✍🏻🥬🥬இயற்கை வாழ்வியல் முறை🥬🥬கோவைக்காயின் நன்மைகள்.
🥬🥬🥬🥬🥬
கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.
🥬🥬🥬🥬🥬
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கோவைக்காய் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
🥬🥬🥬🥬🥬
கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்
🥬🥬🥬🥬🥬
கோவைக்காய் இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும் இலை தண்டு கஷாயம் மார்புச்சளி சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும் இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்
🥬🥬🥬🥬🥬
கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும் சீக்கிரத்தில் ஜீரணமாகாது ஆனால் மூச்சு இரைத்தல் வாந்தி வாய்வு, ரத்த சோகை பித்தம் காமாலை முதலான பிரச்னைகளை குணப்படுத்தும் கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்
🥬🥬🥬🥬🥬
கோவைக்காய் பித்தம் ரத்தப் பெருக்கு வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
🥬🥬🥬🥬🥬
தோல் கிருமிகள் நீங்க தோலில் ஏற்படும் சொறி சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை மஞ்சள் தூள் சிறியா நங்கை வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
🥬🥬🥬🥬🥬
உடல் சூடு கோடையின் தாக்கத்தால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலையை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும் கண்கள் குளிர்ச்சிபெறும்.
🥬🥬🥬🥬🥬
வியர்க்குருவை தடுக்க சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருக்களாக நீர்கோர்த்துக் கொள்ளும் இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம் கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி சிரங்கு நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.
🥬🥬🥬🥬🥬
தாது புஷ்டியாக இன்றைய மன அழுத்த பிரச்சனையால், சிலர் தாதுவை இழந்து விடுகின்றனர். இதனால் இவர்கள் மணவாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர் இப்பிரச்னை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்
இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும். கோவை இலையை நன்கு உபயோகப்படுத்தும் போது, உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
🥬🥬🥬🥬🥬
கட்டுரை ஹரிஹரன்
🥬🥬🥬🥬🥬
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🤭🤭🤭🤭🤭
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
💞💞💞💞💞
நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480
வாட்ஸ் அப் எண் 7598258480
🥬🥬🥬🥬🥬
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9750895059.
No comments:
Post a Comment