Friday, November 13, 2026

பழையபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

பழையபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் பழையபாளையம் அரசு  மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்கத்தில் தலைமையாசிரியர் மாரியப்பபிள்ளை அவர்கள்  அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கம் செயலாளர் முனைவர் பொ.ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். மேலும் இரவு வான் நோக்கல் நிகழ்வில் அழகிய நிலா, சனிக் கோள், சூரிய வடிகட்டி மூலம் சூரிய கரும்புள்ளி ஆகியவை தொலைநோக்கியின் மூலமாக காண்பிக்கப்பட்டது. 300 மேற்பட்ட  பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். மாணவர்களிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


















No comments:

Post a Comment

பழையபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

பழையபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். நாமக்கல் பழையபாளையம் அரசு  மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தர...