✍🌱🌱இயற்கை வாழ்வியல் முறை🌱🌱கடுகின் நன்மைகள்.
🌱🌱🌱🌱🌱
பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.
🌱🌱🌱🌱🌱
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
🌱🌱🌱🌱🌱
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
🌱🌱🌱🌱🌱
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
🌱🌱🌱🌱🌱
கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணமாக்கும்.
🌱🌱🌱🌱🌱
கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்.
🌱🌱🌱🌱🌱
கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.
🌱🌱🌱🌱🌱
கடுகு, பூண்டு, வசம்பு, கருவாப்பட்டை, கழற்சிக்காய், கடுகு, ரோகிணி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை வீதம் ஒரு வாரம் குடித்து வர வாதம், வாய்வு, குத்தல் பிரச்சினை குணமாகும்.
🌱🌱🌱🌱🌱
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்
🌱🌱🌱🌱🌱
சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு எண்ணெய் மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
🌱🌱🌱🌱🌱
தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும்.
🌱🌱🌱🌱🌱
கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும்.
🌱🌱🌱🌱🌱
ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும்; குடிபோதை மாறும்.
🌱🌱🌱🌱🌱
வெள்ளைக்கடுகு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கும்; முடக்குவாத நோயைக் கட்டப்படுத்தும்.
🌱🌱🌱🌱🌱
வெள்ளைக்கடுகு பூச்சிக் கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு வெள்ளைக்கடுகை நீரில் ஊறவைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும்.
🌱🌱🌱🌱🌱
வெள்ளைக்கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, இரத்தக்கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும்.
🌱🌱🌱🌱🌱
¼ தேக்கரண்டி அளவு வெள்ளைக் கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குள் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.
🌱🌱🌱🌱🌱
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🦚🦚🦚🦚🦚உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர்,🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment