Monday, September 20, 2021

✍🏻🍠🍠இயற்கை வாழ்வியல் முறை🍠🍠கருணை கிழங்கின் நன்மைகள்.

✍🏻🍠🍠இயற்கை வாழ்வியல் முறை🍠🍠கருணை கிழங்கின் நன்மைகள்.

🍠🍠🍠🍠🍠

கருணைக்கிழக்கு, சுவையிலும், மருத்துவக் குணத்திலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து உணவாக பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக்கிழங்கை சாப்பிடலாம். மாங்கனீஸ், பொட்டாசியம்,இரும்பு உட்பட சத்துகள் உள்ளன. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

🍠🍠🍠🍠🍠

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. பெண்களின் வெள்ளைப்பாடு உபாதைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. உடல் வலி இருந்தால், குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.

🍠🍠🍠🍠🍠

கல்லீரலுக்கு சுறுசுறுப்பு:

உடல் எடை அதிகமாகி, மூட்டுவலி உட்பட கோளாறுகளால் அவதிப்படுவோர், தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக்கிழங்கு. கிழங்குகளில், சுலபமாக ஜீரணமாவதும் கூட. குடலில் கிருமி சேராமல் தடுத்து, கொழுப்பு அதிகமாக சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படுகிறது. 

ரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பைக் குறைப்பதிலும், ரத்தம் உறைதலை துரிதப்படுத்துவதிலும், முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கிழங்குகளை தவிர்க்க வேண்டும். ஆனாலும், கருணைக்கிழங்கு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்னையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.

எடை குறையும்: முடக்குவாதம் உள்ளவர்கள், வாரம், இருமுறை உட்கொண்டு வந்தால், நோய் குணமாகும். வைட்டமின் "சி' சத்தும், ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும் அதிகம் உள்ளன. கருணைக்கிழங்கு, உடலை குளிரச் செய்யும் உணவு என்பதால், ஆஸ்துமா இருப்பவர்கள், முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

🍠🍠🍠🍠🍠

குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு' என்று வாசகம் உள்ளது. சாதாரணமாக சமைத்து சாப்பிட்டால், 

நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். நன்றாக வேக வைத்து பின், தோலை உரித்து, புளி சேர்த்து சமைத்தால், அதிலுள்ள காரல் நீங்கும். அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைப்பதுண்டு.

இதனால், காரல், நமைச்சல் கட்டுப்படும். வேகவைத்து அரைத்து மசித்த கருணை கிழங்கு, ஒரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலக்கவும். இதனுடன் சாம்பு மற்றும் தனியா சேர்ந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.

🍠🍠🍠🍠🍠

அல்சருக்கு தீர்வு: கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணை கிழங்கு தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றும் நல்மருந்தாக விளங்குகிறது. கருணைக்கிழங்கை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வேகவைத்த கருணை கிழங்கை மசித்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நெஞ்செரிச்சல், அல்சர் குணமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

🍠🍠🍠🍠🍠

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

🍠🍠🍠🍠🍠

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

🍠🍠🍠🍠🍠

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

🍠🍠🍠🍠🍠

மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக ஏற்று நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு. உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது சற்றுக் கடுமை குறைந்த பத்தியமுறை ஆகும்.

🍠🍠🍠🍠🍠

குழந்தைகளின் வளர்ச்சியில் கிழங்குகளுக்கு அதிகப் பங்கு உள்ளது. ஏராளமான தாதுப் பொருள்கள், எக்கச்சக்கமான வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் எனச் சத்துகளின் உறைவிடமாகக் கிழங்குகள் இருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை வேகவைத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது சிறந்தது. 

பரிமாண வளர்ச்சியை மேம்படுத்துவதில், கிழங்குகளுக்குப் பெரிய பங்கு உண்டு.

கிழங்கு, கார்போஹைட்ரேட் நிறைந்தது. அளவுக்கு மீறி உட்கொண்டால், செரிமான பிரச்னை, வாய்வுத் தொல்லைகள் ஏற்படும். ஏதாவது நோய்க் குறைபாடு இருப்பவர்கள், தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் கிழங்குகளைத் தொடர்ச்சியாக சாப்பிடவே கூடாது. 

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் இதய நோயாளிகள்

🍠🍠🍠🍠🍠

உடலுழைப்பு அதிகமில்லாதவர்கள், குடலில் பாதிப்பு இருப்பவர்கள், மூட்டுப் பிரச்னை இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். சிலர் சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என ஏதாவது ஒரு கிழங்கை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படி ஒன்றை மட்டும் சாப்பிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். புரதச்சத்துகள் நிறைந்த காய்களோடு சேர்த்துக் கிழங்கைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்.

இவர்கள் கிழங்கு சாப்பிடலாம், "இவர்கள் சாப்பிடக் கூடாது என்ற யாரையும் குறிப்பிட்டு ஒதுக்கிவிட முடியாது. சர்க்கரை நோயாளிகள்இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பிரச்னை உள்ளவர்கள், கிழங்கு விரும்பிகளாக இருக்கும்பட்சத்தில் ஊட்டச்சத்து நிபுணரிடமும் சம்பந்தப்பட்ட நோயின் சிறப்பு மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று, அதற்கேற்றபடி கிழங்கு சாப்பிடலாம்.

ஆனால், வெகுசிலருக்கு மட்டுமே ஏற்படுத்தும். அவரவரின் சரும அமைப்பை பொறுத்துதான் பாதிப்பு ஏற்படும். முதன்முறை சாப்பிட்டு சரும ஒவ்வாமை ஏற்பட்டால், சிலர் அந்தக் கிழங்கை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். அது தவறு. சில கிழங்குகளை நாள்பட நாள்பட உடலும் சருமமும் ஏற்றுக்கொள்ளும். மீண்டும் மீண்டும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒவ்வாமை தொடர்ந்தால் சரும மருத்துவரை அணுகவும்.

கிழங்குகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரமும், அதிக உழைப்பும் தேவைப்படும். இரண்டில் எது குறைந்தாலும் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படும். கிழங்கு வகைகளைச் சாப்பிட்டவுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம். சிறிதளவு சீரகம், பெருங்காயம் சேர்த்து வேகவைக்கப்பட்ட கிழங்குகளைச் சாப்பிடுவது, செரிமானக்கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பது, வேலை செய்வது, உடலுழைப்பைச் சற்று அதிகப்படுத்துவது போன்றவற்றின் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

🍠🍠🍠🍠🍠

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...