அக் 6 முதல் 11 வரை நடைபெறவுள்ள NET தேர்வுக்கு செப் 5 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
🎯♨️அக்டோபர் 6 முதல் 11 வரை டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021க்கான 2 NET தேர்வுகளும் ஒரே கட்டமாக நடத்தப்படும்- தேசிய தேர்வு முகமை.
அக்டோபர் 6 முதல் 11 வரை நடைபெறவுள்ள NET தேர்வுக்கு செப்டம்பர் 5 வரை ugcnet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முடிவை அறிவித்துள்ளது
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் அதே போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்த வேண்டிய நெட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத வரும்போது கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment