Saturday, October 17, 2020

அரசுப்பள்ளி மாணவன்-ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி மகன்- நீட் தேர்வில் சாதனை.

ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி மகன். அரசுப்பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதனை.


   நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை!

ருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தேனி மாணவர் ஜீவித்குமார் சாதனை படைத்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால்சிறிது நேரம் இணையதளம் முடங்கி பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. 

 

இந்நிலையில் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் அரசு பள்ளிகள் மாணவர்களில் முதல் மாணவராக சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோ்வில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 99,610 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 57,215 பேர் தேர்ச்சி பெற்யுள்ளனர். இது 57.44 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டில் 48.73 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.


இந்திய அளவில், ஒடிசாவை சேர்ந்த ஷோயப் அப்தாப் என்ற மாணவர், 720க்கு, 720 முழு மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை நடந்த, நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற, முதல் மாணவராகவும் சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில், முதலிடம் பிடித்த முதல் ஒடிசா மாணவர் என்ற பெருமையும், அவருக்கு கிடைத்துள்ளது.முதலிடம் பெற்ற ஷோயப் அப்தாப், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர். டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேர முடிவு செய்துள்ளார். டில்லியை சேர்ந்த அகன்ஷா சிங் என்ற மாணவி, அகில இந்திய அளவில், இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

2 comments:

  1. I'm honestly impressed by the time and effort you put into this, Keep it up!


    hope the playlist help in creating more content.
    https://www.youtube.com/playlist?list=PL316simlc7aJZGqNDj9taOB6Tj_ke0Bwe

    ReplyDelete

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...