Saturday, August 29, 2020

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்-மத்திய அரசு.

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்-மத்திய அரசு.



கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நான்காம் கட்டமாக பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவித்து மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, மதரீதியான, அரசியல் நிகழ்வுகளுக்கு செப்.21ம் தேதி முதல் அனுமதி. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 100 பேர் வரை ஒன்று கூடி நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு 9 முதல் 12-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிகளுக்கு வரலாம். செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவிகித ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன், தொலைதூரக் கல்வி ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 50 சதவீதம் பேர் பணிக்கு வரலாம். அவர்கள் ஆன்லைன் கல்வி உள்ளிட்ட இதரப் பணிகளை மேற்கொள்ளலாம்.செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டம் மற்றும் பிஎச்டி படிப்பவர்கள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளுக்காக அனுமதிக்கப்படலாம். ஐடிஐ உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படலாம்.

 

செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்குகள் மற்றும் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், சினிமா தியேட்டர்கள், நீச்சல்குளங்கள் மற்றும் கூட்டம் கூடும் இடங்கள் அனைத்தும் செப்.30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது என்றும், கரோனா கட்டுப்பாடு பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு கட்டாயமாக நீட்டிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்றும், மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ-பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது எனவும்,  மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள்.

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள். சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது தெரியும். ஆனால், சிறு குச்ச...