Tuesday, August 11, 2020

பிரபஞ்ச மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்த, பத்ம பூசண் விருது பெற்ற தமிழக இயற்பியலாளர், ரஞ்சன் ராய் டேனியல் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11, 1923).

பிரபஞ்ச மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்த, பத்ம பூசண் விருது பெற்ற தமிழக இயற்பியலாளர், ரஞ்சன் ராய் டேனியல் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11, 1923).

 



ரஞ்சன் ராய் டேனியல், ஆகஸ்ட் 11, 1923ல் நாகர்கோவில் எம்.ஏ. டேனியல் நாடார் மற்றும் தெரசா செல்லம்மல் டேனியல் ஆகியோருக்கு பிறந்தார். அவர் ஐந்து உடன்பிறப்புகளில் மூன்றாவதுவர். அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தனது சொந்த ஊரான நாகர்கோயிலிலுள்ள ஸ்காட் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியில் பெற்றார். ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இருந்து 1939ல் மேல்நிலைப் பள்ளியை முடித்த பின்னர், சென்னை, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் லயோலா கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி பட்டம் பெற்றார். இந்திய நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர வெங்கட ராமனின் செல்வாக்கின் கீழ், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தனது கல்வியின் அடுத்த கட்டத்தைத் தொடர அறிவுறுத்தப்பட்டார். அதில் இருந்து அவர் 1946ல் எம்.எஸ்.சி (இயற்பியல்) பட்டம் பெற்றார்.

 

டேனியல் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR)ல் 1947ல் ஒரு விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கிருந்து 1951 ஆம் ஆண்டில் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் இங்கிலாந்தில் ஆராய்ச்சி ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய அரசாங்கத்தால் நிதியுதவி வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற சி.எஃப். பவல் தலைமையிலான எச்.எச். வில்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில், அண்டத்திற்கு வெளிப்படும் அணு குழம்புகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டார். ஏப்ரல் 1953ல் டொனால்ட் ஹில் பெர்கின்ஸின் கீழ் அதிக உயரத்தில் கதிர்கள் என்ற தனது பிஎச்டி ஆராய்ச்சியை முடித்தார். டேனியல் 1988ல் ஓய்வு பெறும் வரை TIFR க்குச் சென்றார். 1975 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (ஐஎன்எஸ்ஏ) ஃபெலோவாக நியமிக்கப்பட்டார். மேலும் 1992ல் வைனு பாப்பு விருது வழங்கப்பட்டது.

 




டேனியல் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்தார். மேலும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பர்மாண்டன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவா். 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி ஆலோசகராகவும் பணியாற்றினார். அவர் 23 ஆண்டுகளாக ஹோமி ஜஹாங்கீர் பாபாவுடன் இணைந்து பிரபஞ்சத்தில் கதிாியக்கக் கதிர்கள் வேலை செய்தார். அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பங்களிப்பிற்காக 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்குப் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற பிறகு அவர் நாகர்கோயிலில் குடியேறினார். தமிழக இயற்பியலாளர், ரஞ்சன் ராய் டேனியல் நீண்டகால நோய்க்குப் பின்னர் மார்ச் 27, 2005ல் தனது 81வது வயதில், நாகர்கோயிலில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...