத்தைக் கடந்துவிடுகிறீர்கள்.


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் ஆறாவது தலைப்பு

சமநிலையுடன்கூடிய வெற்றிக்கான ஒரு மாதிரி

1.இலக்குகளை அடைவதோடு குடும்பம் உடல்நலம் மற்றும் மன அமைதிக்கும் சமமான நேரத்தை ஒதுக்குவதே உண்மையான சமநிலை. 


2.இலக்குகளை நோக்கி ஓடும்போது  பதற்றமில்லாமல் திட்டமிடல் மற்றும் முறையான ஓய்வு மூலம் மன அழுத்தத்தைத் தவிர்த்தல்.


3.ஆரோக்கியமான உடல் மட்டுமே நீண்டகால சாதனைகளை தாங்கி நிற்கும் என்பதால்  தினசரி உடற்பயிற்சியும் தூக்கமும் அவசியம்.


4.வெற்றிக் கோட்டைத் தொடும்போது  அதை உங்களுடன் கொண்டாடுவதற்கு அன்பான குடும்பமும் நல்ல நண்பர்களும் அருகில் இருப்பது.


5.பணத்தை ஈட்டுவதுடன் நின்றுவிடாமல் எதிர்காலத்திற்கான சேமிப்பு மற்றும் முதலீடுகளில் தெளிவான கவனம் செலுத்துவது.


6.வெளி உலகப் பாராட்டுகளை தாண்டி நாம் வாழும் வாழ்க்கை நமக்குள் ஆழமான மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதே முழுமையான வெற்றி.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் ஏழாம் தலைப்பு

உங்கள் வாழ்வில் செழிப்பை மலரச் செய்வதற்கான 6 வழிகள் 


1.பற்றாக்குறையை பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு பிரபஞ்சத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.


2.உங்களிடம் ஏற்கனவே இருக்கும் நல்ல விஷயங்களுக்கும் வசதிகளுக்கும் தினமும் நன்றி கூறுங்கள் இது மேலும் பல நன்மைகளை உங்களிடம் ஈர்க்கும்.


3.செழிப்பு என்பது வெறும் பணம் மட்டுமல்ல ஆரோக்கியம், உறவுகள், தொழில் என அனைத்து துறைகளிலும் நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளை தெளிவாக எழுதி வையுங்கள்.


4.உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதிலும் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள் இது உங்கள் மதிப்பை உயர்த்தும்.


5.உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தாராள குணம்  உங்கள் வாழ்வில் செழிப்பை பல மடங்காக திருப்பித் தரும்.ஆரோக்கியமான 


6.முறையான சேமிப்பு தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்த்தல் மற்றும் தினசரி திட்டமிடல் போன்ற நல்ல பழக்கங்களை உங்கள் வாழ்க்கையின் அங்கமாக்குங்கள்.


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் எட்டாவது தலைப்பு

உங்கள் நாட்குறிப்பேட்டில் நீங்கள் பதிவு செய்து பதிலளிக்க வேண்டிய கேள்விகள்


1.இன்று என் முகத்தில் புன்னகையை வரவழைத்த அல்லது எனக்கு நன்றியுணர்வைத் தந்த 3 விஷயங்கள் எவை?


2.இன்று நான் செய்த செயல்களில் எவற்றை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் நான் கற்றுக்கொண்ட பாடம் என்ன?


3.இப்போது என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் முதன்மையான உணர்வு அல்லது கவலை என்ன? அதற்கு என்ன காரணம்?


4.நாளை என் நேரத்தையும் ஆற்றலையும் பயனுள்ளதாக மாற்ற நான் செய்ய வேண்டிய மிக முக்கியமான 3 காரியங்கள் எவை?


5.இன்று நான் எடுத்த முடிவுகளும் செய்த பணிகளும் என் எதிர்கால இலக்குகளை நோக்கி என்னை அழைத்துச் செல்கிறதா?


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் ஒன்பதாம் தலைப்பு

நான்கு நிமிடங்களில் ஒரு மைல்தூர ஓட்டம்


1.1954-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நான்கு நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடப்பது மனித உடலால் சாத்தியமே இல்லை என்று உலகம் நம்பியது.


2.மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூட அப்படி ஓடினால் மனித இதயம் வெடித்துவிடும் என்றே தர்க்க ரீதியாக கூறி வந்தனர்.


3.ரோஜர் பானிஸ்டர்  அனைத்து கணிப்புகளையும் உடைத்து, 1954 மே 6 அன்று 3 நிமிடம் 59.4 வினாடிகளில் ஓடி இந்த அசாத்திய சாதனையை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டினார்.


4.ரோஜர் பானிஸ்டர் சாதித்த அடுத்த சில மாதங்களிலேயே பல ஓட்டப்பந்தய வீரர்கள் நான்கு நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரத்தைக் கடந்து சாதனை படைத்தனர்.


5.சவால்கள் நம் மனதில் மட்டுமே உள்ளன ஒருவர் சாதித்துக் காட்டும் வரை மட்டுமே எதுவும் சாத்தியமற்றதாக தோன்றும் என்ற உன்னத உண்மையை இந்தச் சாதனை நமக்குக் கற்பிக்கிறது.


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் பத்தாவது தலைப்பு


ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு தானே கேட்டு கொண்ட அர்த்தம் பொதிந்த கேள்வி


1.ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 17 வயது முதல் ஒவ்வொரு நாளும் காலையில் கண்ணாடியின் முன் நின்று இன்று என் வாழ்வின் இறுதி நாளாக இருந்தால் நான் இன்று செய்யவிருக்கும் காரியங்களைச் செய்ய விரும்புவேனா என்ற கேள்வியை கேட்டுக்கொண்டார்


2.இந்தக் கேள்விக்கான பதில் தொடர்ந்து பல நாட்கள் இல்லை என்று வரும்போதெல்லாம் தன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்து கொள்வார். 


3.நாம் ஒரு நாள் இறந்துவிடுவோம் என்ற எண்ணமே வாழ்க்கையில் இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்திலிருந்து நம்மை விடுவிக்கும் ஆகச்சிறந்த கருவி என்று அவர் நம்பினார். 


4.மரணத்தின் முன்னால் வெளி உலக எதிர்பார்ப்புகள் பெருமைகள் மற்றும் அவமானங்கள் யாவும் மறைந்து உண்மையில் எது முக்கியமோ அது மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதை இந்த கேள்வி அவருக்கு நினைவூட்டியது. 


5.பிறருடைய விருப்பத்திற்காக வாழாமல் உங்கள் இதயமும் உள்ளுணர்வும் சொல்வதைக் கேட்டு உங்களின் உண்மையான இலக்கை நோக்கி ஓட வேண்டும் என்ற உன்னத பாடத்தை இந்த கேள்வி நமக்குக் கற்பிக்கிறது.


நன்றி


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 11-ஆம் தலைப்பு

சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவம்


1.நிறுவனத்தின் இலக்குகளை அடைவதில் காட்டும் அதே தீவிரத்தை தன் குழுவினரின் நல்வாழ்விலும்  காட்டும் தலைவரே சமநிலையான தலைவர் ஆவார். 


2.தனது கருத்துக்களை மட்டுமே திணிக்காமல் குழு உறுப்பினர்களின் கருத்துக்களையும் பொறுமையுடன் கேட்டு அதற்கேற்ப சரியான முடிவுகளை எடுப்பது.


3.அனைத்துப் பொறுப்புகளையும் தானே சுமக்காமல் குழுவினரின் திறமைகளை நம்பி அதிகாரங்களையும் வேலைகளையும் சமமாகப் பகிர்ந்து அளிப்பது.


4.தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்துவதோடு நின்றுவிடாமல் சிறிய வெற்றிகளையும் பாராட்டி ஒட்டுமொத்த குழுவின் உத்வேகத்தை சமமாகப் பேணுவது.


5.கடுமையான விதிகளை மட்டும் பின்பற்றாமல் இக்கட்டான சூழ்நிலைகளில் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட்டு குழுவிற்கு அரணாக நிற்பது.


நன்றி


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 12-ஆம் தலைப்பு


தினந்தோறும் மேற்கொள்கின்ற சின்னச் சின்ன மகத்துவமான நடவடிக்கைகள்


1.ஒவ்வொரு நாளும் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த புதிய நாளுக்காகவும் வாழ்க்கையின் நன்மைகளுக்காகவும் மனதார நன்றி கூறுங்கள்.


2.அன்றைய நாளில் செய்ய வேண்டிய மிக முக்கியமான 3 காரியங்களை காலையிலேயே பட்டியலிட்டு அதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுங்கள்.


3.தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் ஏதேனும் ஒரு நல்ல புத்தகத்தையோ அல்லது உங்கள் துறை சார்ந்த புதிய தகவல்களையோ வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


4.தினசரி 15 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது தியானம் செய்வதன் மூலம் அன்றைய நாளுக்கு தேவையான ஒட்டுமொத்த ஆற்றலையும் மன அமைதியையும் பெற்றுக் கொள்ளுங்கள்.


5.தூங்கச் செல்வதற்கு முன் இன்றைய நாள் எவ்வாறு கடந்தது நாம் திட்டமிட்டதை செய்தோமா என்று நாட்குறிப்பில்  ஒரு சிறு சுயபரிசோதனை செய்யுங்கள்.


நன்றி

-Kalaiyarasan- II B.Sc Computer Science, Nehru Memorial College


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 13-ஆம் தலைப்பு


உங்கள் வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்வதற்கான 5 சிறந்த பழக்கங்கள் 


1.அதிகாலையில் எழுந்து அன்றைய நாளுக்கான இலக்குகளைத் திட்டமிடுவதன் மூலம் நாளின் தொடக்கமே தெளிவோடும் சுறுசுறுப்போடும் அமையும்.


2.தினசரி உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் நீண்ட காலச் சாதனைகளுக்குத் தேவையான உடல் மற்றும் மன ஆற்றலைப் பேணலாம்.


3.தினமும் புத்தகம் வாசிப்பது அல்லது புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் காலத்திற்கேற்ப நம்மை எப்போதும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.


4.குடும்பத்தினருடனும், நல்ல நண்பர்களுடனும் தரமான நேரத்தைச் செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ளும் மனபலம் கிடைக்கும்.


5.கடந்த காலக் கவலைகளையும் எதிர்காலப் பதற்றத்தையும் தவிர்த்து இந்த நொடிக் காற்றில் வாழக் கற்றுக்கொள்வதே மிகச் சிறந்த மகிழ்ச்சியான வாழ்வின் ரகசியமாகும்.


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 14-ஆம் தலைப்பு


வாழ்நாள் முழுதும் கற்றுக் கொண்டே இருங்கள்


1.முடிவில்லாப் பயணம் கல்வி என்பது பள்ளி அல்லது கல்லூரியோடு முடிந்துவிடுவதல்ல அது பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் ஒரு உன்னதமான வாழ்நாள் பயணம்.


2.மாற்றத்திற்கு ஏற்ப மாறுதல் உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது தினந்தோறும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே நாம் காலத்திற்கு ஏற்ப நம்மைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.


3.மனதின் இளமை தொடர்ந்து புதிய அறிவைத் தேடும் மனிதனின் மூளையும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருக்கும் என்று நவீன அறிவியல் கூறுகிறது.


4.அனுபவப் பாடம் புத்தகங்கள் மட்டுமின்றி நாம் சந்திக்கும் மனிதர்கள் செய்யும் தவறுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்துமே நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றனர்.


5.கற்றலில் அகந்தை இருக்கக் கூடாது "கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு" என்பதை உணர்ந்து தினமும் கற்பவனே வாழ்வில் உண்மையான மேன்மையையும் வெற்றியையும் அடைகிறான்.


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 15-ஆம் தலைப்பு

நிறைவான வாழ்க்கைக்கான 11 விதிகள்


1.தற்போதைய நொடியில் வாழ்தல் கடந்த கால நினைவுகளிலும் எதிர்காலப் பதற்றத்திலும் நேரத்தை வீணாக்காமல் இந்த நொடியை முழுமையாக ரசித்து வாழுங்கள்.


2.தினசரி நன்றியுணர்வு உங்களிடம் இல்லாதவற்றை எண்ணி வருந்தாமல் உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்காக தினமும் மனதார நன்றி கூறுங்கள்.


3.வாழ்நாள் கற்றல் ராபின் ஷர்மா கூறுவது போல் உங்களை எப்போதும் ஒரு மாணவராகக் கருதி தினமும் புதிய அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.


4.உடல் மற்றும் மன ஆரோக்கியம் முறையான உடற்பயிற்சி சத்தான உணவு மற்றும் தியானம் மூலம் உங்கள் உடலையும் மனதையும் தூய்மையாகப் பேணுங்கள்.


5.ஒப்பீடுகளைத் தவிர்த்தல் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்

 உங்களின் ஒரே போட்டி நேற்றைய நீங்களாக மட்டுமே இருக்கட்டும்.


6.உறவுகளுக்கு மதிப்பளித்தல் உங்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினருடனும் நல்ல நண்பர்களுடனும் தரமான நேரத்தைச் செலவிட்டு அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


7.தோல்விகளைப் பாடமாக்குதல் தடைகளையும் தோல்விகளையும் கண்டு தொய்வடையாமல் அவற்றை உங்களைச் செதுக்கும் உன்னதப் படிகளாக மாற்றுங்கள்.


8.பொருள் மேலாண்மை மற்றும் சேமிப்பு உங்கள் வருமானத்திற்குள் வாழப் பழகுங்கள் ஆடம்பரங்களைத் தவிர்த்து எதிர்காலத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பை உருவாக்குங்கள்.


9.மன்னிக்கும் குணம் மற்றவர்கள் செய்த தவறுகளையும் உங்கள் சொந்தத் தவறுகளையும் மன்னித்து மனபாரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.


10.பிறருக்கு உதவுதல் சுயநலமின்றி உங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்கும் சமுதாயத்திற்கும் செய்து உண்மையான மனநிறைவைப் பெறுங்கள்.


11.தெளிவான சுய ஒழுக்கம் தற்காலிக இன்பங்களைத் தள்ளிவைத்துவிட்டு உங்கள் நீண்டகால உயரிய இலக்குகளை நோக்கி தினசரி கட்டுப்பாட்டுடன் உழையுங்கள்.


நன்றி


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 16-ஆம் தலைப்பு

தலைவிதியும் தலைமைத்துவமும்



1.விதியை வெல்லும் மதி தலைவிதி என்பது முன்கூட்டியே எழுதப்பட்டது என்று முடங்கிவிடாமல் தனது மதிநுட்பத்தால் விதியையும் மாற்றி எழுதுபவரே சிறந்த தலைவர் ஆவார்.


2.பொறுப்பேற்கும் குணம் தோல்விகள் ஏற்படும் போது அதைத் தலைவிதியின் மீது பழிபோடாமல் தன் செயல்களுக்கு தானே முழுப் பொறுப்பேற்று வழிகாட்டுவதே தலைமைத்துவப் பண்பு.


3.இக்கட்டான சூழ்நிலைகள் அல்லது துரதிர்ஷ்டமான நிகழ்வுகள்  குறுக்கிட்டாலும் அதிலிருந்து புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தன் குழுவை வழிநடத்துவது.


4.சரித்திரம் படைத்தல் சாதாரண மனிதர்கள் விதியின் வழி வாழ்கிறார்கள் ஆனால் ஒரு மேன்மையான தலைவர் தன் உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் புதிய விதியையும் சரித்திரத்தையும் படைக்கிறார்.


நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 17-ஆம் தலைப்பு

எவ்வாறு ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கையை வாழ்வது ? 


1.பெரிய இலக்குகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை  சாதாரண எல்லைகளுக்குள் முடங்கிவிடாமல் உங்கள் வாழ்நாளில் நீங்கள் சாதிக்க நினைக்கும் உன்னதமான மற்றும் பிரம்மாண்டமான இலக்குகளைத் தெளிவாக வகுத்துக் கொள்ளுங்கள்.


2.சௌகரிய எல்லையைத் தாண்டுதல்  பயம் மற்றும் தயக்கங்களை உடைத்தெறிந்து புதிய சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள் சௌகரிய எல்லைக்கு வெளியேதான் பிரம்மாண்டமான வாழ்க்கை தொடங்குகிறது.


3.தொடர் தரம் மற்றும் சிறப்பு  நீங்கள் செய்யும் எந்தவொரு சிறிய காரியமாக இருந்தாலும் அதை அரைகுறையாகச் செய்யாமல் உலகத் தரத்துடன் முழுமையான அர்ப்பணிப்புடன் நேர்த்தியாகச் செய்யப் பழகுங்கள்.


4.தேவையற்ற வதந்திகள் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சோம்பேறித்தனத்தில் நேரத்தை வீணாக்காமல் உங்கள் ஆற்றலை முழுமையாகத் திறமை வளர்ப்பிலும் சாதனையிலும் முதலீடு செய்யுங்கள்.


5."என்னிடம் அது இல்லை இது இல்லை" என்ற பற்றாக்குறை சிந்தனையை விட்டு இந்த உலகம் வாய்ப்புகளால் நிறைந்தது என்ற நேர்மறை எண்ணத்தையும் நன்றியுணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.


6.பிறர் வாழ்வில் ஒளியேற்றுதல்  சுயநலத்தைத் தாண்டி உங்கள் உழைப்பாலும் வெற்றியாலும் பிற மனிதர்களின் வாழ்வை மேம்படுத்துங்கள் நாம் வாழும் காலத்திற்குப் பிறகும் நம் பெயர் நிலைத்திருப்பதே பிரம்மாண்டமான வாழ்க்கை.

நன்றி


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 18-ஆம் தலைப்பு

உங்களுடைய தொடர்புகளின் சக்தி


1.சிறந்த மனிதர்களுடனான தொடர்புகள் உங்கள் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு செல்லவும் புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் வாசலாக அமைகிறது.


2.உங்களை விட அனுபவமிக்க நபர்களுடன் பழகும்போது அவர்கள் பல வருட உழைப்பில் கற்றுக்கொண்ட பாடங்களையும் உத்திகளையும் நீங்கள் மிக எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.


3.நீங்கள் அதிக நேரம் செலவிடும் 5 மனிதர்களின் சராசரிதான் நீங்கள் என்ற தத்துவத்தின்படி உங்கள் தொடர்புகள் உங்களின் சிந்தனையையும் சிந்தனையின் தரத்தையும் தீர்மானிக்கின்றன.


4.வாழ்க்கையிலோ அல்லது தொழிலிலோ சவாலான இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போது உங்களுடைய நல்ல தொடர்புகளே உங்களுக்குத் தேவையான ஆதரவையும் சரியான ஆலோசனைகளையும் தந்து உங்களைக் காக்கும்.


5.மதிப்பை உயர்த்துதல் வணிக உலகிலும் சமூகத்திலும் உங்களுடைய நன்மதிப்பு என்பது உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுடனான உங்கள் தொடர்பின் ஆழத்தைப் பொறுத்தே மேலும் உயர்கிறது.


6.தொடர்புகள் என்பது சுயநலத்திற்காக மட்டுமின்றி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு கூட்டு முயற்சியால் ஒட்டுமொத்தக் குழுவும் இணைந்து பிரம்மாண்டமாக வளர்வதற்கான சிறந்த கருவியாகும்.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 19-ஆம் தலைப்பு

உங்கள் வாழ்வில் சமநிலையைக் கொண்டுவருவதற்கான 8 வழிகள் 


1.நேர மேலாண்மை மற்றும் முன்னுரிமை  அன்றாடப் பணிகளில் எவை மிக முக்கியமானவை என்பதைத் தீர்மானித்து அவற்றுக்கு முதலிடம் கொடுங்கள். தேவையற்ற காரியங்களில் நேரத்தை வீணாக்குவதைத் தவிருங்கள்.


2.வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பிரிப்பு படி வேலை நேரத்தை வீட்டிற்குள்ளும் குடும்ப நேரத்தை வேலைக்குள்ளும் கொண்டு செல்லாதீர்கள். இரண்டிற்கும் இடையே தெளிவான எல்லையை வகுத்து கொள்ளுங்கள்.


3.இல்லை என்று சொல்லப் பழகுங்கள் உங்கள் ஆற்றலுக்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்ட கூடுதல் பொறுப்புகள் வரும்போது பிறருக்குத் தயங்காமல் அதே சமயம் மென்மையாக இல்லை என்று கூறப் பழகுங்கள்.


4.உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்  முறையான தூக்கம் சத்தான உணவு மற்றும் தினசரி 20 நிமிட உடற்பயிற்சி ஆகியவை சவால்களை எதிர்கொள்வதற்கான உடல் சமநிலையைத் தரும்.


5.மன அமைதிக்கான தியானம்  கடந்த காலக் கவலைகளையும் எதிர்காலப் பதற்றத்தையும் தவிர்த்து இந்த நொடி காற்றில் வாழ தினமும் சில நிமிடங்கள் தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.


6.தொழில்நுட்ப இடைவெளி மற்றும் சமூக ஊடகங்கள்  அலைபேசி பயன்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட நேர கட்டுப்பாட்டை விதித்து கொள்ளுங்கள். தொழில்நுட்பத் திரைகளை தாண்டி நிஜ உலகை ரசியுங்கள்.


7.குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான நேரம்  உங்களுக்கு பிடித்தமானவர்களுடனும் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட நண்பர்களுடனும் தரமான நேரத்தைச் செலவிடுங்கள். இது உங்களுக்குத் தேவையான மனபலத்தைத் தரும்.


8.சுய ஆய்வு மற்றும் ஓய்வு  வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்காகச் சுய பரிசோதனை செய்து மனதை ரீசார்ஜ் (Recharge) செய்யத் தேவையான ஓய்வையும் உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தையும் ஒதுக்குங்கள்.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 20-ஆம் தலைப்பு

சிறு சாகசங்களின் விலைமதிப்பு

1.சலிப்பை உடைக்கும் ஆயுதம் ஒரே மாதிரியான தினசரி வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு சிறிய சாகசங்களில் ஈடுபடுவது மனச்சலிப்பை நீக்கி வாழ்க்கைக்குப் புதிய சுறுசுறுப்பைத் தருகிறது.


2.வார இறுதியில் ஒரு சிறிய மலை ஏற்றம்  புதிய பாதையில் பயணம் அல்லது திறந்த வெளியில் முகாம்  அமைப்பது போன்ற செயல்கள் மன அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டவை.


3.புதுப்பிக்கப்படும் படைப்பாற்றல் புதிய மனிதர்கள் இடங்கள் மற்றும் சூழல்களை எதிர்கொள்ளும்போது மூளையின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு நம்முடைய சிந்திக்கும் திறனும் படைப்பாற்றலும்  பல மடங்கு அதிகரிக்கிறது.


4.குறைந்த செலவு நிறைந்த மகிழ்ச்சி சாகசம் செய்ய வெளிநாடுகளுக்கோ அல்லது அதிக பணம் செலவழித்தோ செல்ல வேண்டியதில்லை நாம் வாழும் பகுதிக்கு அருகிலேயே இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கண்டறிவதே போதுமானது.


5.தன்னம்பிக்கை உயர்வு சிறிய சவால்களையும் புதிய சூழல்களையும் நாம் வெற்றிகரமாகக் கையாளும்போது என்னால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத சுய நம்பிக்கை நமக்குள்ளே பிறக்கிறது.


6.மறக்க முடியாத நினைவுகள் ஆடம்பரப் பொருட்கள் தரும் மகிழ்ச்சியை விட இந்தச் சிறு சாகசங்களின் போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்களும் இயற்கையோடு செலவிடும் தருணங்களுமே வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய விலைமதிப்பற்ற நினைவுகளாக மாறுகின்றன.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 21-ஆம் தலைப்பு

என் கதாநாயகர்களுக்கு ஒரு மரியாதை கலந்த வணக்கம்

1.வழிகாட்டும் ஒளிரவிளக்குகள் சோதனையான சூழ்நிலைகளிலும் தடைகள் நிறைந்த பாதைகளிலும் நான் தடம் மாறிப் போகாமல் சரியான பாதையில் பயணிக்க எனக்குள் என்றும் ஒளிரும் வழிகாட்டியாகத் திகழும் என் கதாநாயகர்களுக்கு என் முதல் வணக்கம்.


2.தன்னம்பிக்கையின் பிறப்பிடம் உலகமே உன்னால் முடியாது என்று சொன்னபோது தங்களின் அசாத்திய சாதனைகளாலும் அசைக்க முடியாத உழைப்பாலும் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற தன்னம்பிக்கையை எனக்குள் விதைத்த அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


3.எல்லைகளை உடைத்தவர்கள் மனித உடலின் எல்லையையும் மனதின் பயத்தையும் உடைத்தெறிந்து புதிய சரித்திரங்களை எழுதிய சாதனையாளர்களான உங்களின் ஒவ்வொரு அடியும் என்னை தினமும் செதுக்கும் உன்னத பாடங்களாகும்.


4.மரியாதையின் மாண்பு சுயநலத்தைத் தாண்டி பிறர் வாழ்விலும் இந்தச் சமுதாயத்திலும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர தங்களையே அர்ப்பணித்து கொண்ட உங்களின் மேன்மைக்கு என் தலைவணங்கிய மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன்.


5.நீங்கள் காட்டிய நேர்மை ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகிய உன்னதப் பண்புகளை என் வாழ்விலும் பின்பற்றி உங்களைப் போல ஒரு சிறந்த மனிதனாக வாழ்வதே நான் உங்களுக்கு செலுத்தும் ஆகச்சிறந்த மரியாதையாகும்.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 22-ஆம் தலைப்பு

இம்மாதத்திற்கான தலைமைத்துவப் பாடம்

1.மாற்றங்களை ஏற்கும் பக்குவம் சூழல்கள் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் இந்த மாதத்தில் பழைய முறைகளையே பிடித்து கொண்டிருக்காமல் புதிய மாற்றங்களை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப குழுவை வழிநடத்துவதே சிறந்த பாடம்.


2.தகவல்தொடர்பில் தெளிவு குழு உறுப்பினர்களிடையே தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க இலக்குகள் மற்றும் திட்டங்களை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.


3.உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்  இலக்குகளை அடைவதில் காட்டும் தீவிரத்தை விட குழுவினரின் தற்போதைய மனநிலை மற்றும் சவால்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு துணையாக நிற்பதே சிறந்த தலைமைத்துவம்.


4.முடிவெடுக்கும் துணிவு இக்கட்டான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் தயங்கி நிற்காமல் சூழ்நிலையை ஆராய்ந்து தீர்க்கமான மற்றும் சரியான முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்பதே ஒரு தலைவரின் அடையாளம்.


5.சுய பரிசோதனை இந்த மாதத்தின் இறுதியில் நாம் அடைந்த வெற்றிகள் மற்றும் சந்தித்த சவால்களிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன என்பதை சுயஆய்வு செய்து அடுத்த மாதத்திற்கான உத்திகளை வகுப்பது.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 23-ஆம் தலைப்பு

திறமையான கோபக் கட்டுப்பாட்டின் மூலம் தனிப்பட்டத் தலைமைத்துவம்.


1.சுய கட்டுபாடே முதல் தலைமைத்துவம் மற்றவர்களை வழிநடத்துவதற்கு முன்பாக நம்முடைய சொந்த உணர்ச்சிகளையும் கோபத்தையும் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதே தனிப்பட்ட தலைமைத்துவத்தின் முதல் படியாகும்.


2.ஆழ்ந்த அமைதியின் வலிமை கோபம் வரும்போது உடனடியாக எதிர்வினை ஆற்றாமல்  சில நொடிகள் நிதானித்து யோசித்து செயல்படுவது தவறான முடிவுகளிலிருந்து நம்மை காக்கும்.


3.வார்த்தைகளின் மாண்பு கோபத்தில் வெளிப்படும் ஒரு தவறான வார்த்தை பல வருட நன்மதிப்பை அழித்துவிடும் எனவே கோபத்தை கட்டுப்படுத்துவது நமது சொல் மாண்பையும் அதிகாரத்தையும் சமூகத்தில் உயர்த்தும்.


4.பிரச்சினைக்கான தீர்வு ஒரு சிறந்த தலைவர் கோபப்பட்டு ஆற்றலை வீணாக்காமல் கோபத்தை ஏற்படுத்திய மூலப் பிரச்சினை என்ன என்பதை கண்டறிந்து அதை தீர்ப்பதில்தான் தன் கவனத்தை செலுத்துவார்.


5.உணர்ச்சிசார் அறிவுத்திறன்  கோபத்தை அடக்குவது என்பது உணர்வுகளை நசுக்குவது அல்ல மாறாக அதை நேர்மறையான உழைப்பாகவும் குழுவை அரவணைத்து செல்லும் உன்னதப் பண்பாகவும் மாற்றுவதே மேன்மையான தலைமைத்துவம்.

நன்றி.

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 24-ஆம் தலைப்பு

பயமின்மை மூலமாக சுய தலைமைத்துவம்


1.சுய சுதந்திரம் பயத்திலிருந்து விடுதலை பெறுவதே சுய தலைமைத்துவத்தின் தொடக்கம் எப்போது ஒரு மனிதன் தோல்வி மற்றும் விமர்சனங்களுக்குப் பயப்படாமல் இருக்கிறானோ அப்போதுதான் அவன் தன் வாழ்க்கையின் உண்மையான தலைவனாக மாறுகிறான்.


2.துணிச்சலான முடிவுகள் பயம் நம் சிந்தனையை முடக்கிவிடும் பயமற்ற மனநிலை மட்டுமே இக்கட்டான சூழ்நிலைகளிலும் தெளிவான தீர்க்கமான மற்றும் நேர்மையான முடிவுகளை எடுக்க நமக்கு தைரியத்தை தரும்.


3.எல்லைகளை உடைத்தல் என்னால் முடியுமோ முடியாதோ என்ற சுய சந்தேக பயத்தை உடைத்தெறியும் போது நமது மறைந்திருக்கும் முழு திறமைகளும்  வெளிப்பட்டு நம்மை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும்.


4.சவால்களை எதிர்கொள்ளுதல் பயமில்லாத தலைவன் தடைகளை கண்டு பின்வாங்க மாட்டான் சவால்களை தன் திறமையை நிரூபிப்பதற்கான உன்னத வாய்ப்புகளாகவும் வெற்றிக்கான படிக்கட்டுகளாகவும் மாற்றுவான்.


5.உள்ளுணர்வைப் பின்பற்றுதல் பிறர் என்ன சொல்வார்களோ என்ற சமூக பயத்தை தவிர்த்து தன் கனவுகள் மற்றும் உள்ளுணர்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து தன் பாதையை தானே செதுக்குவதே உண்மையான சுய தலைமைத்துவம்.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 25-ஆம் தலைப்பு

வேலையில் சிறப்பான தலைமைத்துவம் தரும் 6 பண்பு நலன்கள்


1.தெளிவான தகவல் தொடர்பு  நிறுவனத்தின் இலக்குகள் திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை குழுவினருக்கு மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துரைக்கும் பண்பு.


2.உணர்வுகளை புரிந்துகொள்ளுதல்  ஊழியர்களின் வேலை சார்ந்த சவால்களை மட்டுமன்றி அவர்களின் மனநிலையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு தேவையான ஆதரவையும் அரவணைப்பையும் தருவது.


3.முடிவெடுக்கும் துணிவு  இக்கட்டான அல்லது நெருக்கடியான சூழ்நிலைகளில் தயங்கி நிற்காமல் தரவுகளை ஆராய்ந்து சரியான முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்கும் ஆளுமை.


4.பொறுப்பேற்கும் குணம்  குழுவின் வெற்றிக்கு பாராட்டுக்களைப் பகிர்ந்தளிப்பதோடு ஏதேனும் தவறுகள் அல்லது தோல்விகள் ஏற்படும் போது அதற்கு தானே முழு பொறுப்பேற்று வழிநடத்துவது.


5.அதிகார பகிர்வும் நம்பிக்கையும்  அனைத்து வேலைகளையும் தானே செய்யாமல குழுவினரின் திறமைகளை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பது.


6.தொடர் அங்கீகாரம் மற்றும் பாராட்டு குழு உறுப்பினர்களின் சிறிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படையாக பாராட்டி அவர்களை எப்போதும் உத்வேகத்துடன்  வைத்திருப்பது.

நன்றி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் 26-ஆம் தலைப்பு

செல்வத்தின் பல வடிவங்கள்


1.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப ஆரோக்கியமான உடலும் நிம்மதியான மனமும் தான் மனித வாழ்க்கையின் மிக முதன்மையான செல்வமாகும்.


2.நேரச் செல்வம்  பணத்தை விட விலைமதிப்பற்றது காலம். நமக்குத் பிடித்த காரியங்களைச் செய்யவும் குடும்பத்துடன் செலவிடவும் போதுமான நேரத்தைச் சுதந்திரமாகப் பெற்றிருப்பதே மிகப்பெரிய செல்வமாகும்.


3.அறிவுச் செல்வம்  கல்வி, அனுபவம், மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை யாராலும் திருட முடியாத எப்போதும் அழியாத உன்னத செல்வமாகும்.


4.உறவுகளின் செல்வம் இக்கட்டான சூழ்நிலைகளில் தோள் கொடுக்கவும் நம் வெற்றிகளைக் கொண்டாடவும் நமக்கு அருகில் இருக்கும் அன்பான குடும்பமும் உண்மையான நண்பர்களுமே வாழ்வின் பெரும் பலமாகும்.


5.மனநிறைவுச் செல்வம்  பேராசைகளும் பதற்றமும் இல்லாமல் தற்போதைய நொடிக் காற்றில் வாழ கற்றுக்கொண்டு நமக்குள் ஆழமான அமைதியையும் மனநிறைவையும்  உணர்வது.


6.பொருளாதாரச் செல்வம் நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் எதிர்காலப் பாதுகாப்பிற்கும் பிறருக்கு உதவி செய்யவும் தேவையான பண வசதியையும் சொத்துக்களையும் பெற்றிருப்பது.


நன்றி


நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய விண்வெளி தினம்.

நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் பவுன்டேஷன் பயிற்சி மையத்தில் தேசிய  விண்வெளி தினம். நாமக்கல் Dr. அப்துல் கலாம் டிரீம் புவுன்டேஷன் மாணவர்கள...