Saturday, April 24, 2021

✍🏻🫖🫖இயற்கை வாழ்வியல் முறை🫖🫖உளுந்தின் நன்மைகள்.

✍🏻🫖🫖இயற்கை வாழ்வியல் முறை🫖🫖உளுந்தின் நன்மைகள்.

🫖🫖🫖🫖🫖

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் குழம்பு, கூட்டு போன்றவற்றுக்கு பல வகையான பருப்புகளை பயன்படுத்துகின்றோம் அவற்றில் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் பருப்பு வகையாக உளுந்து இருக்கிறது அந்த உளுந்தில் வெள்ளை உளுந்து கருப்பு உளுந்து என இருவகை இருக்கின்றன. இதில் கருப்பு உளுந்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

🫖🫖🫖🫖🫖

கருப்பு உளுந்து 

செரிமான திறன்

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது செரிமான திறனும் மேம்படுகிறது.

🫖🫖🫖🫖🫖

உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.

🫖🫖🫖🫖🫖

நமக்கு வயது ஏற, ஏற நமது உடலில் உள்ள எலும்புகளும் மூட்டு பகுதியிலும் வலிமை குன்றி உடல் இயக்கத்தை குறைத்து விடும் ஆபத்து உள்ளது கருப்பு உளுந்தில் கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும் ஆர்த்திரிடிஸ் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

கருப்பு உளுந்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் !!

🫖🫖🫖🫖🫖

நீரிழிவு நோய் ஒரு கொடுமையான வியாதி ஆகும் நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.

🫖🫖🫖🫖🫖

நமது பண்டைய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சரும சம்பந்தமான வியாதிகள் பிரச்சனைகளைப் போக்க கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் தழும்புகள், ஆதீத சூரிய ஒளியால் தோல் கருத்துப் போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருப்பு உளுந்து அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் தீர்கிறது

🫖🫖🫖🫖🫖

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.

🫖🫖🫖🫖🫖

கறுப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது. 

இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும் முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

உளுந்து — நன்மைகளும், பயன்களும் | by Tamil 360 | Medium

🫖🫖🫖🫖🫖

உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்

மாதவிடாய் வலி நீக்கும் வெள்ளை உளுந்து

🫖🫖🫖🫖🫖

வெள்ளை உளுந்துதான் தற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இட்லி, தோசை, வடை போன்றவை வெள்ளையாக இருக்க வேண்டுமென்று உணவகங்கள் நினைத்த காரணத்தால், வெள்ளை உளுந்து பிரபலமாகி இருக்கலாம்

அரிசியோடு சேர்த்து மாவாக அரைக்கப்பட்டு இட்லி தோசைக்கும், தனியாக அரைக்கப்பட்டு வடைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மங்கள நிகழ்வுகளில் ’உளுத்தஞ்சோறு’ நெடுங்காலமாக இடம்பெற்றுவருவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

urad dal benefits for uterus: வயதான காலத்திலும் கருப்பை ஆரோக்கியம் காக்கும்  கருப்பு உளுந்தங்கஞ்சி! தயாரிப்பும், பலன்களும்! - benefits of karuppu  ulundhu kanji for female ...

🫖🫖🫖🫖🫖

வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிடச் சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும் இருக்கின்றன.

இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

🫖🫖🫖🫖🫖 

உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்

தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். மலத்தை வெளித் தள்ளவும் உதவுகிறது.

🫖🫖🫖🫖🫖

தோல் நீக்கப்பட்ட உளுந்து, பாலுணர்வைத் தூண்டக்கூடியதாகக் கருதப்படுகிறது.

🫖🫖🫖🫖🫖

இதை அதிகமாகச் சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தலாம்அது மட்டுமில்லாமல் இதில் ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

🫖🫖🫖🫖🫖

மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுத்தங் கஞ்சி சிறந்த உணவு

சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.

🫖🫖🫖🫖🫖

தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சித்தர் அகத்தியர்.

🫖🫖🫖🫖🫖

எதிர்பாராத விதமாக அடிபடுதல் விபத்து போன்றவற்றில் உடலில் காயங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றனசமயங்களில், உள்காயங்களும் உண்டாக்கிவிடுகின்றன. இத்தகைய பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் அடிபட்ட இடத்தில் பிராணவாயு அதிகம் கிரகிக்க செய்து புண்களையும் காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.

🫖🫖🫖🫖🫖

உளுந்து மூலம் செய்யப்படும் உளுந்துத் தைலம், சித்த மருத்துவத்தில் வாத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறதுவலிமை இழந்த தசைக்கு வலுவூட்ட உளுந்துத் தைலம் உதவுகிறது தொக்கண முறைகளில் அதிக அளவில் உளுந்துத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.

முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது

எலும்பு முறிவிற்கு தண்ணீரில் ஊற வைத்து, காய வைத்து,அரைத்த கறுப்பு உளுந்து மாவு முட்டை வெண்கரு இட்டு குழைத்து துணி சுற்றி கட்டுதல் சித்த மருத்துவ வழிமுறை.

உளுந்தில் பச்சைக்காய் துளைப்பான் கட்டுப்படுத்தும் முறைகள் - பசுமை இந்தியா

🫖🫖🫖🫖🫖

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N. P. RAMESH:9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...