✍🌿🌿 இயற்கை வாழ்வியல் முறை🌿🌿 கீழாநெல்லியின் நன்மைகள்.
🍀☘🍀☘🍀
சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது.
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.
🌿🌿🌿🌿🌿
கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.
கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.
🌿🌿🌿🌿🌿
கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறதுபார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.
🌿🌿🌿🌿🌿
🌿🌿🌿🌿🌿
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
🌿🌿🌿🌿🌿
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
🌿🌿🌿🌿🌿
1 டம்ளர் மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
🌿🌿🌿🌿🌿
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
🌿🌿🌿🌿🌿
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
🌿🌿🌿🌿🌿
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
🌿🌿🌿🌿🌿
சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!
🌿🌿🌿🌿🌿
என்று கீழாநெல்லியின் மகத்துவத்தை அகத்தியர் குணபாடம் விவரிக்கின்றது. இயற்கை, நோய்களைப் போக்கும் அதிஅற்புதமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கை நமக்களித்த மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தி, நோய், நொடி இல்லாமல் வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷 உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🤭🤭🤭🤭🤭 உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
💞💞💞💞💞
நன்றி : பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480
🌿🌿🌿🌿🌿
குரு வாழ்க குருவே துணை
🌿🌿🌿🌿🌿
N.P. RAMESH : 9750895059.
No comments:
Post a Comment