Monday, September 20, 2021

✍ 🛎🛎இயற்கை வாழ்வியல் முறை🛎🛎பூமியை போற்றுவோம்.

✍ 🛎🛎இயற்கை வாழ்வியல் முறை🛎🛎பூமியை போற்றுவோம்.

🛎🛎🛎🛎🛎

நாம் வாழும் பூமியை நமது தாய்க்கு சமமாக நாம் வைத்திருக்கின்றோம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம் இதற்கு என்ன காரணம் என்றால் நமது தாயைப்போல, மிகுந்த பொறுமையாக எல்லாவற்றையும் தாங்கிகொண்டு நம்மை வாழவைப்பதால்தான் மேலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நமக்கு சேவை செய்வதில் சிறந்து விளங்குகிறது என்பதனாலும் தான்

🛎🛎🛎🛎🛎

வள்ளுவன் குறளில் சொன்னது போல “அகழ்வாரைத்தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப்பொறுத்தல்தலை” என்பதன் பொருள் என்னவென்றால், தன்மீது நின்று தன்னையே வெட்டும் மனிதரை தாங்கும் நிலம்போல, நம்மை இழிவோரை பொறுத்துக்கொள்ளுதல் என்றும் ஒரு நல்ல பண்பு. இந்த குறளில் இருந்து நிலம் என்பது எவ்வாறு பண்போடு நம்மை தாங்கிக்கொண்டு நமக்கு சேவை செய்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுதல் நலம்.

🛎🛎🛎🛎🛎

இப்படிப்பட்ட இந்த புனிதபூமிக்கு நாம் என்ன கைம்மாறு செய்கிறோம் என்பதுதான் இன்றைக்கு நம்முன்னால் இருக்கும் கேள்வி. கைம்மாறு செய்யாமல் இருப்பதுகூட குற்றமில்லை. ஆனால், மேலும் அதை அதிகமாக தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பது நிஜம். இதை சிந்தித்து நம்போக்கை உடனடியாக மாற்றாவிட்டால் பின்பு நமக்கு பின்னால் வரும் சந்ததிக்கு, வாழுவதற்கு நிலம் இல்லாமல் போகக்கூடும். இந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நாம் இனி செயலாற்ற வேண்டியது மிகஅவசியம்.

🛎🛎🛎🛎🛎

நம்முடைய வாழ்வியல்முறை நவீனம் என்ற போர்வையில் இயற்கையை புறக்கணித்துவிட்டது. இதை முதலில் நாம் சிந்தித்து இயற்கையோடு கைக்கோர்த்து வாழ பழகுதல் வேண்டும். முடிந்தவரை நம்முடைய சுற்றுச்சூழலை சுத்தமாக, பசுமையாக, இயற்கையான வகையில் வைத்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் நம்மை நோக்கி நல்லசுவாசம் தேடிவரும். நல்ல எண்ணங்களும் நம்மில் உற்பத்தியாகும்.

🛎🛎🛎🛎🛎

புவிசூடாதல் (GLOBAL WARMING) என்ற ஒன்றை நாம் நிச்சயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இதனுடைய தீமைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இது ஏன் வந்தது? எப்படி வந்தது? எதனால் உருவானது? போன்றவைகளை சற்று நேரம் ஒதுக்கி புரிந்துகொள்வது மிகவும் இன்றிமையாதது. தயவுசெய்து எல்லோரும் சிறிது சிரமம் எடுத்து வலைத்தளம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான், நாம் எவ்வளவு இயற்கை சிக்கலில் சிக்கி இருக்கின்றோம் என்பது நமக்கு புலப்படும்.

🛎🛎🛎🛎🛎

நம்முடைய சுற்றுச்சூழல் சீர்குலைந்துபோய் பூமியின் நீர்வளம் குன்றிபோய், பசுமை சூழ்நிலை அழிந்துபோய், நாம் எதிர்காலத்தில் சுவாசிக்கக்கூட காற்று இல்லாமல் தவிக்கும்நிலை ஏற்படுமா? என்று சிந்திக்க தோன்றுகிறது. நம்மால்தான் இது வந்தது என்பதை நாம் ஒப்புக்கொண்டு இதற்கு பரிகாரம் தேடும் முயற்சியில் இறங்குவதுதான் நம் பூமி தாய்க்கு நாம் ஆற்றும் கடமை ஆகும்.

🛎🛎🛎🛎🛎

எனவே இன்றிலிருந்து நாம் நம்மை சற்று சிந்திக்க தூண்டுவது மிகவும் சிறப்பானது. அப்படி சிந்தித்து சில செயல்களை நாம் செய்திட ஆரம்பிக்கவேண்டும். அவை என்னவென்றால் இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நடுதல்வேண்டும். எங்கு இடம் இருப்பினும் அதை மரக்கன்றுகளால் நிரப்பிட நாம் துணிதல் வேண்டும். நம் இல்லந்தோறும் இயன்றவரை பசுமையாக செடிகளால், மரங்களால், தாவரங்களால் செம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். இதை ஒரு கொள்கையாக இனி ஏற்போம். 

🛎🛎🛎🛎🛎

மேலும் மழைநீர் சேகரிப்பை இனி கட்டாயம் நம்வாழ்வின் அம்சமாக்குவோம். பசுமை நிறைந்த விவசாயத்தை ஆதரிப்போம். இயன்றவரை இயற்கை உரங்கள் பயன்படுத்த எடுத்துச்சொல்வோம். நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் இயற்கை சார்ந்த பொருட்களை ஒட்டி இருத்தல் நலம். அதிகப்படியான இயற்கையான தரமுள்ள பொருட்களோடு வாழகற்போம்.

இயற்கையின் வரமாக இருக்கும் நீர்நிலைகள், வாய்க்கால்கள், ஓடைகள், நதிகள், ஆறுகள் போன்றவை காக்கப்படும். தூய்மை செய்யப்படும் செயல்கள் முயற்சிகள் ஆகியவற்றுக்கு நாம் கரம் கொடுப்போம். விவசாயம் அழிந்து அங்கு வேறுநிலை உருவாகும் நிலைக்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து, அந்த செயல் நடக்காமல் இருக்க நம்மால் இயன்றவைகளை தவறாமல் செய்வோம்.



🛎🛎🛎🛎🛎

நம் பூமி தாயாக பின்பு நாம் தான் அதற்கு பிள்ளைகள். இந்த உணர்வோடு வாழ பழகிக்கொண்டால் நாம் வாழும் பூமி நமக்கு சொர்க்கம். பெற்ற தாயை எந்த பிள்ளையும் கொலை செய்யாது. இந்த வேதத்தை நாம் கற்றால் இது தான் நம் வாழ்வின் மகிழ்ச்சி மந்திரம்.

🛎🛎🛎🛎🛎

எனவே இந்த சமூக சிந்தனையோடு, நாம் இனி அடிவைப்போம். நம்முடைய ஒவ்வொரு நிமிட வாழ்க்கையும் புது வசந்தத்தை கொண்டு வரும் தந்திரமாக மாறிடும். இந்த நல்ல செய்தியை உள்ளத்தில் பெற்றவர்களாக நாம் நடைபோட்டு வெற்றி பெறுவோம். 

நல்ல மக்களாக வாழ்ந்து அடுத்த தலைமுறைக்கு இந்த பூமியை ஒரு பொக்கிஷமாக பரிசளிப்போம். இயற்கையை காப்போம். இறக்கை விரித்து சுகமாக பறப்போம் 

பல்லுயிர்களை பாதுகாப்போம் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

🛎🛎🛎🛎🛎

கட்டுரை: தமிழ் நெஞ்சன்

🛎🛎🛎🛎🛎

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...