Monday, November 7, 2022

இன்று முழு சந்திர கிரகணம் - இந்தியாவில் பார்க்கமுடியுமா?

இன்று முழு சந்திர கிரகணம் - இந்தியாவில் பார்க்கமுடியுமா?

சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. பூமியின் நிழல் கரு நிழலாக விழும் பகுதி Umbra என்றும் அதன் புற நிழல் பகுதி Penumbra என்றும் அழைக்கப்படுகிறது. கரு நிழலானது நிலவின் மீது முழுவதும் விழுவது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. புற நிழல் பகுதியானது கண்ணுக்கு அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை.

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும்.

முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (08 நவம்பர் 2022) - முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலாது . ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும்.

இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தென்படும்.

தமிழ் நாட்டில் சென்னையில், சந்திரன் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள் உதிக்கும். சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும்.

சந்திர கிரகண நேரம்:

சந்திர கிரகணம்நேரம்
சந்திரனின் புறநிழல் பகுதி தொடக்கம்மதியம் 1:30:16
சந்திரனின் கருநிழல் பகுதி தொடக்கம்மதியம் 2:38:33
முழு சந்திர கிரகணம் தொடக்கம்மதியம் 3:45:57
முழு சந்திர கிரகணம் ஏற்படும் நேரம்மாலை 4:18:49
முழு சந்திர கிரகணம் முடிவுறும் நேரம்மாலை 5:11:40
சந்திர கிரகணம் கரு நிழல் பகுதி விலகல்மாலை 6:19:03
சந்திர கிரகணம் புற நிழல் பகுதி விலகல்இரவு 7:27:29

கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது ?

வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது, இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது. அதேபோல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது, இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாகக் காணப்படுகிறது.

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பதால், சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை. நிலாவின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

இந்தியாவில் இருந்து அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று பார்க்க முடியும். அதுவும் ஒரு பகுதி சந்திர கிரகணம் ஆகும்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Friday, November 4, 2022

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்.

ஆதார் என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க எண் கொண்ட  அடையாள அட்டை ஆகும்இந்த ஆதார் அடையாள அட்டை வைத்து தான் அரசின் பல்வேறு உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும்புதிதாக ஆதார் அட்டை பெறும் போது அதில் சில தகல்வல்கள் (கைப்பேசி எண், முகவரி, புகைப்படம், விழித்திரை) மாற்றம் தேவைப்படுகிறதுஇதற்காக மணச்சநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழியாக ஆதார் திருத்த முகாம் இரண்டு நாட்கள் (04.11.22, 05.11.22) நடைபெற்றதுஇந்த முகாம் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்தனர். முன்னதாக இந்த முகமை  கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன்கல்லூரி முதல்வர் முனைவர் .ஆர்.பொன் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Wednesday, November 2, 2022

3 நாட்கள் உலகம் இருளில் மூழ்குமா? .திக்..திக்... அடுத்த 60 நாட்களில் உலகில் நடக்கும் ஆபத்து!

Tuesday, November 1, 2022

வானிலை முன்னறிவிப்பு ஓர் பார்வை - Dr. S. Balachandran.

துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர்  ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஜூலை 20ஆம் தேதி ஒவ்வொரு ஆண்...