Sunday, August 9, 2026

முசிறி புத்தக கண்காட்சியில் விண்வெளி விழிப்புணர்வு

முசிறி புத்தக கண்காட்சியில் விண்வெளி விழிப்புணர்வு




மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த நோக்கில் முசிறி கிளை நூலகம் மற்றும் காலம் அமைப்பு இணைந்து ஒரு வாரம் புத்தக கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.  இதில் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் இணைந்து வானவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவிகள் நிலவின் மாதிரி, கோளரங்க காட்சி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.





துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரன் கலந்து கொண்டு ஒரிகாமி மூலம் பல்வேறு வித்தியாசமான தொப்பி செய்வது, பறவை போன்ற பல்வேறு மாதிரிகலை செய்து காண்பிதார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள் , ஹைராஸ்கோப், குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டது.





சூரிய வடிகட்டி மூலம் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது  மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

No comments:

Post a Comment

த. பாதர்பேட்டை பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.

த. பாதர்பேட்டை  பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.   இன்று (29.08.2026)உப்பிலியபுரம் ஒன்றியம்,ஊ. ஒ. ந. நி. பள்ளி, த. பாதர்பேட்...