Wednesday, February 24, 2021

✍🏻🤰🤰இயற்கை வாழ்வியல் முறை🤰🤰 பெண்கள் நலமே சமூக பலம்.

✍🏻🤰🤰இயற்கை வாழ்வியல் முறை🤰🤰 பெண்கள் நலமே சமூக பலம்.

🤰🤰🤰🤰🤰

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பெண்களுக்கே பேற்றை ஒரு பெண் அடைய ஒவ்வொரு மாதமும் அப்பெண்ணின் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகி, அது கருவடையாத பட்சத்தில் மாதமொரு முறை வெளியேறுவதை மாதவிடாய் என்கின்றனர் இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும். இதற்கான காரணம் மற்றும் இதை போக்குவதற்கான வீட்டு மருத்துவ முறைகளை தெரிந்து கொள்வோம். மாத விடாய் வலி காரணங்கள் இந்த பிரச்சனைக்கு இது தான் காரணம் என எந்த மருத்துவராலும் கூற முடியவில்லை என்றாலும் ஹார்மோன்களின் அதீத உற்பத்தி, 20 வயதிற்கு கீழாக இருக்கும் பெண்களின் உடல் தன்மை, கர்ப்பப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மாதவிடாய் வலி அறிகுறிகள்  அடிவயிற்று பகுதில் அதீத வலியிருக்கும். இந்த வலி இடுப்பு மற்றும் கால்களுக்கு பரவும். ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். மனதில் ஒரு அமைதியின்மை இருக்கும். 

🤰🤰🤰🤰🤰

இது போன்ற நேரங்களில் நமது முன்னோர்கள் பின்பற்றிய பாட்டி வைத்தியத்தை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.

🤰🤰🤰🤰🤰

வெந்தயம் நாம் உண்ணும் அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் வெந்தயம் ஆகும். இந்த வெந்தயத்திற்கு பல்வேறு உடற்குறைகளை போக்கும் ஆற்றல் இருக்கிறது. குறிப்பாக வயிறு சம்பந்தமான குறைபாடுகளை நீக்க வல்லது. மாதவிடாய் கால வலியால் அவதிப்படும் பெண்கள் தினசரி உணவில் வெந்தயம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் வெந்தயத்தை சிறிது முழுங்கி இதமான வெந்நீரை குடிக்க வலி கட்டுப்படும்.

🤰🤰🤰🤰🤰

புதினாகீரை கீரை வகைகளில் உடலுக்கு தேவையான பல அவசிய சத்துக்களை கொண்டது புதினா கீரை. உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. இந்த புதினா இலைகள் சிலவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். புதினாவை சாறாக பிழிந்து அருந்தினாலும் மாதவிடாய் வலி குறையும். 

🤰🤰🤰🤰🤰

ஏலக்காய் பலவகையான உடல் பாதிப்புகளுக்கு பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காய் பயன்படுத்தபடுகிறது. இந்த ஏலக்காய்கள் சிலவற்றை நன்கு பொடி செய்து கொண்டு பசும்பாலில் கலந்து அருந்தி வர மாதவிடாய் கால வலி குறையும். இந்த ஏலக்காய்களை அவ்வப்போது பச்சையாக வாயில் போட்டு மெல்லுவதும் சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.

🤰🤰🤰🤰🤰

இஞ்சி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் அமிலத்தன்மை மிக்க ஒரு உணவு பொருளாகும். மாதவிடாய் வலி தீர இந்த இஞ்சியை சிறிது எடுத்து நீரில் போட்டு காய்ச்சி, அதை வலி மிகுந்த நேரங்களில் அவ்வப்போது சிறிது பருகி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதை அதிகம் பருக கூடாது.

இஞ்சி நல்லது தான்… ஆனா இஞ்சி டீ?

🤰🤰🤰🤰🤰 

நீர்ச்சத்துள்ள காய்கள் மற்றும் பழங்கள் நீர்சத்துகள் அதிகமுள்ள முட்டைகோஸ், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தர்பூசணி ஆப்பிள் போன்ற காய்கள் மற்றும் பழங்களை இக்காலங்களில் உண்பது மாதவிடாய் வலியினை குறைக்கும். பருப்புகள் ஆக்ரூட், பாதம், பிஸ்தா போன்ற பருப்புகள் பல அத்தியாவசிய சத்துக்களை கொண்டது இவற்றை உண்பதால் மாதவிடாய் வலியை குறைப்பது மட்டுமின்றி, அக்காலத்தில் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெற உதவும். 

🤰🤰🤰🤰🤰 

விளக்கெண்ணெய் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியை தர வல்லது. இந்த விளக்கெண்ணையை சிறிது எடுத்து கொண்டு தொப்புள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வர சூதக வலி எனப்படும் மாதவிடாய் வலி குறையும்.

🤰🤰🤰🤰🤰

சீரற்ற மாதவிடாய்க்கு :

50 கிராம் கருஞ்சீரகத்தைப் பொன் நிறமா வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் அதே அளவு பனைவெல்லத்தை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.தினமும் இதில் நெல்லிக்காய் அளவு எடுத்து, காலை, மாலை என இரு வேளைக்கு தின்று நீர் குடித்தால் சீரற்ற மாதவிடாய் சரியாகும்.

🤰🤰🤰🤰🤰 

வெள்ளைப்படுதல் நிற்க

10 கிராம் வால்மிளகை எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதில் 5 தேக்கரண்டி தேன் கலந்து வைக்கவும். இந்த கலவையிலிருந்து, அரை ஸ்பூன் எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் முழுமையா குணமா விடும்.

🤰🤰🤰🤰🤰 

வல்லாரை சூரணம் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்., அதனை வாங்கி, தினமும் அதனை கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால். மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

🤰🤰🤰🤰🤰 

கர்ப்பப்பை வலுவாக்க

பதின்ம வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு உளுந்தக்களி செய்து கொடுத்து வந்தால் கர்ப்பப்பை மிகவும் வலுவாக இருக்கும். பிற்காலத்தில் வரும் கர்ப்பப்பை பிரச்சனைகளை தடுக்கலாம். இடுப்பெலும்பு வலிமையடையும். வெள்ளைப்படுதல், சீற்ற மாதவிடாய், வயிற்று வலி போன்றவை இருக்காது.

 🤰🤰🤰🤰🤰 

உணவுகள் :

பூசணிக்காய், பூசணி விதைகள், சுரைக்காய், முருங்கைக்காய், முருனியக்கீரை, அதிக புரதமுள்ள சோயா, மக்காசோளம் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஹார்மோன் பிரச்சனைகள் குணமாகும்.

Pumpkin GIFs | Tenorகர்ப்பிணி பெண்கள் பூசணிக்காய் சாப்பிடலாமா? கூடாதா? | Is It Safe To Eat  Pumpkin During Pregnancy - Tamil BoldSky

🤰🤰🤰🤰🤰🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர் 7598258480, 6383487768

வாட்ஸ் அப் எண் 7598258480 

🤰🤰🤰🤰🤰

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...