Wednesday, May 5, 2021

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).

யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல்இயற்பியல்வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். மேயரின் பத்தாம் அகவையிலேயே தந்தையார் இறந்து விட்டார். 1769ல் கோட்டிங்கன்ஜார்ஜ் ஆகத்து பல்கலைக்கழகத்தில் இறையியலும் மெய்யியலும் கற்றார். இது அப்போது தான் ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னரின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகமாகும். காசுட்னருக்குப் பின்னர்இது ஜார்ஜ் கிறித்தோப் இல்ச்டென்பர்கின் கீழ் இயங்கியது. இவர் 1773ல் பட்டம் பெற்றதும் கணிதவியல் விரிவுரையாளராகவும் வானியலாளராகவும் பணிபுரிந்தார். நவம்பர் 17, 1779ல் அல்தோர்ஃப் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கே இவர் 1780 முதல் 1786 வரை பணிபுரிந்தார். 


பிறகு இவர் எர்லாங்கன் நியூரன்பர்கில் அமைந்த பிரீட்ரிக் அலெக்சாந்தர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலும் இயற்பியலும் கற்பித்தார். இவர் 1799ல் கோட்டிங்கனில் இலிச்டென்பருக்குப் பிறகு தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்துக்குத் தலைமை வகித்துள்ளார். இவரது மாணவர்களில் என்னோ கீரன் டிர்க்சன் அடங்குவார். டிர்க்சன் 1820ல் முனைவர் பட்டம் பெற்றதும்கார்ல் குசுதவ் யாகோபுக்கு அறிவுரையாளராக விளங்கினார். மேயருக்கும் அவரது மனைவி யோகான்னாவுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். இலியனார்டோ டா வின்சியினது எனக் கருதப்பட்ட பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு இப்போது மேயர் 1772ல் நிறுவியதாகக் கருதப்படுகிறது. 


மேயர் கணிதவியல்இயற்கை அறிவியல் பாடநூல்களுக்குப் பெயர்போனவர். இவர் 1801 இல் எழுதிய இயற்பியல் பாடநூலான Anfangsgründe der Naturlehre zum Behuf der Vorlesungen über die Experimental-Physik எனும் நூல் ஜெர்மன் மொழிபேசும் நாடுகளில் எல்லாம் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. இவரது வானியல்செய்முறை இயற்பியல் ஆய்வுகள் Annalen der Physik எனும் இதழில் வெளியாகினபிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், யோகான் தோபியாசு மேயர்  நவம்பர் 30, 1830ல் தனது 78வது அகவையில்கோட்டிங்கனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...