Thursday, December 24, 2020

✍🏻🔴🔴இயற்கை வாழ்வியல் முறை🔴🔴உடலில் ரத்தம் அதிகரிக்க உணவுகள்.

✍🏻🔴🔴இயற்கை வாழ்வியல் முறை🔴🔴உடலில் ரத்தம் அதிகரிக்க உணவுகள்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க உணவுகள் | how to increase blood level naturally  increase hemoglobin fast - YouTube

🔴🔴🔴🔴🔴🔴

உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும். இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.

🔴🔴🔴🔴🔴🔴

உடலில் ஹிமோகுளோபின் அதிகரிக்க இவைகளே சிறந்த உணவுகள்..!! • Seithi Solai

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டால் அவர்களுக்கு எடுக்கப் படும் முதல் டெஸ்டுகளில் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது HB count என்று சொல்லப்படக்கூடிய இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கைகளுக்குத் தான். 

🔴🔴🔴🔴🔴🔴

1 டெஸிலிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

🔴🔴🔴🔴🔴🔴

ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

🔴🔴🔴🔴🔴🔴

இந்த எண்ணிக்கை சில பெண்களுக்கு மிகக் குறைவாக அமைந்து விட்டால் அவர்களை எவ்விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் உட்படுத்தமுடியாது.

🔴🔴🔴🔴🔴🔴 

அத்தகையவர்களை மருத்துவர்கள் ஹீமோ குளோபின் அதிகமிருக்கும் உணவு வகைகளைச் சாப்பிடச் சொல்லியும் இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளையும், மாத்திரை மருந்துகளைச் சாப்பிட்டு ரத்தத்தில் சிவப்பு அணுக்களான ஹீமோ குளோபின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வரச் சொல்லி பரிந்துரைப்பார்கள். பொதுவாக இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளை உட்கொள்ளும் போதும் சரி, மாத்திரைகளை உட்கொள்ளும் போதும் சரி நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும். அல்லது நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு மலச்சிக்கல் அவஸ்தை நேரும்.

ரத்தத்தை அதிகரிக்க 7 எளிய வழிகள்

🔴🔴🔴🔴🔴🔴

அதனால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் வெறும் மாத்திரை, மருந்துகளை நம்பி மட்டுமே தங்களது சிவப்பணுக்கள் எண்ணிக்கையை உயர்த்துவதைக் காட்டிலும் இயற்கையாகவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், கீரைகள் உள்ளிட்ட உணவு வகைகளை அன்றாடம் தங்களது சப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் சிவப்பணு எண்ணிக்கையும் உயரும் மலச்சிக்கலில் இருந்தும் தப்பலாம். அந்த வகையில் பெண்கள் தங்களது உடலில் சராசரி ஹீமோ குளோபின் அளவை பராமரிக்க தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்  

🔴🔴🔴🔴🔴🔴

ரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கையை உயர்த்தும் உணவுகள்

🔴🔴🔴🔴🔴🔴

முருங்கைக்கீரை

சுண்டைக்காய் (காயாகவும், வற்றல் செய்தும் உணவில் சேர்க்கலாம்.)

சிவப்பு முக்கடலை (நாட்டு முக்கடலை)

பாசிப்பயறு (அவித்தோ முளைகட்டியோ சாப்பிடலாம்)

மணத்தக்காளி வற்றல்

எள்ளுருண்டை

🔴🔴🔴🔴🔴🔴

அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை,

கருப்புத் திராட்சை (விதை நீக்கியது அல்ல), நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை

கறிவேப்பிலைத் துவையல்

பீர்க்கங்காய் (இதை குழம்பு, பொரியல், கூட்டு, துவையல் எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம்)

பிரண்டை (புளி சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்)

முள்ளங்கி (சாறு எடுத்தும் சூப் செய்தும் அருந்தலாம், பொரியல், அவியல் செய்தும் சேர்க்கலாம்)

பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி

உளுந்து, கேழ்வரகு தோசை,

பொன்னாங்கன்னி கீரை

தண்டுக்கீரை அல்லது முளைக்கீரை

வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப், 

மலைநெல்லிக்காய்ச் சாறு, பழரசம், 

பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை

🔴🔴🔴🔴🔴🔴

கருப்பு எள்ளு இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும். 

🔴🔴🔴🔴🔴🔴

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது. 

உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம் || Daily eating dates for healthy

🔴🔴🔴🔴🔴🔴

ஆப்பிள்

ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.

health benefits of apple | ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? Apple  இருந்தால் டாக்டர் வேண்டாம்... | News in Tamil

🔴🔴🔴🔴🔴🔴

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது.

🔴🔴🔴🔴🔴🔴

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும். 

தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!!

🔴🔴🔴🔴🔴🔴

உலர் திராட்சை 

உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

உலர் திராட்சை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன.....? | Webdunia Tamil

🔴🔴🔴🔴🔴🔴

பீட்ரூட் 

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வெல்லம் வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். 

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! | Benefits of Beetroot Eating!–  News18 Tamil

🔴🔴🔴🔴🔴🔴

தேன்

தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன பலன்கள்...!

🔴🔴🔴🔴🔴🔴

நெல்லிக்காய்

நெல்லிக்காய் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி? - இனிது

🔴🔴🔴🔴🔴🔴

சிட்ரஸ் பழங்கள் 

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவு வகையை சாப்பிடுங்கள்! | News in  Tamil

🔴🔴🔴🔴🔴🔴

மாதுளை

மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும். 

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளம் பழம்...! | Webdunia Tamil

🔴🔴🔴🔴🔴🔴

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🔴🔴🔴🔴🔴🔴

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...