Wednesday, April 14, 2021

சிபிஎஸ்இ 10ஆம் தேர்வு ரத்து-12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

சிபிஎஸ்இ 10ஆம் தேர்வு ரத்து-12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து எனவும், 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல மே 4-ம் தேதி முதல் தொடங்கவிருந்த சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன் 1-ல் ஆய்வு நடத்திய பின்னர் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்க வேண்டுமென ஏற்கனவே டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலம் வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.




இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...