Monday, December 7, 2020

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் கொடி நாள் இன்று (டிசம்பர் 7).

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் கொடி நாள் இன்று (டிசம்பர் 7). 


கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 


நாட்டின் பாதுகாப்புக்காக முப்படை வீரர்களான கப்பற்படை, விமானப்படை, ராணுவப்படை வீரர்கள் தங்களின் வாழ்க்கையை நாட்டின் பாதுகாப்பாக அர்ப்பணித்து வருகின்றனர். இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமான படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை என நான்கு தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன. இந்திய ஜனாதிபதி இராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார். மேலும் இந்திய இராணுவப் படை ஒரு நான்கு நட்சத்திர இராணுவ தளபதியால் கட்டுப்படுத்தப்பட்டுகிறது. மேலும், இந்திய ஆயுதப்படைக்கு பல துணைப்படை அமைப்புகள் (அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை) மற்றும் சேவைகளிடை உளவுத்துறை நிறுவனங்கள் துணைபுரிகின்றன. 


இந்திய ஆயுதப்படைகள் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன. இந்திய இராணுவம் 1.3 மில்லியன் தீவிர ஊழியர்கள் கொண்டு உலகின் 3 வது மிக பெரிய இராணுவ சக்தியாக இருக்கிறது. இந்திய ஆயுத படைகள் 1947, 1965 மற்றும் 1971ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1971, கோவா படையெடுப்பு, இந்திய சீன போர், கார்கில் போர் மற்றும் சியாச்சின் மோதல் உட்பட பல முக்கிய இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும்.

 Teacher Recruitment: Salute INDIAN ARMY

Best Indian Army GIFs | Gfycat

Download INDIAN ARMY 🇮🇳 GIF Status, Shayari, Quotes | Nojoto...

இந்திய இராணுவமே உலகின் மிக பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. தற்போது ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இந்திய இராணுவத்திற்கு உபகரணங்கள் அளிக்கும் முதன்மை வெளிநாடுகள் ஆகும். ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும், 2.14 மில்லியன் இருப்பு படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா $ 36.03 பில்லியன் இராணுவத்திற்காக செலவிடுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83% ஆகும்.

Source By: Wikipedia.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...