Sunday, July 25, 2021

TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.

TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.

TNPSC, வங்கி, காவல்துறை போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக, தமிழக அரசு இணைய வழி பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் படித்தவர்களில், பெரும்பாலானோரின் கனவு அரசு வேலைக்குச் செல்வதுதான். அதனால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு, தேர்வு குறித்த சரியான பயிற்சிகளை அளிப்பதற்காக, தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.

தற்போது, கொரோனா தொற்று காரணமாக, இணைய வழி பயிற்சி வகுப்புகளை, வேலைவாய்ப்புத்துறை நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 05-07-2021 முதல் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர கட்டணம் ஏதுமில்லை.  

வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் CISCO WEBEX இணைய பக்கத்தின் மூலமாகவோ அல்லது CISCO App மூலமாகவோ கலந்துக் கொள்ளலாம்.

இந்த பயிற்சிகளில், பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் மற்றும் அரசு அலுவலர்களைக் கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும்.

பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் இந்த  https://tamilnaducareerservices.tn.gov.in/vle/vle_home லிங்கைப் பயன்படுத்தி பதிவு செய்துக் கொள்ளவும்.

இந்த இணைய தள பக்கத்தில், போட்டித் தேர்வுகளுக்கு உரிய பாட குறிப்புகள், முந்தைய ஆண்டு வினாக்கள் போன்றவையும் உள்ளன. தேர்வர்கள் இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் பங்கு பெற QR Code மற்றும் மேலும் தகவல்களுக்கு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது QR Code வெளியிடப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் அரசின் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...