Tuesday, January 13, 2026

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்கத்தில் தலைமையாசிரியர் சுமதி அவர்கள்  அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். 





இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். நாமக்கல் அஸ்ட்ரோ நிர்வாகிகள் துர்கா, லோகப்ரியா, ரம்யா ஆகியோர் தொலைநோக்கி தொலைதூர தொலைதூரக் கோபுரம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.









No comments:

Post a Comment

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தர...