Wednesday, February 24, 2021

ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பாடத்திட்டங்களைநடத்தி முடிக்க உத்தரவு! விரைவில் தேர்வு.

ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பாடத்திட்டங்களைநடத்தி முடிக்க உத்தரவு! விரைவில் தேர்வு. 

சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடந்த பள்ளிகளை பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு திறக்க திட்டமிட்ட அரசு, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியது. அதில், பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த மாதம்10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 8 ஆம் தேதி திறக்கப்பட்டன. 


இதேபோல் ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் முழு பாடத்திட்டத்தையும் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து 40% பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 27 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடையும் என்பது குறிப்பிடதக்கது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...