Thursday, July 1, 2021

எக்ஸ் கதிர்கள் மூலமாகப் படிகங்களின் அமைப்பை ஆய்வு செய்த, நோபல் பரிசு பெற்ற வில்லியம் லாரன்சு பிராக் நினைவு தினம் இன்று (ஜூலை 1, 1971).

எக்ஸ் கதிர்கள் மூலமாகப் படிகங்களின் அமைப்பை ஆய்வு செய்த, நோபல் பரிசு பெற்ற வில்லியம் லாரன்சு பிராக் நினைவு தினம் இன்று (ஜூலை 1, 1971).

வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg)  மார்ச் 31, 1890ல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவளி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி பிராக் பணியின் காரணமாக ஆஸ்திரேலியாவில் வசித்த போது அங்கு பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் குவெண்டோலின் பிராக். இவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. 1921ல் 'ஆலிசு கிரேசு ஹாப்கின்சன்என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு ஆண்இரண்டு பெண் என நான்கு மக்கள் பிறந்தனர். 'பில்லிஎன அழைக்கப்பட்ட இவர் சிறு வயது முதலே மிகவும் சுறு சுறுப்பாக இருந்த இவர் கணிதம் அறிவியல் ஆகியவற்றில் ஆர்வம் செலுத்தினார். இவருக்கு ஐந்து வயதிருக்கும்போது இவருடைய மூன்று சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்து கால்முறிவு ஏற்பட்டது. 

அப்போது வில்லெம் ரோண்ட்கன் எக்ஸ் கதிரைக் கண்டுபிடித்திருந்த நேரமாதலால்இவருடைய தந்தை வில்லியம் ஹென்றி பிராக் அக்கதிர் முறையைப் பயன்படுத்தி இவருடைய எலும்பு முறிவை அறிந்துகொண்டு சிகிச்சை செய்தார். இது ஆஸ்திரேலியாவில் எக்ஸ் கதிரைப் பயன்படுத்திய முதல் நிகழ்ச்சியாகும். கடற்கரைக்குச் செல்லும் போதெல்லாம் கிளிஞ்சல்கள்கூடுகள் ஆகியவற்றைச் சேமிப்பது இவருடைய வழக்கம். அவ்வாறு சேமிக்கும்போது எதிர்பாராத வகையில் ஒரு புதிய மீனைக் கண்டறிந்தார். அந்த மீன் தற்போது இவருடைய் பெயரால் 'செப்லா பிராக்கில்'(Sepla Braggil) என்று அழைக்கப்படுகிறது. அறிவியலில் மட்டுமல்லாது ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுதல்தோட்ட வேலைஇலக்கியம் ஆகியவற்றிலும் இவர் ஆர்வம் செலுத்தினார்.

 Ri Science — PhD student Sarah Madden dug through our...

படிப்பில் இவருடைய வயதின் தன்மையை மீறிய அறிவுத்திறன் இவருக்கு அமைந்திருந்தது. இவருக்கு பதினைந்து வயதான போது 'அடிலெய்டு பல்கலைக்கழகத்தில்சேர்ந்தார். 1908ல் கணிதத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆனார். 1909ல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கைக்கழகத்தில் சேர்ந்தார். அதே நேரம் இவருடைய குடும்பமும்இங்கிலாந்தின் லீட்சு என்ற இடத்தில் குடியேறியது. திரித்துவக் கல்லூரியில் (Trinity College) ஒரு சிறந்த கணித வல்லுநராகச் சேர்ந்தார். மிக உயர்வான கல்வி ஊக்கத்தொகை இவருக்குக் கிடைத்தது. இவர் தேர்வு எழுதும் சமயம் நிமோனியாவில் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்க நேர்ந்தது. ஆனால்இவருடைய தந்தை இவரை இயற்பியலில் கவனம் செலுத்தும்படி ஆர்வமூட்டினார். அவரும் அவ்வாறே செயல்பட 1911ல் இயற்பியல் பட்டம் பெற்றார். 

1912ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை முடித்துப் பட்டம் பெற்ற பிறகு அங்குள்ள கேவெண்ட்ஷ் ஆய்வுக் கூடத்தில் தன் பணியைத் தொடங்கினார். அப்பொழுது எக்ஸ் கதிர்கள் அலைவடிவம் கொண்டதாஅல்லது துகள்களாஎன்ற விவாதம் தொடங்கியிருந்தது. இது பற்றி தந்தையும்மகனும் பல வகைகளில் விவாதித்தனர். எக்ஸ் கதிர்கள் பற்றியும்மேக்சு வான் லாவின் எக்ஸ் கதிர் வகைகள் பற்றியும்ஆய்வு செய்தபோது இவர்களுக்குப் பல வினாக்களுக்கு விடைகள் கிடைத்தன. இக்கதிர்கள் சில வகைகளில் அலை வடிவத்திலும் சில வகைகளில் துகள்களாகவும் செயல்படுகின்றன என்பதை உணர்ந்தனர். தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு பிராக் விதியை (Bragg's Law) உருவாக்கினர். 1912ல் நவம்பரில் இந்த ஆய்வுகளை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டனர். எக்ஸ் கதிர்களைக் கொண்டு படிகங்களில் ஆய்வு நடத்திய பிறகு இருவரும் சேர்ந்து 1915ல் 'எக்சு கதிர்கள் மற்றும் படிக அமைப்பு (X rays and Crystal Structure) என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.

 Top 30 Bragg's Law GIFs | Find the best GIF on Gfycat

முதல் உலகப் போரின் போது இவர் பிரான்சில் இராணுவத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணி புரிந்தார். அந்தப் போரில் இவருடைய இளைய சகோதரர் 'பாப்' (Bob) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பணியில் இருந்தபோதுதான் இவருக்கு நோபெல் பரிசு பெற்ற செய்தி கிடைத்தது. 1919ல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1937 வரை அப்பதவியில் இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்துலக படிக வரைவுச் சங்கம் (International Union of Crystallography) ஒன்றை நிறுவி அதன் ஆரம்பகாலத் தலைவராகச் செயல் பட்டார். இவர் தந்தையைப் போலவே ராயல் நிறுவனத்தில் பல சிறுவர்களுக்கு அறிவியல் தொடர்பான பல சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். 1937-38 ல் தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடத்தின் இயக்குநராகப் பணி புரிந்தார். 1938 மற்றும் 1954ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிஷ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1953ல் டி.என்.ஏ அமைப்பைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகித்தார். பிரான்சிஸ் கிரிக்ஜேம்சு வாட்சன் என்பவர்கள் இவரின் கீழ் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். கிரிக்வாட்சன்வில்கின்சு ஆகிய மூவரும் 1962ல் நோபல்  பரிசு பெற பிராக் பரிந்துரை செய்தார். 1954, 1966 ஆண்டுகளில் ராயல் கழகத்தின் தலைவராகப் பணிபுரிந்தார். 

பிற்காலத்தில் லாரன்சு 'வடிவத் தொடர்புகளினால் தூண்டப்படும் முன்னேற்றங்கள் (Geometric relations could stimulate progress) என்ற வகையிலும் சிலிக்கேட்டுகள்சிலிக்கேட்டு வேதியல்உலோகவியல்புரத வேதியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். ராயல் நிறுவனத்தில் புரத மூலக்கூறுகளில் எக்சு கதிர்களைச் செலுத்தி அவற்றின் சிக்கல்களை ஆராய்வதற்கு என தனிப்பட்ட ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஆய்வுகளில் ஈடுபட்டார். இவருடைய சிறப்பான சொற்பொழிவுகளாலும் இவரின் செயல்பாட்டுத் திறனாலும் இவருடைய ஆய்வுத் துறைகளில் பெரிதும் போற்றப்பட்டார்.


சோடியம் குளோரைடு என்ற வேதிச் சேர்மம்சோடியம் குளோரைடு என்ற மூலக்கூறுகளைப் பெறவில்லை. ஆனால்சோடியம் அயனிகளும்குளோரின் அயனிகளும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கான வடிவத்தில் அமைந்துள்ளன எனக் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு வேதியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. படிகங்களில் உள்ள அணுக்கள் அமைந்திருக்கும் விதத்தை இவர் ஆய்வு செய்தார். இவருடைய தந்தை எக்ஸ் கதிர் நிறமாலை மானி ஒன்றை உருவாக்கினார். மேலும் எக்ஸ் கதிரின் கதிரியக்கம் பற்றியும் விளக்கினார். இந்தக் கண்டு பிடிப்புகளுக்குத் தந்தை மகன் இருவருக்கும் நோபல் பரிசு 1915ல் வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற போது இவருடைய வயது 25. மிக இளம் வயதில் நோபெல் பரிசு பெற்றவர் பிராக் ஆவார். மத்யூக்கி பதக்கம்ராயல் பதக்கம்காப்ளே பதக்கம்ஹூக்ஸ் பதக்கம்நாட்டின் சிறந்த வீரர்(Knight)என்ற பட்டம் மற்றும் மதிப்பியல் பட்டம் (Companion of Honour)(இங்கிலாந்து நாட்டு அரசியால்) ஆகிய பட்டங்களும் பதக்கங்களும் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன. 


எக்ஸ் கதிர்களின் படிக அமைப்பு, சிலிகேட்டுகளின் கட்டமைப்பு மற்றும் தாதுக்களின் மூலக்கூறு அணு அமைப்பு மறைவு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பிராக் ஜூலை 1, 1971ல் தனது 81வது வயதில் உடல் நலம் குன்றி இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவருடைய சிறப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலியாப் பல்கலைக் கழகத்தில் இவருடைய பெயரில் தங்கப்பதக்கம் ஒன்று இயற்பியல் பிரிவில் சிறப்பாகப் பணி புரிபவருக்கு 1992ம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டி.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

இஸ்ரோ IIRS MOOC Course எவ்வாறு பதிவு செய்வது மற்றும் இலவச சான்றிதழைப் பெறுவது எப்படி.

இஸ்ரோ IIRS MOOC Course எவ்வாறு பதிவு செய்வது மற்றும் இலவச சான்றிதழைப் பெறுவது எப்படி. 


Opening Date - June 01, 2021 from 1830 hrs IST 

Closing Date - August 15, 2021

Please click the following link to register for the MOOC: https://isat.iirs.gov.in/mooc.php

Read full story: 

MOOC on the “Geospatial Applications for Disaster Risk Management”

Publishing Date:  02/06/2021

MOOC_Guidelines_Link

Massive Open Online Courses (MOOC)

Indian Institute of Remote Sensing (IIRS) under Indian Space Research Organisation, Department of Space, Government of India is a premier Training, Educational and Research Institute established for capacity building in the fields of Geospatial Technology for Natural Resources, Environmental and Disaster Management. The Institute is running many on-campus short and long term capacity building programmes.

To further enhance the outreach of geospatial technology, IIRS, ISRO offers Massive Open Online Courses (MOOC) for international participants. MOOC is based on the principle of self-paced user centric learning and aims to link learners from across the globe with educators and provides user and discussion forums to support interactions among students in collaborative learning platform. IIRS MOOC’s aims to enhance the participant’s capabilities related to the use of geospatial and Earth observation technologies and its applications in various thematic domain. The learning contents for MOOC are delivered by internationally renowned Subject Matter Experts and includes customized video sessions, 2D and 3D animations, SCROM packages, lecture notes and presentations as study material.


இது போன்ற தகவல் பெற

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று (ஜூலை 1, 1961).

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று (ஜூலை 1, 1961).

கல்பனா சாவ்லா (Kalpana Chawla) ஜூலை 1, 1961ல்  இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில்பனாரஸ் லால் சாவ்லாவுக்கும்சன்யோகிதா தேவிக்கும் மகளாகஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும்சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர். கல்பானா சாவ்லாதனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும்தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது. 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும்பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். 

1988 ஆம் ஆண்டுநாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல்ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர்அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87)ல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில்சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். 1984ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். STS-87ன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்புமென்பொருள்களிலும்பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.

 Kalpana Chawla GIFs - Get the best GIF on GIPHY

STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர். முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லாஅடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002ம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காகஅமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 


16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம்அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர். 1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது. மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor), நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம் (NASA Space Flight Medal), நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal). கல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது. பாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப்என்று நிறுவியுள்ளது. 

ஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும். இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர். மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன்பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்குக் கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla way) எனும் தெருவும் உள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது. குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது. நாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதி நவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது. இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறதுஇதழ் மற்றும் புதினத்தில் ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று. நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக், தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன்அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார். 


 விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிப்ரவரி 1, 2003ல் தனது 40வது அகவையில் விண்கலம் வெடித்துச் விண்ணில் கலந்துள்ளார். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்துபலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர்இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும்முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.

Source By: Wikipedia

தகவல்: முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு. துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம...