Thursday, August 26, 2021

உலகின் மிகப் பெரிய ராட்டினம்.. கண் கவரும் காட்சிகள்.

உலகின் மிகப் பெரிய ராட்டினம்.. கண் கவரும் காட்சிகள்.

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி துபாயில் புளு வாட்டர்ஸ் தீவில் ஒரு பிரம்மாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐன் துபாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப் பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம்.

இந்த ராட்டினம் 250 மீட்டர் உயரம் ஆகும். பிரிட்டனின் லண்டனிலுள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டது. இந்நிலையில் இந்த ராட்டினம் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு இந்த ராட்டினம் திறக்கப்படுகிறது. இந்த ராட்டினத்தில் ஒரு முழு சுற்று வர 38 நிமிடங்கள்ஆகும்.

 

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...