✍️கவிதை ✍️ 🌞🐄 தமிழர் திருநாள்🐄🌞✍️இரஞ்சிதா தியாகராஜன்.
தை மாத முதல் நாள் வா... வா... வா...
தமிழர் திருநாளாம் மகிழ்ச்சி அள்ளித் தா... தா... தா...
நன்றி செலுத்தும் நன்நாளாம்...
நம் நாயகன் ஆதவன், ஆ திருநாளாம்...
வீட்டின் சுவரெல்லாம் வண்ணம் பூச...
வீரமகன் ஜல்லிக்கட்டில் காளை கொம்போடு பேச...
எறும்போடு போட்டி போட்டு கரும்புகள் நாமும் சுவைக்க...
தமிழ் மகள் மாமன் மேல் மஞ்சள் நீர் உற்றி நாணத்தில் கண்ணங்களும் சிவக்க...
இனிதாய் பொங்கல் பொங்கட்டும் இல்லங்கள் தோறும்...
தமிழர் பண்பாடு சிறக்கட்டும் பார் தோறும்...
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
தரணியெங்கும் கொண்டாடும் தை பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவரின் மனங்களும் இன்பத்தில் பொங்கி வழிந்திட அனைவருக்கும் ஓம் நமசிவாய அறக்கட்டளையின் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கட்டும், திசையெங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்.
👍👍தைமகள் பிறந்தாள்!!
தமிழ் முகம் தந்தாள்!
தமிழர் பெருமை போற்றும்
உழவர் திருநாள்!!
அதுவே உலகை ஆளும் உழவர் நந்நாள்!!
இந்நந்நாள்
என்னினிய உறவின் உறவுகளுக்கு பொன்னாள்
உழவர் தின நல்வாழ்த்துகள் 💐💐💐
தைமகளே!!
உன்னதமாய் உதிக்கும்
உழவர் உலகே!!
தமிழ பிறப்பு உனக்கு மட்மல்ல!! பரணியில் பவனி வரும் தமிழ் மொழி பேசும் உலகத்தமிழர்கள் வாழ்வில்
நல்ல ஏற்றங்கள்!! மாற்றங்கள் கிடைத்து
தமிழர் தம்
அன்பால்
அறிவால்
நற்பண்பால்
வலிகளை கடந்து,
வழிகளை அறிந்து,
வாழ்க்கையை உணர்ந்து
மனித மனங்களை
கொணர்ந்து
பண்புகளை பகிர்ந்து
பக்குவமாய் நிலைத்து
உண்மையாய் உழைத்து
உயர்வினால் திளைத்து
உன்னதங்களால் தழைத்து
பெருமையால் மகிழ்ந்து
புதிய கனவுகளை
புதிய உறவுகளை
புதிய படைப்புகளை
படைத்து!! உழவர் வாழ்வில் பல வெற்றிகள் கண்டு உன்னதம்படைத்து!! வேதனை தரும் வேளாண் சட்டங்களை வென்று!!
நாளும் மகிழ்வுடன்
ஆனந்தமடைந்து வாழ தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
இனிய தமிழர் திருநாள் உழவர் தின நல்வாழ்த்துகள்!!
என்றும் நட்புடன் அன்பழகன் நல்லுச்சாமி
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment