Friday, February 18, 2022

5417 பணியிடங்கள் - TNPSC Group 2 and 2A தேர்வு அறிவிப்பு.

5417 பணியிடங்கள் - TNPSC Group 2 and 2A தேர்வு அறிவிப்பு.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான அரசாணை வரும் பிப்ரவரி 23-ம் தேதி, தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ம் தேதி இறுதி நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, " குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் மே 21, சனிக்கிழமையன்று  நடைபெறும். ஏற்கெனவே திட்டமிட்டபடி, இத்தேர்வுகளை இருவகைகளில் எழுதலாம். அதன்படி, தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300-க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு 90-க்கும் குறைவான மதிப்பெண் பெறுவது அடிப்படை.

இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும்” என்றார்.









No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...