Monday, March 27, 2023

36 செயற்கைக்கோள்களும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

36 செயற்கைக்கோள்களும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.  

ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள், திட்டமிட்டபடி விண்ணில் அதன் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த, அந்நிறுவனத்துடன் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. வணிக நோக்கிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், 2-வது கட்டமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் இன்று (மார்ச் 26) காலை 9 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

இந்த 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,805 கிலோ. இவை அனைத்தும் பூமியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் பகுதி பகுதியாக லாஞ்சரிலிருந்து பிரிந்து அதன் வட்டப் பாதையை அடைந்தன.
























இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...