Sunday, September 6, 2020

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2019-2020 செய்த சாதனை தொகுப்பு

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2019-2020 செய்த சாதனை தொகுப்பு.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி (Science Exhibition)

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் முதுநிலை அறிவியல் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி துறைசார்பாக மாநில அளவிலான இரண்டுநாள் அறிவியல் கண்காட்சியை இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையின் விஞ்ஞானியும்,அறிவியல் தமிழ் எழுத்தாளருமான நெல்லை.சு.முத்து கண்காட்சியை தொடக்கயுரையாற்றி தொடக்கிவைத்தார். இவ்வுரையில், திருகுறளில் உள்ள அறிவியல் நுட்பங்களை எடுத்துக்கூறினார். மேலும் அறிவியல் புனிதமானது,தொழிட்நுபம் தூய்மையானது என்றும்,எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் வரவேற்கப்படவேண்டியவை எனவும்,நமது தேசம் வல்லரசாக விழாவில் பங்கேற்ற அனைவரையும்,கலாமின் ஐந்து கட்டளைகள் சொல்லி உறுதிமொழி ஏற்கவைத்தார். மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் கடந்த 30 ஆண்டுகால இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சியையும்,சாதனையையும் பட்டியலிட்டு மாணவர்களிடையே கலந்துரையாடி மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமாகவும்,தெளிவாகவும் பதில் அளித்தார்.மூன்றாவது அமர்வில், மிககுறைந்த வயதில் NASA மற்றும் ISRO மூலமாக தொடர்ந்து மிகச்சிறியளவிலான 3-D செயற்கைகோள்களை செலுத்திவரும் space kids India அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் " யாக்னா சாய்" செயற்கைகோள் உருவாக்க தொழில்நுட்பத்தினை விளக்கமாக எடுத்துரைத்தார்.
முன்னதாக இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.A.R.பொன்பெரியசாமி வரவேற்புரையும், கல்லூரி குழுத்தலைவர். பொறியாளர். பொன்.பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர்.K.நாகராஜன், இயற்பியல் துறைத்தலைவர் நன்றியுரை வழங்கினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கபிலன் மற்றும் இரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
முதுநிலை அறிவியல் இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் நாளில் 150 அறிவியல் மாதிரிகள் காட்சிபடுத்தப்பட்டன. இந்த மாதிரிகளை ஐந்து நபர் கொண்ட நடுவர் குழு ஆய்வு செய்து சிறந்த மாதிரிகளை தேர்வுசெய்தனர். சிறந்த அறிவியல் படைப்பாக. ஆழ்துளை கிணற்றில் சிக்குபவர்களை மீட்கும் தொழில்நுட்ப மாதிரியை காட்சிப்படுத்தி விளக்கிய ஒன்பதாம் வகுப்பு சேலம், கண்ணன் குறிச்சி அரசு பள்ளி மாணவனுக்கு முதல் பரிசாக ரூபாய்.5000 மற்றும் பரிசுகேடயமும் கல்லூரிக்குழு தலைவரால் வழங்கப்பட்டது. மீதம் இரண்டு மாதிரிகளுக்கும் முதல் பரிசு தலா 5000/- மற்றும் கேடயம், மூன்று இரண்டாம் பரிசாக தலா 3000/- , மற்றும் கேடயம், மூன்று மூன்றாம் பரிசாக தலா 2000/-மற்றும் கேடயம் ஆகியன நமது கல்லூரி தலைவர்,செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் மாணவர் குழுக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 3000 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த பள்ளி,கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் தங்கள் அறிவியல் மாதிரிகளை காட்சிபடுத்தி பார்வையாளர்களுக்கு விளக்கினர். கண்காட்சியில் பங்கேற்ற பிற பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் சிறந்தமுறையில் கண்காட்சியை ஏற்பாடு செய்த கல்லூரிநிர்வாகத்திற்கு நன்றியையும், தங்களின் சிறந்த இரண்டுநாள் அனுபவங்களையும் பின்னூட்டம் (feedback) வழுங்கும் நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவுநாள் விழாவை கல்லூரி முதல்வர் பொன்பெரியசாமி வரவேற்புரையாற்றி தொடங்கிவைத்தார். நிறைவுநாள் உரையை தன்ராஜ் ISRO வழங்கினார். கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் நன்றியுரை உதவிபேராசிரியர் கபிலன் வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை உதவிபேராசிரியர் இரமேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.





























 

தமிழக மக்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய பொருட்களில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் பற்றி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தேசிய அறிவியல் தின விழாவில் மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் மாணிக்கம் மகேந்திரன் அவர்கள் செயல்முறை விளக்கம் தரும் பேச்சு வீடியோ.

Science Day Video Clipping<--- Click



பெங்களூருவில் உள்ள ரிவா(Reva) பல்கலைக்கழக மானது இந்திய அளவில் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக ஜனவரி 03, 04, 2020 இரண்டு நாள் கருத்தரங்கத்தை ஏற்படுத்தியதில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்,புத்தனாம்பட்டி,நேருநினைவுக் கல்லூரியை சேர்ந்த கு.ஜுவிதா மற்றும் இ.ஜோதிகா இயந்திரங்களில் வீணாகும் வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையும், வீ.அகிலா மற்றும் ச.கற்பகம் பகலில் உற்பத்தியாகும் சூரிய மன்னாற்றலை ஹைட்ராலிக் அழுத்தம் மூலம் சேமித்து மீண்டும் உபயோகிக்கும் முறையையும், க.தமிழரசன்,செ.சதிஷ்,ச.லோகேஷ் மின்சார இருசக்கர வாகனத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தும் எளிய முறையையும்,சு.முரளி நீரை பயன்படுத்தி ஆக்ஸிஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கும் முறையையும் விளக்கி கூறினார்.

இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.மேலும் 2000த்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த கருத்தரங்கத்திற்கு தேவையான நிதி உதவியை தலைவர் பொன்.பாலசுப்ரமணியன் ,செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் A.R.பொன்பெரியசாமி ஆகியோர் செய்து வழியனுப்பி வைத்தார்.

இதற்கு தேவையான வழிகாட்டுதல்களை ஆராய்ச்சி குழு டீன்.S.சசிகுமார், கல்விக்குழு உதவி டீன்.K.சரவணன் மற்றும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் N.P.இரமேஷ் ஆகியோர் செய்தனர்.

பெங்களூருல் புதுமை மற்றும் முனைவர் கருத்தரங்கம்.<--- Click

அறிவியல் கண்காட்சியில் இடம் பெற 1300 கிமீ பயணம் செய்த திருச்சி என்எம்சி மாணவர்கள் 

GMR IT National level Science Exhibition<--- Click

GMR IT National level Science Exhibition<--- Click

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தங்கள் கண்டுபிடிப்புகளை தேசிய அளவில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வத்துடன் ஈடுபட ஊக்கப்படுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், விஜயநகரம் அருகில் ராஜம் என்ற ஊரில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 14 வது தொழில்நுட்ப கண்காட்சி STEPCONE 2020 பெயரில் ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 ஆகிய 3 நாள் ஏற்பாடு செய்து நாட்டில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்க அறிவிப்பு செய்திருந்தது. இந்த கண்காட்சியில் திருச்சி நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் மாணவர்கள் ஜீவிதா, அகிலா, கற்பகம், முரளி, கோபிநாத் மற்றும் வழிகாட்டுதல் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் பங்கேற்றனர்.இதில் ஜுவிதா இயந்திரங்களில் வீணாகும் வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையும், அகிலா பகலில் உற்பத்தியாகும் சூரிய மின்னாற்றலை ஹைட்ராலிக் அழுத்தம் மூலம் சேமித்து மீண்டும் உபயோகிக்கும் முறையையும், கற்பகம் பார்வையற்றோர் உணரும் தொடு உணர்வு கருவியை செயல்படும் விதம் குறித்தும், முரளி கடல் நீரை பயன்படுத்தி ஆக்ஸிஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கும் முறையையும் மற்றும் கோபிநாத் பாதுகாப்பான முறையில் தகவல் தொழில்நுட்பத்தை பரிமாறும் லாரன்ஸ் கையாட்டிக் அமைப்பு முறையையும் விளக்கி கூறினார்.

கருத்தரங்கில் பங்கேற்கவர்களை கல்லூரி தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் முன்னால் முதல்வர் ஜெயபிரகாஷம், இயற்பியல் துறை தலைவர் நாகராஜன் மற்றும் பேராசிரியர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தினர்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் மற்றும் கணித துறை சார்ந்த 60 மாணவர்கள் கார்டோசாட்-3 செயற்கைகோள்PSLV C47 ராக்கெட் மற்றும் செயற்கை கோள் ஏவ படுவதை 27.11.19 அன்று நேரில் சென்று பார்வை இட்டு ராக்கெட் அறிவியல் பற்றி தெரித்து கொண்டனர். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் இணைந்து வணிக ரீதியாக அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 நானோ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மூன்றாம் தலைமுறை நவீன செயற்கைகோள் ஆகும். இது துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. மேலும், இந்த செயற்கைகோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி மாணவர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


ராக்கெட் மற்றும் செயற்கை கோள் ஏவ படுவதை நேரில் சென்று பார்வையிட்ட மாணவர்கள்<--- Click


புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரில் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கு 25.01.2020 ல் நடைபெற்றது.

இஸ்ரோ ஓய்வு பெற்ற ஜூனியர் விஞ்ஞானி M.பாலசண்முகம் பங்குபெற்று ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து விளக்கி பேசினார்.பூமி எவ்வாறு சுழல்கிறது, பூமி வளிமண்டல செயல்பாடு, ராக்கெட் வகைகள் (ரோஹிணி, SLV, PSLV, GSLV, GSLV MKIII) மற்றும் செயற்கைக்கோள் வகைகள் குறித்து விரிவாக எதுத்து கூறினார்.

கடந்த ஐம்பது ஆண்டுகால இஸ்ரோ வளர்ச்சி குறித்து விளக்கமாக எடுத்துஉரைத்தார். ககன்யான் விண்வெளி திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் குறித்து விளக்கினார்.சதிஷ்தவான் விண்வெளி மையம் ஸ்ரீஹரிகோட்டா குறித்த கட்சி படம் காண்பிக்கப்பட்டது.

கல்லூரியில் உள்ள PSLV, GSLV, GSLV MKIII ராக்கெட் மாதிரிகள் செயல்படும்விதம் குறித்து விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.இருநூறுக்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் இளம்கலை இயற்பியல் துறை மாணவர்கள் பங்குபெற்றனர்.

முன்னதாக கல்லூரியின் தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இயற்பியல் துறை பேராசியார் குமரவேல் வரவேற்பு உரையாற்றினர். பேராசியார் இரமேஷ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

என்எம்சி கல்லூரியில் ராக்கெட் தொழில்நுட்ப கருத்தரங்கு<--- Click

                        

தேசிய உதவித்தொகை தேர்வுவில் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியை சார்ந்த மாணவிகள் வெற்றி.

 தேசிய உதவித்தொகை தேர்வு (என்எஸ்இ - 2019) டிசம்பர் 15,2019 ல்நைஸ் (NICE)அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து இருபதாயிரம்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.

இந்த தேர்வு முடிவுகள் இன்று (06.01.2020) அறிவிக்கபட்டது.இதில் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியை சார்ந்த மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறையை சார்ந்த மாணவி S.மஞ்சுளா மற்றும் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறையை மாணவி T.S.கீர்த்தனா ஆகியோர் 75 சதவிகிதம் மதிப்பெண் பெற்று ஆறுதல் பரிசுகள் வென்றனர்.

இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் N.P.இரமேஷ் இந்த தேர்வுகளை ஒருங்கிணைத்து மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டீனார். வெற்றி பெற்ற மாணவிகளை தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்தினர்.






1 comment:

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...