Thursday, October 29, 2020

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய காரல் ஜெராசி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 29, 1923).

 குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய காரல் ஜெராசி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 29, 1923).

காரல் ஜெராசி (Carl Djerassi) அக்டோபர் 29, 1923ல் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். ஆனால் தனது குழந்தை பருவத்தின் முதல் ஆண்டுகளை பல்கேரியாவின் சோபியாவில் கழித்தார். அவரது தந்தை சாமுவேல் டிஜெராசி, தோல் மருத்துவரும், பாலியல் பரவும் நோய்களில் நிபுணர். அவரது தாயார் ஆலிஸ் ப்ரீட்மேன், வியன்னாவின் பல் மருத்துவர். பெற்றோர் இருவரும் யூதர்கள். அவரது பெற்றோரின் விவாகரத்தைத் தொடர்ந்து, டிஜெராசியும் அவரது தாயும் வியன்னாவுக்குச் சென்றனர். 14 வயது வரை, சிக்மண்ட் பிராய்ட் பல ஆண்டுகளுக்கு முன்பு கலந்துகொண்ட அதே ரியல்ஜிம்னாசியத்தில் கலந்து கொண்டார். அவர் தனது தந்தையுடன் பல்கேரியாவில் கோடைகாலத்தை கழித்தார். 

ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் உள்ள பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் படித்தார். தமது பதினாறாம் வயதில் அமெரிக்காவுக்கு வந்தார். மிசூரியில் உள்ள கல்லூரியில் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார் ஒக்கியோவில் உள்ள கென்யான் கல்லூரியில் படித்தார். காரல் ஜெராசி தலைமையில் ஒரு ஆய்வுக் குழு 1951ல் நாரத் ரின்ரோன் என்னும் மூலக் கூறு ஒன்றைக் கண்டுபிடித்தது. இதனை கண்டுபிடித்தபோது அவருக்கு அகவை 28. அம்மூலக் கூறு அடிப்படையாகக் கொண்டு குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான மாத்திரைகளை காரல் ஜெராசி உருவாக்கினார். தம் வாழ்க்கை முழுதும் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டார். வேதியியல் நிறுவனங்களிலும் மருந்துகள் உருவாக்கும் குழுமங்களிலும் காரல் ஜெராசி வேலை செய்தார்.


உலகப் புகழ் பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக் கழக வேதியியல் துறையின் மதிப்புமிகு பேராசிரியராக இருந்தார் கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். 1200 ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் புதினங்கள், நாடகங்கள் ஆகியன படைத்துள்ளார். இவருடைய தன் வரலாறு 4 மடலங்களில் எழுதப் பட்டு வெளியாகியது. இவருடைய அருஞ்சாதனைகளைப் பாராட்டி பல அமைப்புகள் விருதுகள் இவருக்கு வழங்கின. அறிவியல் அறிஞர், நூலாசிரியர், புதின நாடக எழுத்தாளர், எனப் பன்முகம் கொண்டவர். கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய காரல் ஜெராசி ஜனவரி 30, 2015ல்  தனது 91வது அகவையில் கலிபோர்னியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...