Tuesday, January 20, 2026

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் வானவியல் கருத்தரங்கம்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் வானவியல் கருத்தரங்கம்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று இயற்பியல் துறை சார்பாக ஒரு நாள் வானியல் கருத்தரங்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து நடைபெற்றது.  இந்த கருத்தரங்கில் இயற்பியல் துறை தலைவர் (பொ) திருமதி எஸ் வள்ளி சித்ரா  அவர்கள் சிறப்பு விருந்தினர் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார் . கல்லூரி முதல்வர் முனைவர் சௌ. கீதா அம்மையார் அவர்கள் தலைமை தாங்கினார்.  கணிதத் துறை தலைவர் திருமதி சி உமா அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களை முனைவர் சத்தியநாராயணன் அறிமுகப்படுத்தினார்.   தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். 



கிருஷ்ணகிரி அஸ்ட்ரோ கிளப் பொருளாளர் என் சிவக்குமார்  மற்றும் ரசு மேல்நிலைப்பள்ளி வரப்பனபள்ளி முதுகலை ஆசிரியர்  திரு கே கே நரசிம்மன் அவர்கள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக கல்லூரி மாணவிகள் அனைவரும் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது கல்லூரி மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் முனைவர் தம்பிதுரை அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை சார்ந்த அனைத்து பேராசிரியர்களும் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.












இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் வானவியல் கருத்தரங்கம்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் வானவியல் கருத்தரங்கம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று இயற்பியல் த...