Thursday, January 14, 2021

குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி, லட்சத்தீவுகளுக்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றத்தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. கன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி உள்ளது.தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...