Saturday, April 24, 2021

தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 20 புதிய கொரோனா கட்டுப்பாடுகள்.

தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 20 புதிய கொரோனா கட்டுப்பாடுகள்.

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. முதல் அலையின் போது ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 6,950 பேர் என்று இருந்த நிலையில் இரண்டாவது அலையின் ஒரு நாள் உச்சம் இரண்டு மடங்காகி இருக்கிறது. ஏற்கனவே இரவு நேர கட்டுப்பாடு , ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என கொரோனா பரவலை தடுக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணமே இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து , வணிக வளாகங்கள், தியேட்டர்களை குறிப்பிட்ட காலத்திற்கு மூடுவது உள்ளிட்ட மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வருகிற 26ஆம் தேதிமுதல் மீண்டும் அமலுக்கு வரும் கடந்த ஆண்டு கொரோனா விதிமுறைகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை தமிழகம் மீண்டும் அமல்படுத்துகிறது.

  • சென்னை உட்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
  • அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
  • விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.
  • அனைத்து மின் வணிக சேவைகள்(e-commerce) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை.
  • பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டு குடமுழுக்கு உரிய நடைமுறைகளுடன் நடத்த அனுமதி.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குமேல் பங்கேற்க அனுமதியில்லை.
  • புதுச்சேரி தவிர்த்து அனைத்து மாநிலங்களிலுருந்தும் தமிழகம் வருவோர்க்கு இ-பாஸ் கட்டாயம்.
  • வெளிநாட்டிலிருந்து விமானம்/ கப்பல் மூலம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயம்.
  • அரசு, தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டும் அனுமதி.
  • வாடகை மற்றும் டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி

  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை.
  • ஐடி நிறுவனங்களில் 50% பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்தே பணிபுரியவேண்டும்.
  • விளையாட்டு பயிற்சி சங்கங்கள்/ குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை.



இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி. 






No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...