Saturday, September 11, 2021

✍🏻🥬🥬இயற்கை வாழ்வியல் முறை🥬🥬கோவைக்காய் நன்மைகள்.

✍🏻🥬🥬இயற்கை வாழ்வியல் முறை🥬🥬கோவைக்காய் நன்மைகள்.

🥬🥬🥬🥬🥬

நாம் உணவு உண்ணும் போது தொட்டுக்கொண்டு சாப்பிட காய்கறிகள் இல்லாமல் இருந்தால் அது சரியான உணவு உண்டதாக ஆகாது. நமது நாட்டில் பல வகையான பாரம்பரிய காய்கறிகள் விளைகின்றன அதில் ஒன்று தான் கோவக்காய். கோவக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

🥬🥬🥬🥬🥬

தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கோவக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.

🥬🥬🥬🥬🥬

ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்

🥬🥬🥬🥬🥬

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கோவைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்ட கோவைக்காய்....!

🥬🥬🥬🥬🥬

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கோவைக்காய் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.  நீரிழிவு   நோய் வராமல் தடுக்கலாம்.

 🥬🥬🥬🥬🥬

கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண்  ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

🥬🥬🥬🥬🥬

கோவைக்காய் இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.

🥬🥬🥬🥬🥬

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும், கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து, சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி, ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

🥬🥬🥬🥬🥬

கோடையின் தக்கத்தால், சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலையை கசாயம் செய்து அருந்தி வந்தால், உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

🥬🥬🥬🥬🥬

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருக்களாக நீர்கோர்த்துக் கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து, உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம். கோவை இலையின் சாறுடன், வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.

🥬🥬🥬🥬🥬 

கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும் சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண்  விரைவில் ஆறும்.

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.

கோவைக்காயில் அடங்கியுள்ள அதிஅற்புத மருத்துவ நன்மைகள்…

🥬🥬🥬🥬🥬

 🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...