Sunday, August 8, 2021

✍🏻👥👥இயற்கை வாழ்வியல் முறை👥👥ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்.

✍🏻👥👥இயற்கை வாழ்வியல் முறை👥👥ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள். 

👥👥👥👥👥

 கட்டுரை மருத்துவர் கு.சிவராமன்!

👥👥👥👥👥

சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன் கூடிய வலி, மாரை அடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம் ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும் நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள் செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்.

இனி, ஜீரணத்தை சீராக்க சில வழிமுறைகள்

ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானதுஇரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.

👥👥👥👥👥

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம் ஜீரணத்தை சீராக்கும்

மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும்.

அதிகக் காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும்.

ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது

சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது

எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும்

புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும்

காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது.

துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம்.

👥👥👥👥👥

வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.

காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம்.

மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும்

இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும்.

கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும்

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும்

சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை.

தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்!

👥👥👥👥👥

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...