முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவிலா விண்வெளியில் மனிதகுலத்தின் காலடித்தடம் கருத்தரங்கம்.
திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிவப்பு கோள் தினத்தை முன்னிட்டு, “முடிவிலா விண்வெளியில் மனிதகுலத்தின் காலடித்தடம்” என்ற தலைப்பில் சிறப்பு விண்வெளி அறிவியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நேரு நினைவுக் கல்லூரி இணைந்து, திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கம் (TASS) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை பள்ளித் தலைமையாசிரியர் திருமதி த. தீபா அவர்கள் தலைமை தாங்கினார். அனைவரையும் ஆசிரியர் புஷ்பராஜ் அவர்கள் வரவேற்றார். பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவர் திருமதி S. தமயந்தி மற்றும் கல்வியாளர் திரு.V. இரகுநாதன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
நேரு நினைவுக் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவர் பொ. ரமேஷ், தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். தனது உரையில், சூரிய குடும்பத்தின் தோற்றம், கோள்களின் அமைப்பு, துணைக்கோள்கள், விண்கற்கள், நட்சத்திரங்களின் உருவாக்கம், பிரபஞ்சத்தின் தோற்றம், நட்சத்திரக் கூட்டங்கள், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வானியல் கருத்துகளை மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கினார்.
வாயேஜர் 1 – மனிதகுலத்தின் தொலைதூர விண்வெளித் தூதர்!
1977 செப்டம்பர் 5 அன்று
அமெரிக்காவின் கேப் கனாவரலில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 விண்கலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்
மாணவர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. வியாழன் மற்றும் சனி கோள்களை ஆய்வு
செய்த வாயேஜர் 1, சூரிய
மண்டலத்தின் எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கிடையேயான விண்வெளியில் தொடர்ந்து
பயணித்து வருவதையும், மனிதகுலம்
உருவாக்கிய மிகத் தொலைதூர விண்வெளித் தூதராகத் திகழ்வதையும் விளக்கினார்.
வியாழனின்
அயோ துணைக்கோளில் காணப்படும் எரிமலைச் செயல்பாடுகள், சனிக்கோளின் அழகிய வளையங்கள், டைட்டன் துணைக்கோளின் அடர்த்தியான வளிமண்டலம், வாயேஜர் விண்கலத்தின் அறிவியல் கருவிகள் மற்றும்
புளூட்டோனியம்-238 அடிப்படையிலான
கதிரியக்க வெப்ப மின்னாக்கி (RTG) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் தொழில்நுட்பம் ஆகியவை மாணவர்களை
வியப்பில் ஆழ்த்தின.
மேலும், 2026 நவம்பர் 18 அன்று வாயேஜர் 1 பூமியிலிருந்து
ஒரு ஒளி நாள் தொலைவை எட்டிய வரலாற்றுச் சிறப்பையும் எடுத்துரைத்தார். ஒளி ஒரு
நாளில் பயணிக்கும் சுமார் 2,590 கோடி
கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளி நாள் எனப்படுவதை விளக்கினார். 1990-ஆம் ஆண்டு வாயேஜர் 1 எடுத்த புகழ்பெற்ற 'Pale Blue Dot' புகைப்படத்தின் மூலம், அளவற்ற பிரபஞ்சத்தில் பூமி எவ்வளவு சிறியதாகத்
தோன்றுகிறது என்பதையும், நமது
பூமியைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தினார்.
விண்கலத்தில்
எடுத்துச் செல்லப்படும் கோல்டன் ரெக்கார்டு, அதில் பதிவு செய்யப்பட்டுள்ள 55 மொழிகளின் வாழ்த்துகள், பூமிக்கும் வாயேஜர் விண்கலத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு தாமதம்
மற்றும் விண்மீன்களுக்கிடையேயான விண்வெளியின் தன்மைகள் குறித்த சுவாரஸ்யமான
அறிவியல் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
வகுப்பறையைக் கடந்து வான்வெளியைத் தொட்ட அறிவியல் அனுபவம்!
கருத்தரங்கின்
சிறப்பம்சமாக, மாணவர்களுக்கு
நேரடி அறிவியல் அனுபவத்தை வழங்கும் வகையில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன. நிலவின் மாதிரி மற்றும் மெய்நிகர் விண்வெளிக் காட்சி (Virtual Space Show) மாணவர்களின்
கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இறுதியாக தொலைநோக்கி உதவியுடன் சூரியனில்
காணப்படும் கரும்புள்ளிகள் (Sunspots)
பார்வையிடப்பட்டன. மேலும், தொலைநோக்கி
மூலம் தொலைதூர பொருட்களையும் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
500-க்கும் மேற்பட்ட
மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விண்வெளி அறிவியல்
தொடர்பான அனுபவங்களைப் பெற்றனர். பாடப்புத்தகங்களில் படிக்கும் அறிவியல்
கருத்துகளை நேரடியாகக் காட்சிகள் மற்றும் தொலைநோக்கி வாயிலாக அறிந்துகொள்ளும்
வாய்ப்பை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியது. மாணவிகளிடையே அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சி ஆர்வம் மற்றும் விண்வெளித்
தொழில்நுட்பத்தின் மீதான ஈடுபாட்டை வளர்த்து, எதிர்காலத்தில் இஸ்ரோ, நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக உருவாக
வேண்டும் என்ற கனவை விதைப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)





.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment