Tuesday, April 13, 2021

யாருமே நம்புவதில்லை நாம் வாழும் வாழ்க்கை கொஞ்ச காலம் தான்--தயவுசெய்து முழுமையாக படியுங்கள் 🙏🙏🙏

யாருமே நம்புவதில்லை நாம் வாழும் வாழ்க்கை கொஞ்ச காலம் தான் என்பதை இப்போ இந்தக் கொறோனா வந்ததும் நம்மில் பலர் உணர்ந்து இருப்பார்கள். ஆம் அது உண்மைதான் என்பதை வாழும் காலம் கொஞ்சம் ஆனாலும் அந்தக் காலம்வரைக்கும் சந்தோசமாக வாழ்வோம் .

தயவுசெய்து முழுமையாக படியுங்கள் 🙏🙏🙏


🎈தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:


🎈"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


 🎈அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.


🎈மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....ஏதோ சொன்னார் , 


🎈இந்த இடத்தில் அந்தப்பெண்மணி தன் கணவரிடம் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். 


🎈எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....


🎈"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"


🎈'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'


🎈"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"


🎈'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி எங்க அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'


🎈பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.


🎈தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்தத்தந்தை வளர்த்து வந்தார். 

வாழ்க்கை தத்துவம் Images (A/R/K) - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய  சமூக வலைத்தளம்

🎈அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. 


🎈தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. 


🎈கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.


🎈' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.


🎈கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:


🎈'வாழ்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் . 


🎈ஆனா சில நேரங்கள்ல அதை  நம்மால் புரிஞ்சிக்க முடியாமல் போகலாம்.


🎈அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் எந்த முடிவுக்கும் வந்துடக்கூடாது.'


🎈*'நாம ஹோட்டலுக்குப்போனால் ,  ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு  அர்த்தம்.


🎈*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.


🎈'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேலை வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நாம அவுங்களுடைய மனசிலே  இருக்கம்னு அர்த்தம்'.


🎈பின்னொரு காலத்தில ஏதாவது ஒரு கால கட்டத்தில் நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,


🎈'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'


🎈ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம்  "அவங்க கூடத்தான் பல நல்ல தருணங்களை நாங்க கழிச்சிருக்கோம்" னு.


🎈வாழ்க்கை  குறுகியது, ஆனால்  அழகானது, வாழ்வோம் , மகிழ்வோம் .

நன்றி: முரளி தமிழ் துறை, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி. 

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...