Wednesday, November 4, 2026

சாதனை படைத்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஜூடோ பயிற்றுநர் செல்வி மா. தணிகா

சாதனை படைத்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஜூடோ பயிற்றுநர் செல்வி மா. தணிகா.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலையான ஜூடோ பயிற்சியை அளித்து வரும் பயிற்றுநர் செல்வி மா. தணிகா அவர்கள், சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஜூடோ போட்டியில் 70 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தலைமை ஆசிரியர் மு.சாகுல் அமீது உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். 


இதன் மூலம் ரூ.50,000 ரொக்கப் பரிசு, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழைப் பெற்றுள்ளார். பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து அவர்களின் தன்னம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் வளர்த்து வரும் தங்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மென்மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள்!


இது போன்ற தகவல் பெற

நன்றி.
முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சாதனை படைத்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஜூடோ பயிற்றுநர் செல்வி மா. தணிகா

சாதனை படைத்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஜூடோ பயிற்றுநர் செல்வி மா. தணிகா. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடு...