✍️கவிதை✍️ ✍️இரஞ்சிதா தியாகராஜன்.
மேதகு மாமேதை டாக்டர் A. P. J. அப்துல் கலாம்
வா... வா.... இனிதாய் எங்கள் அக்னிச் சிறகு ...
இனிக்கட்டும் மீண்டும் இந்த உலகு....
அறிவியல் துறையில் அற்புதம் படைக்க வந்த அறிஞரே!!!
அகில உலகையே திரும்பி பார்க்க வைத்த உன்னதமானவரே!!!
வேற்று நாட்டிற்கு விலை போகாத விஞ்ஞானியே!!!
இன்றைய இளைஞர்களின் இனிய
தோழரே!!!
உங்களுக்கு இரசிகர்கள் பலருண்டு...
பெருமிதம் கொள்கிறேன்!!! அவர்களுள் நானும் ஒருவர் என்று...
போராடு..... போராடு...
தோல்வியை தோற்கடிக்க போராடு...
இதல்லவோ, உங்கள் வாய்ப்பாடு.
நாட்டிற்கு உழைத்த எங்கள் நல்லுறவே!!!
"கனவு காணுங்கள்"என்று சொல்லிவிட்டு உன் கனவை தொடர உறங்குகிறாயோ...!
இந்நிலவுலகை விட்டு சென்றாலும்,
எங்கள் நினைவிலிருந்து நீங்காதவரே!!!
எங்கள் அன்பின் "அப்துல் கலாம்"
✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment